Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உங்க தலைமுடி ஒல்லியா எலிவால் மாதிரி இருக்கா? அப்ப இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க..
Hair Care Tips In Tamil: உலகில் தலைமுடி உதிர்வால் அவதிப்படுவோர் ஏராளம். பொதுவாக தலைமுடி உதிர்வது என்பது சாதாரணம் தான். தினமும் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவில் தலைமுடி உதிரத் தான் செய்யும். இதற்கெல்லாம் கவலைப்பட தேவையில்லை. ஆனால் எப்போது ஒருவருக்கு கொத்து கொத்தாக, தலையில் கையை வைக்கும் போதெல்லாம் முடி கையோடு வருகிறதோ, அப்போது உடனே அதை கவனிக்க வேண்டும்.
ஏனெனில் இப்படி தலைமுடி உதிர்ந்தால், அது முடி பலவீனமாக இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால், பின் தலைமுடி ஒல்லியாகி எலிவால் போன்று மாறிவிடும். உங்களின் நிலைமையும் இப்படி தானா? அடர்த்தியாக இருந்த உங்களின் தலைமுடி தற்போது ஒல்லியாகிவிட்டதா?

அப்படியானால் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எண்ணெய்களால் உடனே பராமரிப்பு கொடுக்கத் தொடங்குங்கள். இப்படி கொடுக்கும் போது தலைமுடி ஆரோக்கியமாவதோடு, அதன் வளர்ச்சி அதிகரித்து, அடர்த்தியும் அதிகமாகும். கீழே தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் ஒருசில எண்ணெய்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த எண்ணெய்களைக் கொண்டு பராமரித்து கொடுத்து வந்தால், தலைமுடியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
1. அர்கன் எண்ணெய்
அர்கன் எண்ணெயில் வைட்டமின் ஈ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை சேதமடைந்த மயிர்கால்களை சரிசெய்வதோடு, முடியின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகின்றன. மேலும் இது தலைமுடியை வலுப்படுத்தும், முடி உடைவதைத் தடுக்கும் மற்றும் தலைமுடிக்கு இயற்கை பொலிவைத் தரும். இந்த எண்ணெய் வறண்ட முடி அல்லது சுருட்டை முடி உள்ளவர்களுக்கு ஏற்றது.
அதற்கு இந்த எண்ணெயை இரவு தூங்கும் முன் 5-10 துளிகள் எடுத்து, ஸ்கால்ப்பில் நேரடியாக தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசலாம். இப்படி வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்தி வர, தலைமுடியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
2. ரோஸ்மேரி ஆயில்
ரோஸ்மேரி ஆயில் நல்ல மணம் கொண்ட மற்றும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்ட உதவும் அற்புதமான எண்ணெய். இந்த எண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்தும் போது, அது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஸ்கால்ப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அதற்கு 5 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயுடன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, பின் மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
3. பிரிங்கராஜ் ஆயில்
பிரிங்கராஜ் ஆயில் ஒரு மூலிகை எண்ணெய். இது மயிர்கால்களுக்கு புத்துயிர் அளிப்பதோடு, புதிய முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைமுடி மெலிவதைக் குறைக்கும் மற்றும் நரைமுடியைத் தடுக்கும். இந்த எண்ணெயை தினசரி பயன்படுத்தி வந்தால், அது முடியின் அடர்த்தியை அதிகரிப்பதோடு, முடியை பளபளவென்றும் வைத்துக் கொள்ளும்.
4. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் மயிர்கால்களில் ஆழமாக ஊடுருவி, புரோட்டீன் இழப்பைக் குறைப்பதோடு, முடி உடைவதைத் தடுக்கும். அதுவும் இந்த எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் ஸ்கால்ப்பிற்கு ஊட்டமளித்து, மயிர்கால்களை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இந்த தேங்காய் எண்ணெய் வறண்ட மற்றும் சேதமடைந்த முடியைக் கொண்டவர்களுக்கு ஏற்றது. குறிப்பாக பொடுகு தொல்லை உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
அதற்கு தேங்காய் எண்ணெயை சூடேற்றி தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த முடி ஆரோக்கியமாக இருக்கும்.
5. விளக்கெண்ணெய்
விளக்கெண்ணெய் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் ரிசினோலியிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளன. இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு, மயிர்கால்களை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, அதன் அடர்த்தியையும் அதிகரிக்கிறது. அதற்கு விளக்கெண்ணெயை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
