Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, சூப்பரா இருக்கும் -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… பணமும் அதிர்ஷ்டமும் தேடி வரும், வீடும் ஜில்லுனு இருக்கும்! -
சாணக்கிய நீதி படி இந்த 4 வகை மனிதர்களை நம்பினால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? மணி பிளாண்ட் செடியை இந்த திசையில் வைத்தால் பணமழை கொட்டும்! -
12 ஆண்டுக்கு பின் குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 4 ராசிகள் -
கோதுமை தோசையும், பூண்டு கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு நீண்டகால ஆசை பலிக்கப்போகுதாம் -
சூரிய பெயர்ச்சியால் ஜூன் மாதத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாதம் உருவாகும் விஷகும்ப யோகத்தால் விபரீதமான பலன்களை அடையப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மட்டன் பிரியாணியை மிஞ்சும் கொத்தமல்லி பிரியாணி ரெசிபி - செஞ்சு பாருங்க, டக்கரா இருக்கும்
மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் வறுத்தரைச்ச சிக்கன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க!
Village Style Varutharacha Chicken Curry Recipe In Tamil: இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கன் தான் செய்யப் போகிறீர்களா? எப்போது சிக்கனை வாங்கினாலும் ஒரே மாதிரியான சுவையில் தான் சைடு டிஷ் செய்வீர்களா? சற்று வித்தியாசமான ருசியில் ஒரு சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் ஒருமுறை கிராமத்து ஸ்டைலில் வறுத்தரைச்ச சிக்கன் கறியை செய்யுங்கள். இந்த சிக்கன் கறி பூரி, சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சைடு டிஷ்ஷின் நிறமே சாப்பிட வேண்டுமென்று தோன்றும் வகையில் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த கிராமத்து ஸ்டைல் வறுத்தரைச்ச சிக்கன் கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் வறுத்தரைச்ச சிக்கன் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* வெங்காயம் - 3 (மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சிக்கன் - 1/2 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் மசாலா - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய் சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, கழுவி வைத்துள்ள
சிக்கனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு
வேக வைக்க வேண்டும்.
* அதற்குள் மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் துருவிய
தேங்காய், மல்லித் தூள், சிக்கன் மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்கு
வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வறுத்த தேங்காயை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த மசாலாவை சிக்கனுடன் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி,
நன்கு கிளறி விட்டு, 1/2 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி விட்டு, சிக்கனை
நன்கு 10 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான கிராமத்து ஸ்டைல்
வறுத்தரைச்ச சிக்கன் கறி தயார்.



Click it and Unblock the Notifications