Latest Updates
-
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது!
கருட புராணத்தின் படி இந்த 5 பழக்கங்களை உடனே கைவிடுங்க, இல்ல பண பிரச்சனை தலைவிரித்தாடும்!
Garuda Purana: சனாதன தர்மத்தில் சுமார் 18 புராணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கருட புராணம். இந்த கருட புராணமானது விஷ்ணு பகவானுக்கும், கருடனுக்கும் இடையிலான உரையாடலை விவரிக்கிறது. இந்த புராணமானது இறப்பு, மறுபிறப்பு தொடர்பான விஷயங்களை விரிவாக விளக்குகிறது.
பொதுவாக நாம் அனைவருமே பிரச்சனை இல்லாத நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையையே வாழ விரும்புகிறோம். ஆனால் நமது பழக்கங்கள் நம் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியுமா? அதுவும் நம்மை அறியாமல் நாம் செய்யும் செய்யும் ஒருசில விஷயங்கள் நம் வாழ்க்கையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கருட புராணத்தில் ஒருவரது ஏழ்மைக்கும், வறுமைக்கும் வழிவகுக்கும் 5 பழக்கங்கள் குறித்து விஷ்ணு பகவான் குறிப்பிட்டுள்ளார். இந்த பழக்கங்களை கொண்டிருந்தால், அது வாழ்வில் மீள முடியாத வகையில் பண பிரச்சனைகளை சந்திக்க வைத்துவிடுமாம். இப்போது கருட புராணத்தின் படி, ஒருவர் உடனே கைவிட வேண்டிய அந்த பழக்கங்கள் எவையென்பதைக் காண்போம்.
1. குளிக்காமல் அழுக்கு ஆடையில் இருப்பது
ஒருவரது வாழ்வில் பணப்பிரச்சனை வரக்கூடாதெனில், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் ஆசி கிடைக்க வேண்டும். லட்சுமி தேவி சுத்தத்தை விரும்புபவள். சுத்தமான இடத்தில் வசிப்பவள். யார் ஒருவர் குளிக்காமலும், அழுக்கு ஆடைகளுடனும் இருக்கிறார்களோ, அவர்கள் மீது லட்சுமி தேதி கோபம் கொண்டு, பணப் பிரச்சனையை சந்திக்க வைப்பார். எனவே தினமும் காலையில் எழுந்ததும் குளித்து விட்டு, சுத்தமான ஆடைகளை அணியுங்கள். இதனால் லட்சுமி தேவியின் பரிபூர்ண ஆசீர்வாதம் கிடைத்து, பணம் எப்போதும் கையில் நிலைத்திருக்கும்.
2. சுத்தமில்லாத சமையலறை
கருட புராணத்தின் படி, ஒவ்வொரு நாள் இரவும் தூங்கும் முன் சமையலறையில் உள்ள அழுக்கு பாத்திரங்களை கழுவி விட்டு, சமையலறையை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் இருந்தால், சனியின் எதிர்மறை தாக்கத்திற்கு ஆளாகக்கூடும். இதன் மூலம் வறுமை உங்கள் வீட்டு கதவைத் தட்டும். எனவே எப்போதும் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை கழுவிவிடுங்கள்.
3. பிறர் செல்வத்தை அபகரிப்பது
மற்றவர்களின் பணத்தையோ, செல்வத்தையோ அல்லது சொத்தையோ அபகரித்தவர்கள் எப்போதும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. சாஸ்திரங்களின் படி, இப்படி மற்றவர்கள் செல்வத்தை சுருட்ட நினைப்பது ஒரு பாவச் செயலாக கருதப்படுகிறது. எப்போதும் கடின உழைப்பின் மூலம் மட்டுமே பணத்தை சம்பாதிக்க வேண்டுமே தவிர பிறரை ஏமாற்றி சம்பாதிக்கும் பணம் நிலைத்திருக்காது மற்றும் இழப்பை மேலும் அதிகரிக்கும்.
4. தாமதமாக எழுவது
சிலர் காலையில் மிகவும் தாமதமாக எழும் பழக்கம் இருக்கும். இப்படிப்பட்ட பழக்கத்தை கொண்டவர்களை சோம்பேறிகளாக கருட புராணம் கூறுகிறது. விஷ்ணு பகவானின் கூற்றுப்படி, இப்படியான பழக்கத்தைக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் முன்னேற்றம் அடைவதில்லை. அதுவும் எவ்வளவு முயற்சி செய்தாலும், அவர்களிடம் பணம் ஒருபோதும் சேராமல் பணப் பற்றாக்குறை இருந்தவாறு இருக்கும்.
5. புறம் பேசுவது
ஒருவர் இல்லாத நேரத்தில் அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் தவறாக புறம் பேசுபவர்களை லட்சுமி தேவிக்கு பிடிக்காது. இத்தகையவர்கள் மீது லட்சுமி தேவி கோபமாகவே இருப்பதாக கருட புராணம் கூறுகிறது. மேலும் காரணமின்றி மற்றவர்கள் மீது எரிந்து விழுவதும், கோபப்படுவதும் கூட வறுமைக்கு வழிவகுக்கும்.
எனவே நண்பர்களே! உங்களிடம் மேலே கொடுக்கப்பட்டுள்ள பழக்கங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை உடனே கைவிடுங்கள். இதனால் உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல மாற்றத்தை உடனே காண்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

