Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உங்க முடி ரொம்ப வறண்டு போயிருக்கா? அப்ப இந்த ஹேர் பேக்கை அடிக்கடி போடுங்க..
Winter Hair Packs In Tamil: தற்போது குளிர்காலம் என்பதால் காற்று மிகவும் குளிர்ச்சியாகவும், வறண்டும் இருக்கும். இப்படி வறண்ட குளிர் காற்றினால் சருமம் வறண்டு போவது மட்டுமல்லாமல், தலைமுடியும் அதிக வறட்சிக்கு உள்ளாகும். சருமம் வறண்டு போவதை தடுக்க மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்துவோம். ஆனால் தலைமுடி வறண்டு தேங்காய் நார் போன்று இருப்பதைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் சிறந்த வழி ஹேர் பேக்குகளைப் போடுவது தான்.
இப்படி குளிர்காலத்தில் அடிக்கடி முடி வறட்சியைப் போக்கும் ஹேர் பேக்குகளைப் போடுவதால் தலைமுடி வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் இருக்கும் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். கீழே குளிர்காலத்தில் முடி வறட்சியைத் தடுக்கும் சில ஹேர் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் உங்களுக்கானதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

1. வாழைப்பழம் மற்றும் தேன் ஹேர் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
2. தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் நற்பதமான தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, அரை மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
3. கற்றாழை ஜெல் மற்றும் பாதாம் எண்ணெய் ஹேர் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்து, அத்துடன் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
4. முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு தலைமுடியை நீரில் அலசி, ஈரமான தலைமுடியில் இந்த கலவையை தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
5. வெந்தயம் மற்றும் தயிர் ஹேர் பேக்
* இந்த ஹேர் பேக்கிற்கு வெந்தயத்தை நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் அந்த வெந்தயத்தை அரைத்து பேஸ்ட் செய்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications