Latest Updates
-
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
பொடுகு தொல்லை அதிகமா இருக்கா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்குகளை அடிக்கடி போடுங்க...
Hair Care Tips In Tamil: குளிர்காலம் வந்தாலே நிறைய பேர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் பொடுகு. இந்த பொடுகு பிரச்சனை இருந்தால் தலைமுடி அதிகமாக உதிரும். இந்த பொடுகு பிரச்சனையை சந்திக்கும் பல செய்யும் ஒரு தவறு, தலையில் எண்ணெய் வைப்பது தான். பொடுகு இருக்கும் சமயத்தில் இப்படி எண்ணெய் வைக்கும் போது, பொடுகு இன்னும் அதிகமாகத் தான் செய்யும். சரி, இந்த பொடுகு தொல்லைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என்று கேட்கலாம்.
தலையில் பொடுகு இருந்தால், நம் வீட்டு சமையலறையில் உள்ள மருத்துவ பண்புகள் நிறைந்த ஒருசில பொருட்களை ஹேர் பேக் போடுவதன் மூலம், பொடுகு கட்டுப்படுவது மட்டுமின்றி, உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு, அழற்சி போன்றவையும் சரியாகும். கீழே பொடுகு தொல்லையில் இருந்து விடுவிக்கும் சில நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. தயிர், தேன் மற்றும் எலுமிச்சை மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1/2 கப் தயிரை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப்பில் மற்றும் முடி முழுவதும் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தவைமுடியை அலச வேண்டும்.
2. க்ரீன் டீ, புதினா எண்ணெய் மற்றும் வினிகர் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 1 கப் க்ரீன் டீயுடன், 2-3 துளிகள் புதினா எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் வெள்ளை வினிகரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் தலைமுடியை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஸ்கால்ப்பில் படும்படி தலையில் ஊற்றி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
3. செம்பருத்தி மற்றும் வெந்தயம் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை 1 கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் ஊற வைத்த வெந்தயத்தை சேர்த்து, அத்துடன் 10-12 செம்பருத்தி இலைகள் மற்றும் 1/2 கப் தயிர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
4. வாழைப்பழம், தேன், எலுமிச்சை மற்றும் ஆலிவ் ஆயில்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த 2 வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொக்ளள வேண்டும்.
* பின்பு அதில் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
5. முட்டை மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்
* இந்த ஹேர் மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 கப் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் படும்படி நன்கு தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications