Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஊட்டி ஸ்பெஷல் காரசாரமான பச்சை மிளகாய் சிக்கன்.. எப்படி செய்யணும் தெரியுமா?
Ooty Special Pachamilagai Chicken Recipe In Tamil: விடுமுறை நாட்களில் காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், அப்போது நன்கு காரசாரமாக சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்கி சமைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதுவும் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால், அந்த சிக்கனைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று காரமாக சமைத்து சாப்பிடாமல், ஒருமுறை ஊட்டி ஸ்பெஷல் பச்சை மிளகாய் சிக்கனை செய்து சாப்பிடுங்கள்.
இந்த சிக்கனில் பச்சை மிளகாய் அதிகம் சேர்த்திருந்தாலும், நெய்யில் நன்கு வதக்கிவிடுவதால், காரம் அதிகம் தெரியாது, அதே சமயம் சுவை வேற லெவலில் இருக்கும். இந்த பச்சை மிளகாய் சிக்கனை ஒருமுறை செய்து சாப்பிடுங்கள், பின் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.

உங்களுக்கு இந்த ஊட்டி ஸ்பெஷல் பச்சை மிளகாய் சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஊட்டி ஸ்பெஷல் பச்சை மிளகாய் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 100 மிலி
* பூண்டு - 150 கிராம்
* பச்சை மிளகாய் - 150 கிராம் + 6
* சிக்கன் - 3/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோயா சாஸ் - 1/2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் இடி உரலில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு இடித்து, ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே உரலில் பூண்டு சேர்த்து நன்கு இடித்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி உருகியதும்,
தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை
போக 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 6 பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சிக்கனை கழுவி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர் வர ஆரம்பித்ததும், அதில் மஞ்சள் தூள்
சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* சிக்கன் வெந்ததும், அதில் சோயா சாஸ், எலுமிச்சை சாறு சேர்த்து
ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* அடுத்து சோள மாவை நீரை கரைத்து ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான ஊட்டி ஸ்பெஷல் பச்சை மிளகாய் சிக்கன்
தயார்.



Click it and Unblock the Notifications