Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனிபகவான்-புதன் மீன ராசியில் இணைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
அட்டகாசமான கொத்தமல்லி மாங்காய் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
முகம் எப்பவும் எண்ணெய் வழிந்து அசிங்கமாக இருக்கா? அப்ப இந்த நேச்சுரல் கிளென்சரை யூஸ் பண்ணுங்க! -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டிலேயே எந்த தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் தெரியுமா? -
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள் -
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் இந்த கிராமத்திற்கு செல்ல யாருக்கும் அனுமதி இல்லையாம் - இங்க அப்படி என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Tamil New Year 2026 Rasi Palan: தமிழ் புத்தாண்டில் குபேர ராஜயோகம் - திடீர் ஜாக்பாட் யாருக்கு தெரியுமா?
Tamil New Year 2026 Rasi Palan: தமிழ் புத்தாண்டான பராபவ வருடம் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி பிறக்கவுள்ளது. இந்த புத்தாண்டில், ராஜாவாக குரு வருகிறார். குரு பகவானின் பயணம் இந்த தமிழ் புத்தாண்டில் மிதுன ராசியில் ஆரம்பித்து ஆனி மாதம் கடக ராசியில் இடப்பெயர்ச்சியாகிறது. புரட்டாசி மாதம் சிம்ம ராசிக்கு அதிசாரமாக பயணம் செய்கிறார் குரு பகவான்.
சனி பகவான் மீன ராசியில் ஆண்டு முழுவதும் இருக்கிறது. கும்ப ராசியில் பயணிக்கும் ராகு மார்கழி மாதத்தில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். கேது சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி பயணம் செய்யப்போகிறார். பராபவ வருடத்தில் சில மாதங்கள் கேதுவும் உச்சம் பெற்ற குருவும் இணைந்து பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது.

தமிழ் புத்தாண்டான பராபவ வருடத்தில் மேஷ ராசியில் சூரியன் உச்சத்திலும் செவ்வாய் ஆட்சி பெற்றும் கூட்டணி அமைத்திருக்க குபேர ராஜயோகம் உருவாகிறது. இதன் மூலம் மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளில் பிறந்தவர்களில் யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று ஜோதிடர் ஜெயலட்சுமி தமிழ் போல்ட் ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
மேஷம்
உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் இந்த பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறப்பதால், உங்கள் கனவுகள் யாவும் நிறைவேறும். பணம் பல வழிகளிலும் வந்து பாக்கெட்டை நிரப்பும். குரு பகவான் பயணம் ஆண்டு முழுவதும் சாதகமாக உள்ளது.
சொந்த பந்தங்களால் நிறைய பாடங்களை கற்றுக்கொள்வீர்கள்.பெண்கள் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். வாகன யோகம் தேடி வரப்போகிறது. ராகு கேதுவினால் வெளிநாட்டு பயணம் தேடி வரப்போகிறது. கடன் தொல்லைகள் நீங்கும்.
அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. சனி பகவான் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால், பதவி உயர்வும், சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. மொத்தத்தில் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிற ஆண்டாக மேஷ ராசிக்காரர்களுக்கு பராபவ புத்தாண்டு அமைந்துள்ளது.
ரிஷபம்
தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் ரிஷப ராசியின் தொழில் ஸ்தானத்தில் சந்திரன் பயணம் செய்கிறார். அதிகார பதவிகள் தேடி வரப்போகிறது. மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக ரிஷப ராசிக்காரர்களுக்கு அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை பிறக்கும்.
குருவின் பயணம் சாதகமாக உள்ளது. திருமணம் முடிந்த தம்பதியினருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த குழந்தை வரம் கிடைக்கப் போகிறது. மனைவி வழி உறவினர்களால் விரயச் செலவுகள் அதிகரிக்கும்.
ராகு கேதுவின் பயணத்தால் மார்கழி மாதத்திற்குப் பிறகு குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சனிபகவானால் தொட்டதெல்லாம் பொன்னாகக் கூடிய காலமாக அமைந்துள்ளது. வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்
பராபவ ஆண்டு முழுவதும் அற்புதமான யோகங்கள் கிடைக்கப் போகிறது. ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். விலகி சென்றவர்கள் நெருங்கி வருவார்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி மன மகிழ்ச்சி அதிகரிக்கப்போகிறது. பண வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
ஜென்ம குருவால் சில மாதங்கள் குழப்பங்கள் உண்டாகும். ஆனி மாதத்திற்குப் பிறகு குருவின் இடப்பெயர்ச்சியால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பணம் பல வழிகளில் இருந்தும் வந்து சேரும்.
புரட்டாசி மாதத்திற்குப் பிறகு புதிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. ராகு கேதுவினால் வீடு கட்டும் யோகம் தேடி வரப்போகிறது. மார்கழி மாதத்திற்குப் பிறகு பண விஷயங்களில் பொறுமையை கையாளவும். சனி பகவானின் பயணம் சாதகமாக உள்ளது.
கடகம்
கனவுகள் நனவாகக் கூடிய ஆண்டாக கடக ராசிக்காரர்களுக்கு பராபவ தமிழ் புத்தாண்டு இருக்கப் போகிறது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். புது வண்டி வாகனம் வாங்குவீர்கள்.
உங்கள் ராசியில் வந்து உச்சம் பெற்று அமர்ந்து பயணம் செய்யும் குரு பகவானால் பண வருமானம் அதிகரிக்கும். ஜென்ம குரு டென்சனை அதிகரிப்பார் என்பதால் கவனம் தேவை. புரட்டாசி மாதத்திற்குப் பிறகு இரண்டாம் வீட்டிற்கு பயணம் செய்யப்போகும் அதிசார குரு பெயர்ச்சியால் பண வருமானம் அதிகரிக்கும்.
ராகு கேதுவினால் குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பாக்ய சனியால் மன பதற்றம் விலகும். அக்கம் பக்கத்தாருடன் அளவாகப் பழகுங்கள். நீண்ட நாட்களாக நினைத்திருந்த நல்ல காரியம் ஒன்று நிறைவேறும். வேலை செய்யும் இடத்தில் தடைப்பட்டிருந்த சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதமின்றி கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திரன் 7வது வீட்டில் இருக்கும் போது தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகிறது. குருபகவானின் லாப ஸ்தான பயணம் வேலை, தொழிலில் லாபத்தை கொடுக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
ஆன்மீக பயணம் செல்வீர்கள். குலதெய்வ வழிபாடு குடும்பத்தில் நன்மையை கொடுக்கும். புரட்டாசி மாதத்தில் குரு பகவான் ஜென்ம ராசியில் அமர்ந்து பயணம் செய்யப்போவதால் மன குழப்பம் அதிகரிக்கும். திடீர் பண வருமானம் வரும்.
ராகு கேதுவின் பயணம் குடும்பத்தில் குதூகலத்தை கொடுக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாவது வீட்டில் பயணம் செய்வதால், திடீர் மருத்துவ செலவுகள் வந்து போகும்.
சித்தர்கள் ஆலயத்திற்கு சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கக் கூடிய ஆண்டாக சிம்ம ராசிக்காரர்களுக்கு அமைந்துள்ளது. தொழில் வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. வேலையில் புரமோசனும், சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது.
கன்னி
பராபவ தமிழ் புத்தாண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது. கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் கூடும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சுப செலவுகள் அதிகரிக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் வீடு களைகட்டும். குரு பகவான் லாப வீட்டிற்கு வரப்போவதால் வருமானம் பல வழிகளில் இருந்தும் வரும். திருமணம் சுப காரியம் நடைபெறப் போவதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
ராகு கேதுவின் பயணத்தால் ஆன்மீக பயணத்தில் அக்கறை காட்டுவீர்கள். வெளிநாட்டில் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு விசா கிடைக்கும். லாப ராகுவும், பூர்வ புண்ணிய கேதுவும் புது சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.
கண்டச்சனி காலம் என்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. பெண்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையப் போகிறது. வேலைப்பளு காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

















