Latest Updates
-
டிபன் கடை ஸ்டைல் கருப்பு உளுந்து சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 07 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு விபத்தும் நடக்க வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
Aadi Month Rasipalan 2026: ஆடி மாதத்தில் கோடிகளை குவிக்கப் போகும் 5 ராசிக்காரங்க இவங்க தான்! -
ஜூலை 16-ல் சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றியையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
நியூமராலஜி படி இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் தோற்றம் மட்டுமல்ல ஆன்மாவும் அழகானதாக இருக்குமாம் -
உங்க பல் மஞ்சளா இருக்கா? வெள்ளையாக்க இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
1/2 கப் கடலைப்பருப்பு இருந்தா டக்குனு இந்த குருமாவை செய்யுங்க - இட்லி, தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
வாழைப்பழமும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
AC ரிமோட்டில் நீங்கள் செய்யும் இந்த தவறு உங்க கரண்ட் பில்லை தாறுமாறா அதிகரிக்குமாம் - கரெக்ட்டா யூஸ் பண்ணுங்க
தலை முடி கொட்டுவதற்கான 10 காரணங்கள்!!!
அழகு என்பது நம் ஒவ்வொருவரின் வாழ்கையிலும் ஒரு அங்கமாகவே திகழ்கின்றன. ஒவ்வொருவருக்கும் தங்களின் உடலில் முகம், கண், மூக்கு, காது, வாய், பற்கள், கைகள், கால்கள் இப்படி எதாவது ஒன்றோ அல்லது பல அங்கங்களோ அழகுடையதாக இருக்கும். இது மற்றவர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்து விடுவதால், நம் உடல் அழகை பேணி காப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் பலவாகும்.
சரி.. உடல் அங்கங்கள் மட்டுமே நமக்கு அழகு சேர்க்கிறதா? இல்லை என்பதே இதற்கு பதிலாக இருக்கும். ஏனெனில் முடி அல்லது கூந்தலுக்கு முக்கியத்தவம் அளிக்காதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? சொல்லப்போனால், உடல் அழகிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட கூந்தல் அல்லது முடி அழகிற்கு ஒரு படி மேலே தான் முக்கியத்தவம் தருகிறோம். தினம் தினம் அதை பராமரிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் ஒன்றா இரண்டா. இருப்பினும் கூந்தல் பிரச்சனைகள் அதிகம் தான் இருக்கின்றன.
ஆனால் அதற்கு சரியான காரணம் மட்டும் தெரியாது. அதிலும் தலைமுடி பாதிக்கப்பட்டால், தலை வாரும் போது சீப்பில் கருமை நிறத்தில், கொத்துக்கொத்தாக முடியை காண முடியும். இவ்வாறு ஏற்படுவது தலையில் வழுக்கை வருவதற்கான அறிகுறியாகும். ஆகவே இத்தகைய மிகுதியான முடி கொட்டுதலுக்கான காரணத்தை அறிய முடியவில்லையெனில், கீழ்கண்ட பட்டியலில் முடி கொட்டுதல் மற்றும் தலையில் வழுக்கை விழுவதற்கான 10 காரணங்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மன அழுத்தம்
வேகம் மற்றும் பரப்பரப்பான வாழ்க்கை முறை கொண்டவர்களுக்கு அதிகப்படியான வலிமையானது குறைந்து மன அழுத்தத்தின் அளவானது அதிகரித்துவிடும். மேலும் அதிக மக்களுக்கு தலை முடி கொட்டுவது மன அழுத்தத்தால் என்றும் சந்தேகம் எழுகிறது. இருப்பினும் வழுக்கை விழுவதற்கு மன அழுத்தம் மட்டுமே காரணம் கிடையாது.

பரம்பரை
பரம்பரை பரம்பரையாக ஏற்படும் வழுக்கையை பொறுத்த வரை, பெரிதாக செய்ய ஒன்றும் இல்லை. முடி கொட்டுவதை குறைக்க மட்டுமே முடியும். அதற்கு ஒழுங்கான உணவு மற்றும் வாழ்க்கை முறையை கடைப்பிடித்து வந்தால், முடியை ஆரோக்கியமாக வைத்து, அதன் உதிர்தலைத் தடுக்கலாம்.

முடியை அழகுப்படுத்தும் சாதனங்கள்
தலைக்கு குளித்த பின் ஈர முடியை காய வைக்க ஹேர் ட்ரையர் பயன்படுத்தினால், சுலபமாகவும் மற்றும் வேகமாகவும் அதை செய்து முடிக்க முடியும். ஆனால் பல ஆய்வுகளின் படி தினசரி முடியை இப்படி காய வைப்பது முடி கொட்டுவதற்கு வழிவகுக்கும். முடியை நேராக்குதல் மற்றும் சுருட்டுதல் ஆகிய அழகுச் சிகிச்சைகள் அடிக்கடி செய்தால், முடி கொட்டப்படுவது உறுதி.

ஹார்மோன் மாற்றங்கள்
ஹார்மோன் அளவின் ஏற்ற இறக்கங்கள், முக்கியமாக மசக்கை மற்றும் குழந்தை பெற்றெடுத்த நேரங்களில், முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். தைராய்டு சமமின்மை, மாதவிடாய் நிற்கும் காலம் மற்றும் பிற ஹார்மோன் சம்பந்தப்பட்ட குறைபாடுகளினாலும் முடி கொட்டுதல் ஏற்படும்.

ரசாயனப் பொருட்களின் அதிகப்படியான பயன்பாடு
இக்காலத்தில் ஷாம்பூக்கள், கண்டிஷனர்கள் மற்றும் தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்களில் கூட பல வகையான ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதுவே முடியை பல வகைகளில் சீரழிக்கின்றது. இன்றைய காலக்கட்டத்தில் நாம் பயன்படுத்தும் முக்கால்வாசி அழகு சாதனங்களில் ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருப்பதால், நம் மயிர்க்கால்கள் வலிமையிழந்து, முடி நுனிகள் பாழாகி, முடி கழிந்து, பிற கூந்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஜங்க் உணவு
ஜங்க் உணவை நம்பி வாழ்பவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதால், தலையில் வழுக்கை விழ இதுவும் ஒரு காரணமாகிறது. சாப்பிடும் முறையில் ஒழுங்கின்மையை கடைபிடிப்பவர்களுக்கு நிச்சயம் அதிகப்படியான முடி கொட்டுதல் இருக்கும்.

கடுமையான வானிலை
அன்றாடம் வீட்டிலும், அலுவகத்திலும் பயன்படுத்தும் ஏசி வசதியாக இருக்கலாம். ஆனால் உடலைப் போல் அல்ல, நமது தலை முடி. எளிதில் முறிகின்ற மற்றும் சிதைவு அடையக் கூடியது தான் முடி. அப்பேற்பட்டது ஏசி பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மண்டல மாறுதல்களால் எளிதில் பாதிக்கப்பட்டுவிடும். அந்த சூழலில் முடியை அடிக்கடி நல்ல நிலையில் பராமரிக்க வேண்டும்.

பாலினம்
முடி கொட்டுவதும் வழுக்கை விழுவதும் ஆணுக்கும் பெண்ணுக்கும் நடந்தாலும், அது நடக்கும் விதம் மாறுபடுகிறது. பெண்களுக்கோ முடி கொட்டுவது தலையை சுற்றி சீரான முறையில் இருக்கும். ஆனால் ஆண்களுக்கோ, குறிப்பிடத்தக்க படிவமாக முடி கழிதல் இருக்கும். தன்னுடல் தாக்குமை நிலைகள் ஆண்களுக்கே அதிகமாக நடப்பதால் வழுக்கை விழுவதும் பெரும்பாலும் அவர்களுக்கே.

தூக்கமின்மை
தூக்கமின்மை ஏற்படுவதை கண்கள் மற்றும் முடியை வைத்து கண்டறியலாம். தூக்கமின்மை, கட்டுப்படாத்தூக்கம் மற்றும் பிற தூக்க ஒழுங்கின்மைகள் நம் முடியின் ஆரோக்கியத்தை பாதித்து, ஒரு கட்டத்தில் வழுக்கையையும் ஏற்படுத்திவிடுன்றன.

மருந்து உட்கொள்ளுதல் மற்றும் சிகிச்சைகள்
வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒன்றான, விபத்துகள் ஏற்படுவதால் மன வலியும் உடல் வலியும் அதிகமாக ஏற்படும். அதற்காக நாம் எடுக்கும் சிகிச்சைகளும், மருந்து உட்கொள்ளுதலும் முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கப்போவது உறுதி. அதிகமாக மருந்து உட்கொள்ளுதல் (ஹீமோதெரபி போல்) முடி கொட்டுவதற்கும், வழுக்கை விழுவதற்கும் காரணமாகிறது.



Click it and Unblock the Notifications