For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்குத் தெரியாத உலக வரலாற்றில் ஏற்பட்ட மிகக்கொடிய நிலநடுக்கங்கள்!

By Maha
|

பூகம்பம் என்பது பூமிக்கு அடியில் அழுத்தம் அதிகமாகி, அடியில் உள்ள தட்டுக்கள் நகர்வதால் ஏற்படும் ஓர் அதிர்வு என்று அறிவியல் கூறுகிறது. இந்த தட்டுகளுக்கு அடியில் பாறைக்குழம்புகள் உள்ளது. இந்த குழம்புகள் பூமியின் சுழற்சியினால் நகர்வதால், தட்டுகள் ஒன்றோடொன்று மோதுவதோடு, நகரவும் செய்கிறது.

பொதுவாக இந்த தட்டுக்கள் நகரும் போது ஏற்படும் அதிர்வு 3 ரிக்டர் அளவாக இருந்தால் எதுவும் தெரியாது. ஆனால் அதுவே 7 ரிக்டருக்கு அதிகமாக இருந்தால் அதனால் மிகப்பெரிய சேதம் ஏற்படக்கூடும். சில நேரங்களில் இந்த பூகம்பங்கள் நிலச்சரிவையும், எரிமலை வெடிப்புக்களையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் கடற்கரை அருகில் உள்ள பகுதிகளில்கடுமையான பூகம்பங்களால் சுனாமிகளும் வரும்.

நம் வரலாற்றில் 9.0 ரிக்டருக்கும் அதிகமான பூகம்பங்கள் வந்து, அதனால் சுனாமிகள் எழுந்து, பல உயிர்களை அழித்து, மிகுந்த பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இங்கு அப்படி நம் வரலாற்றில் வந்த மிகக்கொடிய நிலநடுக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அஸ்ஸாம்-திபெத், 1950 - 8.6 ரிக்டர் அளவு

அஸ்ஸாம்-திபெத், 1950 - 8.6 ரிக்டர் அளவு

1950 ஆம் ஆண்டு அஸ்ஸாம்-திபெத் எல்லையில் 8.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 1,500 பேர் உயிரிழிந்தனர். மேலும் இந்த பூகம்பத்தினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 70 கிராமங்கள் அழிந்தன. அதுமட்டுமின்றி, இந்த நிலச்சரிவுகளால் நதிகள் தடைப்பட்டன. இறுதியில் அந்த நதிகள் அந்த தடையை உடைத்து பெருவெள்ளமாக உருவெடுத்து வந்ததில், பல கிராமங்கள் நீரில் மூழ்கி, சுமார் 532 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு சுமத்ரா, இந்தோனேஷியா, 2005 - 8.6 ரிக்டர் அளவு

வடக்கு சுமத்ரா, இந்தோனேஷியா, 2005 - 8.6 ரிக்டர் அளவு

2005 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் ஏற்பட்ட 8.6 ரிக்டர் அளவிலான பூம்பத்தால் 1,000-த்திற்கும் அதிகமானோர் உயிரிழிந்தனர். மேலும் நூற்றிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

அலாஸ்கா, 1965, 8.7 ரிக்டர் அளவு

அலாஸ்கா, 1965, 8.7 ரிக்டர் அளவு

வெறும் 7 வருடங்களாக மாநிலமாக இருந்த அலாஸ்காவில் 1965 ஆம் ஆண்டு 8.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தால், 30 அடி அளவுள்ள சுனாமி தூண்டப்பட்டது.

எக்குவடோர், 1906, 8.8 ரிக்டர் அளவு

எக்குவடோர், 1906, 8.8 ரிக்டர் அளவு

1906 ஆம் ஆண்டு எக்குவடோர் மற்றும் கொலம்பியா கடற்கரைப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் 8.8 ரிக்டர் அளவில் பூகம்பம் ஒன்று வந்ததோடு, வலுவான சுனாமி உருவாகி 500-1,500 பேர் உயிரிழிந்தனர். இந்த சுனாமி மத்திய அமெரிக்கா கடற்கரைப் பகுதி வரை பரவி, சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஜப்பான் வரையிலும் நீண்டது.

சிலி, 2010, 8.8 ரிக்டர் அளவு

சிலி, 2010, 8.8 ரிக்டர் அளவு

2010 ஆம் ஆண்டு சிலி கடற்கரை பகுதியில் 8.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 500 பேர் உயிரிழிந்தோடு, 800,000 பேர் இடம் பெயர்ந்தனர் மற்றும் இந்த அளவு பூகம்பத்தினால் ஏற்பட்ட சுனாமியால் மத்திய சிலி தாக்கப்பட்டது. இதனால் 1.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டதோடு, மொத்தமாக $30 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பை சந்தித்தது.

கம்சாத்கா தீபகற்பம், ரஷ்யா, 1952 - 9.0 ரிக்டர் அளவு

கம்சாத்கா தீபகற்பம், ரஷ்யா, 1952 - 9.0 ரிக்டர் அளவு

உலகிலேயே முதன்முறையாக 1952 ஆம் ஆண்டு கம்சாத்காவில் கிழக்கு கடற்கரைப் பகுதியில் 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் வந்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 43 அடி சுனாமி பேரலை உருவானது.

ஒன்சூ, ஜப்பான், 2011, 9.0 ரிக்டர் அளவு

ஒன்சூ, ஜப்பான், 2011, 9.0 ரிக்டர் அளவு

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் உள்ள ஒன்சூ கிழக்கு கடற்கரை பகுதியில் 9.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தால் சுனாமி தூண்டப்பட்டு, சுமார் 29,000 பேர் உயிரிழந்ததோடு, அங்குள்ள சில அணு உலைகள் சேதமடைந்தன.

வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரை, 2004, 9.1 ரிக்டர் அளவு

வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரை, 2004, 9.1 ரிக்டர் அளவு

உலகின் மூன்றாவது பயங்கரமான நிலநடுக்கம் என்றால் அது வடக்கு சுமத்ராவின் மேற்கு கடற்கரை பகுதியில் 2004 ஆம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டது தான். இந்த பூகம்பத்தின் மூலம் ஏற்பட்ட சுனாமியால் 227,898 பேர் உயிரிழந்தனர் மற்றும் காணாமல் போயினர் மற்றும் இறந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது. மேலும் இதனால் 1.7 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர்.

பிரின்ஸ் வில்லியம் சவுண்ட், அலாஸ்கா, 1964, 9.2 ரிக்டர் அளவு

பிரின்ஸ் வில்லியம் சவுண்ட், அலாஸ்கா, 1964, 9.2 ரிக்டர் அளவு

இது தான் உலகில் ஏற்பட்ட இரண்டாவது மிகப்பெரிய பயங்கரமான நிலநடுக்கம். இது 20964 ஆம் ஆண்டு அலாஸ்காவில் உள்ள பிரின்ஸ் வில்லியம் சவுண்ட்டில் 9.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சொல்ல முடியாத அளவில் பேரிழப்பு ஏற்பட்டது. சுமார் 75 மைல் தொலைவில் கடும் சேதம் ஏற்பட்டது என்றால் பாருங்கள்.

சிலி, 1960, 9.5 ரிக்டர் அளவு

சிலி, 1960, 9.5 ரிக்டர் அளவு

சிலியில் 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட 9.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தான் உலகிலேயே மிகவும் பயங்கரமானது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 1,655 மக்கள் இறந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் தங்களின் வீடுகளை இழந்தனர். மேலும் தெற்கு சிலி $550 மில்லியன் டாலர் சேதத்தை சந்தித்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Ten Biggest Earthquakes in History

Here we countdown the top 10 biggest recorded earthquakes in the world. Read on to know more.
Desktop Bottom Promotion