Latest Updates
-
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
ஒருவாட்டி சிக்கன் 65-க்கு இந்த மாதிரி மசாலா சேர்த்து செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. மசாலாவும் பிரியாது..
Chicken 65 Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் சிக்கன் 65 பிரியர்களா? அடிக்கடி உங்கள் வீட்டில் சிக்கன் 65 செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே சுவையில் சிக்கன் 65 செய்து ருசித்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருவாட்டி இந்த பக்குவத்தில் மசாலா சேர்த்து செய்யுங்கள். டேஸ்ட் புதுமையாவும், மசாலா பிரியாமலும் இருக்கும்.
முக்கியமாக இப்படி ஒருவாட்டி சிக்கன் 65 செய்தால், பின் எப்போதும் இந்த மாதிரி தான் செய்வீர்கள். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும். தற்போது மழை அதிகம் பெய்வதால், நிச்சயம் அசைவம் சாப்பிட பலருக்கும் ஆசையாக இருக்கும். அப்படியான நேரத்தில் சிக்கன் வாங்கி வந்து, இப்படி சிக்கன் 65 செய்தால், மழைக்கு இதமாகவும் இருக்கும், வாய்க்கு ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு புது சுவையில் சிக்கன் 65 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் 65 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 1/2 கிலோ
* சீரகத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 3/4 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 5 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எள்ளு - 1 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
* எலுமிச்சை - 1
* தயிர் - 1 சிறிய கப்
* முட்டை - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 1 சிறிய கப்
* மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள், 3/4 டேபிள் ஸ்பூன் சோம்புத் தூள், 1/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா , 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்
தூள், 1 1/2 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 5 டேபிள் ஸ்பூன்
சோள மாவு, சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் எள்ளு விதைகள், சிறிது கசூரி மெத்தியை
எடுத்து கைகளால் நசுக்கி சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து, சிறிய அளவு
கப்பில் 1 கப் தயிரை எடுத்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 1 முட்டையை உடைத்து ஊற்றி, 1 கொத்து கறிவேப்பிலை,
சிறிது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து, சிறிய அளவு கப்பில் 1
கப் எண்ணெய் ஊற்றி கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் கழுவி வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து மசாலா
அனைத்தும் சிக்கனுடன் ஒன்று சேரும் வரை நன்கு பிரட்டி, மிளகுத் தூள்
சேர்த்து நன்கு பிசைந்து கிளறி விட வேண்டும்.
* பின் இந்த சிக்கனை ஒரு 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், மிதமான
தீயில் வைத்து, சிக்கன் துண்டுகளை சேர்த்து, நன்கு பொன்னிறமாக வேக
வைத்து இறக்கினால், சுவையான சிக்கன் 65 தயார்.



Click it and Unblock the Notifications