Latest Updates
-
கருட புராணத்தின் படி இந்த 5 பழக்கங்களை உடனே கைவிடுங்க, இல்ல பண பிரச்சனை தலைவிரித்தாடும்! -
தமிழ் புத்தாண்டு நாளில் அழகா வெள்ளையா ஜொலிக்கணுமா? அப்ப இந்த உளுந்து ஃபேஸ் பேக்கை போடுங்க! -
சன்டே ஸ்பெஷல் பாலக் க்ரீன் சிக்கன் 65 - எப்படி செய்றது-ன்னு பாத்து மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க! -
நுங்கு உடல் சூட்டை குறைக்குமா? சர்க்கரை நோய், உடல் பருமன் உள்ளவர்கள் நுங்கு சாப்பிடலாமா? - டாக்டர் பதில்கள்! -
138 நாட்களுக்கு வக்ரமாகும் சனி பகவான்: இந்த 3 ராசிக்காரங்க நிறைய பணத்தை சம்பாதிப்பாங்களாம்! உங்க ராசி என்ன? -
மணமணக்கும் கிராமத்து ஸ்டைல் வறுத்தரைச்ச சிக்கன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
இன்றைய ராசிபலன் 12 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் தேடிவருமாம் -
வார ராசிபலன் (12 ஏப்ரல் 2026-18 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு கேட்ட வரம் கிடைக்குமாம் -
மணத்தக்காளி கீரையை இந்த மாதிரி சட்னி செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வாஸ்து படி வீட்டில் இந்த இடங்களில் கண்ணாடி மாட்டினால் உங்கள் செல்வம் பலமடங்கு பெருகுமாம்
Tamil New Year 2026 Rasi Palan: தமிழ் புத்தாண்டில் துலாம் முதல் மீனம் வரையிலான ராசிக்கு எப்படி இருக்கும்?
Tamil New Year 2026 Rasi Palan: தமிழ் புத்தாண்டான பராபவ வருடம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டில், ராஜாவாக குரு வருகிறார். குரு பகவானின் பயணம் இந்த தமிழ் புத்தாண்டில் மிதுன ராசியில் ஆரம்பித்து ஆனி மாதம் கடக ராசியில் இடப்பெயர்ச்சியாகிறது. புரட்டாசி மாதம் சிம்ம ராசிக்கு அதிசாரமாக பயணம் செய்கிறார் குரு பகவான்.
சனி பகவான் மீன ராசியில் ஆண்டு முழுவதும் இருக்கிறது. கும்ப ராசியில் பயணிக்கும் ராகு மார்கழி மாதத்தில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்யப்போகிறார். பராபவ வருடத்தில் சில மாதங்கள் கேதுவும் உச்சம் பெற்ற குருவும் இணைந்து பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

பராபவ வருடத்தில் மேஷ ராசியில் சூரியன் உச்சத்திலும் செவ்வாய் ஆட்சி பெற்றும் கூட்டணி அமைத்திருக்க குபேர ராஜயோகம் உருவாகிறது. இதன் மூலம் துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் பிறந்தவர்களுக்கு பராபவ ஆண்டு எப்படி இருக்கும் என்று ஜோதிடர் ஜெயலட்சுமி தமிழ் போல்ட் ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
துலாம்
பராபவ தமிழ் புத்தாண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான யோகத்தை தரப்போகிறது. திடீர் பண வருமானம் வரும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. பாக்ய ஸ்தான குருவின் பார்வையால் குதூகலமான மனநிலைக்கு மாறுவீர்கள்.
பத்தாம் வீட்டிற்கு வரப்போகும் குருவின் பயணத்தால் வேலையில் கவனம் தேவை. புரட்டாசி மாதத்திற்குப் பிறகு லாப வீட்டிற்கு வரப்போகும் குருவினால் திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது. ராகு கேதுவின் பயணம் திடீர் ஜாக்பாட் யோகத்தை தரப்போகிறது. பணம் பல வழிகளில் இருந்து வந்தும் பாக்கெட்டை நிரப்பும்.
வெளியூர் பயணங்கள் லாபத்தை கொடுக்கும். சனி பகவானின் பயணம் ருண ரோக சத்து ஸ்தானத்தில் இருப்பதால் எதிரிகளின் தொல்லை நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. பராபவ புத்தாண்டு திருமண யோகத்தையும், சுப காரியங்கள் நடைபெறக்கூடிய ஆண்டாக துலாம் ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது.
விருச்சிகம்
பராபவ தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசிக்கு இந்த ஆண்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் ஆண்டாக உள்ளது. குரு கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி உச்சம் பெற்று அமரப்போவதால் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. பாக்ய ஸ்தான குருவினால் பொருளாதார நிலை உயரப்போகிறது.
நினைத்த காரியம் கைகூடி வரும். புரட்டாசி மாதத்தில் குரு பகவான் பத்தாம் வீட்டிற்கு வருவதால் பதவியில் கவனம் தேவை.பணம் விசயத்தில் கவனம் தேவை. தேவையற்ற செலவுகளைக் குறைப்பது அவசியம். பணம் கொடுக்கல்-வாங்கலில் கவனமாக இருக்கவும்.
வேலை செய்யும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் தாமதமாகக் கிடைக்கலாம், ஆனால் விடாமுயற்சி வெற்றியை கொடுக்கும். ராகு கேதுவின் பயணம் உங்களுக்கு பண வருமானத்தை அதிகரிக்கும். சனி பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பூர்வீக சொத்துக்கள் லாபத்தை கொடுக்கும்.
தனுசு
பராபவ தமிழ் புத்தாண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு வெற்றியை தரக்கூடிய ஏற்றமிகு ஆண்டாக அமையப்போகிறது. நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியங்கள் சுபமாக முடியப்போகிறது. குருவின் நேரடி பார்வையால் பண வருமானம் அதிகரிக்கும். ஆண்டு முழுவதும் குரு பகவானின் பயணம் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாகவே உள்ளது.
வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். ஆண்டு முழுவதும் வருமானம் சீராகவே இருக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய வேலைக்கும் முயற்சி செய்யலதொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலம். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பிள்ளைகளின் வாழ்க்கையில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ராகு கேதுவின் பயணம் சாதகமான இடத்தில் உள்ளது. குடும்ப ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகப்போகும் ராகுவினால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வாக்க கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். அஷ்டம ஸ்தானத்திற்கு வரப்போகும் கேது கஷ்டங்களை போக்குவார்.
மகரம்
பராபவ தமிழ் புத்தாண்டில் மகர ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது. காரணம் குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். உச்சம் பெற்ற குருபகவானின் பார்வையால் சுப காரியங்கள் மளமளவென நடைபெறும். பணம் பல வழிகளில் இருந்தும் வந்து பாக்கெட்டை நிரப்பும்.
குரு பகவான் புரட்டாசி மாதத்தில் அதிசாரமாக எட்டாம் வீட்டிற்கு செல்வதால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. ராகு கேதுவின் பயணம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.
வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். ஏழரை சனி முடிவுக்கு வந்து விட்டதால் உங்களுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும். சவால்களை எல்லாம் சாதனைகளாக மாற்றுவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிரிந்து சென்ற உறவுகள் இனி ஒன்றாக இணையும் காலம் கனிந்துள்ளது.
கும்பம்
பராபவ தமிழ் புத்தாண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. குரு பகவானின் பயணமும் பார்வையும் ஆண்டு முழுவதும் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. நினைத்த காரியம் கைகூடி வரும். திருமணம் சுப காரிய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். பண வருமானம் அதிகமாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம்.
திட்டமிட்டு செலவு செய்வது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு வரும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். ஜென்ம ராசியில் பயணம் செய்யும் ராகு இடப்பெயர்ச்சியாகி 12ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார். 7ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் குடும்பத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்துவார் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
மார்கழி மாதத்திற்குப் பிறகு கேதுவின் இடப்பெயர்ச்சியால் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். பாத சனி உங்களுக்கு சில சங்கடங்களைத் தருவார் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
மீனம்
பராபவ தமிழ் புத்தாண்டு மீன ராசியில் பிறந்தவர்களுக்கு வெற்றிகளை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. குரு பகவானின் பயணமும் பார்வையும் உங்களுக்கு சாதகமாக உள்ளது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆனி மாதத்தில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவானின் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகப் போகிறது.
பிள்ளைகள் வாழ்க்கையில் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் நடைபெறும். சொந்த தொழில் செய்பவர்களுக்கும், பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ராகு கேதுவின் பயணம் உங்களுக்கு பொருளாதார நிலையில் ஏற்றத்தை தரப்போகிறது. லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் ராகு உங்களின் தொழில் முதலீடுகளில் இரட்டிப்பு லாபத்தை தரப்போகிறார்.
கேது பகவான் உங்களின் மன அமைதியை அதிகரிப்பார். உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நனவாகும் காலமாக அமைந்துள்ளது. ஏழரை சனியில் ஜென்ம சனி காலமாக இருந்தாலும் குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் சனிபகவானால் ஏற்படும் சங்கடங்கள் தீரப்போகிறது. ஆண்டு முழுவதும் சுகமும் சந்தோஷமும் நிறைந்த ஆண்டாக உங்களுக்கு அமையப்போகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

















