Latest Updates
-
தமிழ்நாட்டில் வெளியாட்கள் யாருமே செல்ல முடியாத அதிசய கிராமம் - அப்படி இங்க என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்! -
சூப்பரான செட்டிநாடு பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
வரகரிசி கஞ்சியும், முட்டை ஆம்லெட்டும் - எப்படி செய்றது-ன்னு பாத்து இந்த காம்போவை ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 10 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 17 முதல் சனி பகவான் இந்த 3 ராசிக்காரர்களை சோதிக்க போகிறார்! ரெடியா இருங்க -
வாஸ்துப்படி, நைட் தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்யுங்க.. செல்வம் பெருகும்!
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க!
Hair Care Tips In Tamil: தற்போது நிறைய பேர் உடல் பருமனுக்கு அடுத்தப்படியாக கவலைப்படுவது என்றால் அது அவர்களின் தலைமுடியை நினைத்து தான். ஏனெனில் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுகளாலும், தலைமுடிக்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்காததாலும், முடி உதிர்வு பிரச்சனையை அதிகம் சந்திக்கிறார்கள். இப்படி தலைமுடி அதிகம் உதிர்ந்து பலருக்கு தலைமுடி எலிவால் போன்றும், வழுக்கையாகியும் உள்ளது.
உங்களுக்கும் தலைமுடி அதிகம் உதிர்கிறதா? உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க எத்தனையோ எண்ணெய்களை வாங்கி தலைமுடிக்கு பயன்படுத்தி உள்ளீர்களா? இருப்பினும் தலைமுடி உதிர்வது நிற்கவில்லையா? உங்கள் முடியின் வலிமையை அதிகரித்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா?

அப்படியானால் முதலில் தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள். அதுவும் நட்ஸ்கள், விதைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து வந்தால், தலைமுடி மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
சரும நிபுணரான ஸ்வேதா ராகுல் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் சில சிறந்த விதைகள் குறித்தும், அது எவ்வளவு உதவி புரிகிறது என்பதையும் பகிர்ந்துள்ளார். அந்த விதைகள் எவையென்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. ஆளி விதைகள்
ஆளி விதைகளானது ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அதற்கு இந்த விதைகளை வறுத்து பொடி செய்து, ஸ்மூத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது நீரில் கலந்தும் உட்கொள்ளலாம் என்று கூறினார். எனவே தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், ஆளி விதைகளை உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள்.
2. பூசணி விதைகள்
பூசணி விதைகளில் ஜிங்க், இரும்புச்சத்து, மக்னீசியம் போன்றவை வளமான அளவில் உள்ளன. ஆனால் இதில் கொஞ்சமாக ஆன்டி டிஎச்டி விளைவு உள்ளது. எனவே வழுக்கை தலையிலும் சில மாயங்களை புரியும். இந்த பூசணி விதைகளை பச்சையாகவோ அல்லது வறுத்தோ சாப்பிடலாம் என்று கூறினார். இதுவரை நீங்கள் பூசணிக்காய் வாங்கி அதன் விதைகளை தூக்கி எறிந்து வந்தால், இனிமேல் அந்த தவறை செய்யாமல், அதை உலர வைத்து உட்கொள்ளுங்கள்.
3. சியா விதைகள்
"சியா விதைகளின் மிதமான அளவில் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து உள்ளன. எனவே தலைமுடி வளர இந்த விதைகளையும் தினசரி உணவில் சேர்த்து வரலாம்" என்று டாக்டர் கூறினார். முக்கியமாக இந்த விதைகளில் முடியின் வளர்ச்சிக்கும், மயிர்கால்களின் வலிமைக்கும், ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தேவையான ஜிங்க், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற அத்தியாவசிய சத்துக்களும் உள்ளன. அதற்கு இந்த விதைகளை நீரில் ஊறு வைத்து ஜூஸ் உடன் சேர்த்து சாப்பிடலாம்.
4. சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் செலினியம் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன. இவை ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, முடியின் வளர்ச்சியை தூண்டும். எனவே இந்த சூரியகாந்தி விதைகளை ஸ்நாக்ஸ் வேளையில் சிறிது எடுத்துக் கொள்வது நல்லது என்று டாக்டர் கூறினார்.
5. வெந்தயம்
வெந்தயத்தை இரவு தூங்கும் போது நீரில் ஊற வைத்து உட்கொள்ளும் போது, அதன் மூலம் புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் நிக்கோட்டினிக் அமிலம் போன்றவை கிடைத்து, தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று டாக்டர் கூறினார். மேலும் கொளுத்தும் கோடையில் வெந்தயத்தை ஊற வைத்து உட்கொள்ளும் போது உடல் சூடும் குறையும்.
"மேலே கொடுக்கப்பட்டுள்ள விதைகளை தினமும் சிறிது உட்கொள்ளலாம் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் உட்கொள்ளலாம். அதுவும் ஒரு நாளைக்கு 1- 1 1/2 டீஸ்பூன் வரை எடுத்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, தலைமுடியின் வளர்ச்சியும் அதிகரிப்பதைக் காணலாம்" என்று டாக்டர் கூறினார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications













