Latest Updates
-
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
வெறும் வயிற்றில் இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
அக்டோபர் 17-ல் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
பூரிக்கு இப்படி உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க... -
அக்டோபர் 04 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் -
சனி-சூரியன் எதிரெதிர் நிலையில் அமர்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா இந்த கேரளா ஸ்டைல் சிக்கன் மப்பாஸ் செஞ்சு பாருங்க - சுருக்குனு செமையா இருக்கும்
தலைமுடி அதிகமா கொட்டுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.!
Hair Care Tips In Tamil: உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? உங்கள் தலைமுடி வலிமையிழந்து இருப்பது போன்று உள்ளதா? பொதுவாக ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு தலைமுடி உதிர்வது சாதாரணம் தான். ஆனால் எப்போது ஒருவருக்கு தலையில் கையை வைத்தாலே கொத்து கொத்தாக முடி கையோடு வருகிறதோ, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், சற்றும் தாமதிக்காமல் உடனே தலைமுடிக்கு கூடுதல் பராமரிப்பை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தலைமுடி முழுமையாக கொட்டி, அடர்த்தி குறைந்து, எலிவால் போன்று மாறிவிடும்.
உங்கள் தலைமுடி உதிர்வைக் குறைத்து, முடியின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் அதற்கு ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு நேச்சுரல் ஹேர் பேக்குகளை போடுங்கள். இந்த ஹேர் பேக்குகள் முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துவதோடு, முடி உதிர்வதைக் குறைக்கும். கீழே தலைமுடி உதிர்வை குறைத்து, முடியை வலிமையாக்கும் சில ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உங்களுக்கு ஏற்றதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

1. வாழைப்பழம் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியை வலிமையாக்குவதோடு, தலைமுடி அடர்த்தியாக்கும்.
2. வெந்தயம் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் ஊற வைத்த வெந்தயத்தை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க் தலைமுடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தி, முடி உதிர்வைத் தடுக்கும்.
3. கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முடியின் வேர்க்கால்களில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
4. தயிர் மற்றும் எலுமிச்சை ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 கப் தயிரை எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதை தலைமுடியில் தடவி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஹேர் பேக் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்தும்.
5. வெங்காயம் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் வெங்காய சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


