Latest Updates
-
பாபா வங்கா கணிப்பு படி 2026 முதல் 2030 வரை உலகில் என்னென்ன மோசமான சம்பவங்கள் நடக்கப்போகுது தெரியுமா? -
செவ்வாயால் உருவாகும் சக்திவாய்ந்த ருச்சக யோகம்: மே மாதம் இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டபோகுது -
2 வெள்ளரிக்காயும், 1 கப் ரவையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போறாங்களாம் -
கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 8 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
வாஸ்துப்படி, ஃப்ரிட்ஜ்ஜின் மேல் இந்த பொருட்களை ஒருபோதும் வெக்காதீங்க.. இல்ல பிரச்சனை அதிகரிக்கும்.. -
Malai Ice Cream: கொளுத்துற வெயிலுக்கு வெறும் 4 பொருளை வெச்சு குளுகுளு-ன்னு இப்படி ஐஸ்க்ரீம் செய்யுங்க.. -
வெயிலால் உங்க கை கருப்பா மாறுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
1 கப் தயிரும், 1 குடைமிளகாயும் இருந்தா.. மதியம் இப்படி குழம்பு வையுங்க.. சாதத்துக்கு அள்ளும்..
தலைமுடி உதிர்வதை தடுக்கணுமா? சாதம் வடித்த நீரை இப்படி யூஸ் பண்ணுங்க.. முடி கொட்றது உடனே நின்னுடும்...
Hair Fall Remedies In Tamil: இன்று ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வது. ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட அளவு தலைமுடி உதிர்வது என்பது சாதாரணம் தான். ஆனால் அந்த அளவை மீறி தலைமுடி உதிரும் போது தான், ஒருவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.
ஏனெனில் தலைமுடி ஒருவரது அழகை மேம்படுத்தி காட்ட உதவுகிறது. இந்த அழகு பாழாகும் போது, அது ஒருவரது தன்னம்பிக்கையை பாதித்து, மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. இந்நிலையில் தலைமுடியை பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுவும் தற்போதைய மாசடைந்த சுற்றுச்சூழலால் தலையில் அழுக்குகள் அதிகம் தேங்கி, மயிர்கால்கள் வலுவிழந்து உதிர்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தலைமுடியின் ஆரோக்கியத்தையும், மயிர்கால்களின் வலிமையையும் அதிகரிக்க உதவும் பொருட்களைக் கொண்டு பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டியுள்ளது. தலைமுடி உதிர்வதைத் தடுக்க ஏராளமான பொருட்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவற்றில் உள்ள கெமிக்கல்களால் மயிர்கால்கள் இன்னும் தான் சேதமடையும். எனவே முடிந்தவரை இயற்கை பொருட்களைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்புக்களை கொடுங்கள்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் ஏராளமான பொருட்கள் நம் வீட்டில் இருந்தாலும், தினமும் சமைக்கும் சாதம் வடித்த நீர் தலைமுடி உதிர்வதை உடனே நிறுத்தும் என்பது தெரியுமா? ஆம், சாதம் வடித்த நீரைக் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பைக் கொடுத்து வந்தால், ஸ்கால்ப் ஆரோக்கியமாக இருப்பதோடு, மயிர்கால்களும் வலிமையடைந்து, முடி உதிர்வது நிற்கும். இப்போது தலைமுடி உதிர்வது உடனே குறைய சாதம் வடித்த நீரை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து காண்போம்.
* நீங்கள் வடித்த சாதத்தை சாப்பிடுவீர்களானால், சாதம் வடிகட்டும் போது, அந்த நீரை ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்த நீரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன.
* பின் அந்த நீரை குளிர வைக்க வேண்டும். இன்னும் சிறப்பான பலனைப் பெற அந்த நீரை அறை வெப்பநிலையில் 24 மணிநேரம் நொதிக்க வைக்க வேண்டும். இப்படி நொதிக்க வைக்கப்பட்ட நீரில் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் பண்புகள் இன்னும் அதிகமாக இருக்கும்.
* அதன் பின் அந்த நீரை ஸ்கால்ப்பில் படும்படி தடவ வேண்டும். அதுவும் அந்த நீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றியோ அல்லது பஞ்சுருண்டையில் நனைத்தோ, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் ஸ்கால்ப்பில் அதிகரிக்கும்.
* தலையில் தடவி மசாஜ் செய்த பின், 15-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைக்கும் போது, சாதம் வடித்த நீரில் உள்ள சத்துக்கள் மயிர்கால்களில் ஊடுருவி வலுவாக்கும். வேண்டுமானால் தலைய்ல ஷவர் கேப்பை அணிந்து கொள்ளலாம்.
* 15-30 நிமிடங்கள் ஊறிய பின், தலைமுடியை வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். அப்படி அலசும் போது ஷாம்பு எதையும் பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால், எந்த பலனும் கிடைக்காமல் போய்விடும்.
* சாதம் வடித்த நீரை இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தி வந்தால் சிறப்பான பலன் கிடைக்கும். அதற்காக 2 முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால் முடியில் புரோட்டீன் அதிகரித்து, பின் முடி வறண்டு போகும்.
* தலைமுடி நல்ல நறுமணத்துடன் இருக்க சாதம் வடித்த நீரில் சில துளிகள் லாவெண்டர், ரோஸ்மேரி, புதினா போன்ற அத்தியாவசிய நறுமண எண்ணெய்களை ஊற்றி கலந்து பயன்படுத்துங்கள்.
சாதம் வடித்த நீர் எப்படி தலைமுடி உதிர்வதைத் தடுக்கிறது?
சாதம் வடித்த நீரில் இனோசிடோல் என்னும் கார்போஹைட்ரேட் உள்ளது. இது தலைமுடியை வலுவாக்கும், முடியின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் முடி உடைதடிலத் தடுக்கும். முக்கியமாக தலைமுடி உதிர்வதை உடனே நிறுத்துகிறது. மேலும் இந்நீர் ஸ்கால்ப்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி புரிந்து, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











