For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உயிரையும் துட்சமென தூக்கி எறிந்து தூக்கை எதிர்கொண்ட பகத் சிங் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!!

இந்தியாவின் சுதந்திரத்திற்காக தனது 23வது அகவையில் உயிரையும் துட்சமென தூக்கியெறிந்து தூக்கை எதிர்கொண்ட தியாக வீரன் பகத் சிங்.

|

இந்திய விடுதலைக்காக தனது வீரியமான தைரியத்தை முன்னிறுத்தி ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியவர் தான் பகத் சிங். இவரது வீரத்தை கண்டு ஆங்கிலேயர் நடுநடுங்கிப் போனார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவின் சுதந்திரத்திற்காக தனது 23வது அகவையில் உயிரையும் துட்சமென தூக்கியெறிந்து தூக்கை எதிர்கொண்ட தியாக வீரன் பகத் சிங்.

கார்கில் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்!!!

பைசலாபாத்தில் 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார் பகத் சிங். தனது சிறு வயது முதலே ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு துரத்தி இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தர வேண்டும் என்பதை தனது கனவாக வைத்திருந்தவர் பகத் சிங். சுக்தேவ், ராஜ் குரு என இவருக்கு இரண்டு உயிர் தோழர்கள் இருந்தனர்.

ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய கொடூர சம்பவத்திற்கு வித்திட்ட ஹிட்லர் பற்றிய அரிய விஷயங்கள்!

உண்மையிலேயே இவர்கள் பகத் சிங்கின் உயிர் தோழர்கள் தான். பகத் சிங்குடன் உணவையும், தேச உணர்வையும் மட்டுமல்லாது அவரது தூக்கு கயிறையும் பகிர்ந்துக் கொண்டவர்கள் இந்த உயர்ந்த மனமுடைய நண்பர்கள். இந்தியாவின் வீர மகன் என போற்றப்படும் பகத் சிங் 1931 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் நாள் தனது 23 வது வயதில் வீர மரணம் அடைந்தார். அவரை பற்றிய நீங்கள் அறிந்திராத சில தகவல்கள் உங்களுக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜாலியன்வாலா பாக்

ஜாலியன்வாலா பாக்

தனது 12 வது வயதில் ஜாலியன்வாலா பாக் கொடூர நிகழ்ச்சி நடந்த போது தனது பள்ளியில் இருந்து ஓடி வந்த பகத் சிங் அங்கு குருதியுடன் சிதறி இருந்த களிமண்ணை ஒரு பாட்டிலில் எடுத்து வைத்து தினமும் வணங்கி வந்தார்.

லாகூர் தேசிய கல்லூரி

லாகூர் தேசிய கல்லூரி

லாகூர் தேசிய கல்லூரியில் தனது கல்லூரி படிப்பை படித்தார் பகத் சிங். இங்கு படித்துக் கொண்டிருந்த போது தான் தேசிய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுப்படுத்தி கொண்டார் மற்றும் நவ்ஜன் பாரத் சபா என்னும் இளைஞர் அமைப்பில் சேர்ந்தார் பகத் சிங்

ஐந்து மொழி பேசும் வல்லவர்

ஐந்து மொழி பேசும் வல்லவர்

மிகவும் புத்திக்கூர்மை கொண்ட பகத் சிங் இந்திய மொழிகளை தவிர வெளிநாட்டு மொழிகளில் ஆங்கிலம், பிரெஞ்சு, அரபிக், போலிஷ், ஸ்வீடிஷ் போன்ற ஐந்து மொழிகளில் பேசும் திறன் கொண்டிருந்தார்.

சிறுவயது கனவு

சிறுவயது கனவு

இந்தியாவில் மிகவும் சந்தோசமாக வாழ வேண்டும் என எண்ணியவர் பகத் சிங். அதற்கு தடையாய் இருந்த ஆங்கிலேயரை விரட்டி அடிக்க வேண்டும், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தர வேண்டும் என மிகவும் ஆசைப்பட்டவர் பகத் சிங்.

வீட்டை விட்டு ஓடிய பகத் சிங்

வீட்டை விட்டு ஓடிய பகத் சிங்

அன்றைய இந்தியாவில் சிறு வயதிலேயே திருமணம் முடிக்கும் வழக்கம் இருந்தது. பகத் சிங்கின் பெற்றோர் அவருக்கு திருமணம் ஏற்பாடு செய்த போது, அதில் விருப்பம் இல்லாத பகத் சிங் கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டி ஓடி விட்டார்.

இன்குலாப் ஜிந்தாபாத்

இன்குலாப் ஜிந்தாபாத்

இந்திய விடுதலையில் மிகவும் பிரபலமாக எல்லா திசையிலும் எதிரொலித்த "இன்குலாப் ஜிந்தாபாத்" எனும் வார்த்தைகளை ஆங்கிலேய மத்திய சட்டசபையில் வெடிகுண்டு வீசிவிட்டு ஆக்ரோஷமாய் கூவி தொடக்கி வைத்தவர் பகத் சிங். பின்னாளில் இது விடுதலை போராட்டத்தில் மிகவும் பிரபலமான வாசகமாக இடம் பெற்றது.

எழுத்தாளர்

எழுத்தாளர்

விடுதலை போரட்டத்திற்கு முன்பே சில பத்திரிக்கைகளுக்காக எழுதி வந்தார் பகத் சிங். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். இரண்டாவது முறை இவர் சிறை சென்ற போது மரணம் நிச்சயம் ஆனது தெரிந்த பின்பு டைரி எழுத தொடங்கினார். அதில் தனது விருப்பங்கள், திட்டங்கள் குறித்து நிறைய எழுதினார்.

பகத் சிங்கின் புத்தகம்

பகத் சிங்கின் புத்தகம்

சிறையில் இருந்த போது தான் தூக்கிலிடுவதற்கு முன்பு "நான் ஏன் நாத்திகன்" என்ற புத்தகத்தை எழுதினார் பகத் சிங். அவர் இறந்த பின்பு இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.

நடிகன்

நடிகன்

தனது கல்லூரி காலத்தில் இருந்தே நிறைய நாடகங்களில் நடித்தவர் பகத் சிங். ரானா பிரதாப், சமராத் சந்திரகுப்தா மற்றும் பாரத துர்தேஷா போன்ற நாடகங்கள் இவரது நடிப்பிற்கு புகழ் சேர்த்தன.

காந்தியின் கொள்கைகள்

காந்தியின் கொள்கைகள்

காந்தியின் கொள்கைகளுடன் ஒத்துபோகாதவர் பகத் சிங். காந்தியும் பகத் சிங்கின் நடவடிக்கைகளை எதிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாத்திகன்

நாத்திகன்

சிறு வயதில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டிருந்த பகத் சிங். பின்னாளில் நாத்திகனாக தன்னை நிலைநிறுத்தி கொண்டார். இவர் லெனின், மார்க்ஸ் போன்றவர்கள் மீது கொண்டிருந்த பற்று இவர் நாத்திகனாக உருவெடுக்க ஒரு காரணமாக இருந்தது.

லெனின் மீதான பிரியம்

லெனின் மீதான பிரியம்

லெனின் மீது மட்டற்ற பிரியம் கொண்டிருந்தார் பகத் சிங். அவரது கொள்கைகள் இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. சோசியலிசம் மீது இருவருக்கும் இருந்த ஒருசேர்ந்த பார்வை. பகத் சிங்கிற்கு லெனின் மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட காரணம்.

வன்முறையை விரும்பாதவர்

வன்முறையை விரும்பாதவர்

இயல்பில் வன்முறையை விரும்பாதவர் பகத் சிங். அவரது சுற்றுசூழலும், சூழ்நிலையும் அவரை வன்முறையில் ஈடுபட வைத்தது. வன்முறையின் காரணமாய் உயிர் பலி ஏற்படும் என அதை தவிர்க்க கூறியவர் பகத். அதனால் தான் சட்டசபையின் மீது எறிந்த குண்டுகளை கூட தரம் குறைவான முறையில் தயாரிக்க கூறினார். இதனால் சுற்றி இருக்கும் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் பகத்

ஆமிர்கான்

ஆமிர்கான்

ஹிந்தி நடிகர் ஆமிர்கானின் மூதாதையர் பகத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது குடும்பமே நடிப்பில் மிகவும் தீவரமாக ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் என கூறப்படுகிறது. இதன் காரணமாக தான் "ரங் தே பசந்தி" என்ற திரைப்படத்தை எடுக்க ஆமிர்கான் விரும்பியதாகவும் கூறப்படுகிறது.

பகத்தின் இறுதி வார்த்தைகள்

பகத்தின் இறுதி வார்த்தைகள்

"உங்களால் எனது உயிரை மட்டும் தான் கொலை செய்ய இயலுமே தவிர, எனது கருத்துகளை அல்ல, உங்களால் எனது உடலை தான் சிதைக்க முடியும், எனது ஆத்மாவை அல்ல" என்று முழக்கமிட்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unknown Facts about Shaheed Bhagat Singh

You should know about the facts about shaheed bhagat singh, who dreamed and fought against British for India's freedom and dedicated his whole life for it.
Desktop Bottom Promotion