Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி!
Aadi 2026 First Day Worship Method In Tamil: தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் மங்களகரமான மாதமாக கருதப்படுகிறது. முக்கியமாக இந்த மாதமானது அம்மன் மற்றும் குலதெய்வத்தை வழிபாடு செய்ய உகந்த மாதமாகும். அதுவும் இந்த ஆடி மாதத்தில் வரும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படும். இப்படியான ஆடி மாதம் இந்த ஆண்டு ஜூலை 17 ஆம் தேதி பிறக்கிறது.

முக்கியமாக அம்மனுக்கு உரிய தினமான வெள்ளிக்கிழமையில் பிறப்பதால், இந்த ஆண்டின் ஆடி மாதம் இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட ஆடி மாதத்தின் சிறப்புகள், முதல் நாளில் அம்மனை வீட்டிற்கு அழைப்பது எப்படி, பூஜைக்கான சிறந்த நேரம் என்ன, ஆடி முதல் நாளில் எந்த பொருட்களை வாங்குவது நல்லது என்பன குறித்து ஆன்மீக சொற்பொழிவாளரான தேச மங்கையர்க்கரசி அவர்கள் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஆடி மாதம் ஏன் சிறப்பானது?
ஒரு வீட்டில் காலை, மாலை என இரு வேளைகளிலும் கடவுள் வழிபாடு செய்வது என்பது இயல்பான ஒன்று. ஒருவேளை காலையில் வழிபாடு செய்ய முடியாவிட்டாலும், நிச்சயம் மாலை வேளையில் ஒரு தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள். இது இயற்கையாக எப்போதும் நடக்கும் செயல். அதேப் போல் தேவர்களுக்கு விடியற்காலை என்று சொல்லக்கூடிய மாதம் மார்கழி மாதம் எவ்வளவு சிறப்பானதோ, அதேப் போல் அவர்களுக்கு மாலை நேரமாக வரக்கூடிய இந்த ஆடி மாதமும் விஷேசமானது.
எனவே தான் இம்மாதத்தில் அனைத்து பலன்களையும் குறைவின்றி மக்களும் பெற வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஆடி மாதத்தில் இவ்வளவு வழிபாடுகளை செய்கின்றனர். இந்த ஆடி முதல் நாளில் அம்மனை வீட்டிற்கு எப்படி அழைப்பது என்பது குறித்தும் தேச மங்கையர்க்கரசி பகிர்ந்துள்ளார்.
ஆடி முதல் நாளில் அம்மனை எப்படி வீட்டிற்கு அழைப்பது?
ஆடி முதல் நாளில் அம்மனை வீட்டிற்குள் அழைக்க ஒரு பித்தளை சொம்பை எடுத்து, அதைச் சுற்றி மஞ்சள் பூசிய நூலை சுற்ற வேண்டும். பின் சொம்பில் மஞ்சள் குங்குமம் இட்டு, அதில் நீரை நிரப்பி, வேப்பிலையை வைக்க வேண்டும். சிலர் அரிசியை வைத்து வழிபடலாமா என்று கேட்கலாம். ஆனால் நீரை வைத்து வழிபாடு செய்வது தான் விஷேசமானது. அதுவும் நீரை நிரப்பி, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, 1 எலுமிச்சை மற்றும் 1 ரூபாய் நாணயத்தை போட்டு, இதை நம் குலதெய்வமாக, இஷ்ட தெய்வமாக, அம்மனாக பாவித்து, முதல் நாள் வழிபாட்டை தொடங்க வேண்டும். இந்த வழிபாட்டை தொடங்கும் போது மனதில் வேண்டுதலை வைத்து வழிபாட்டை தொடங்குங்கள்.
ஒருவேளை உங்களால் இப்படியெல்லாம் செய்ய நேரமில்லை, எளிமையான வழிபாட்டை விரும்பினால், அதிகாலையில் எழுந்து குளித்து முடித்த பின், 2 வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.
அம்மனை வழிபாடு செய்ய உகந்த நேரங்கள்
வீட்டில் கலசம் வைத்து வழிபாடு செய்பவர்கள், ஆடி முதல் நாளன்று கலசம் வைக்கவும், வழிபாடு செய்யவும் பிரம்மமுகூர்த்த நேரமான அதிகாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் செய்வது நல்லது. ஒருவேளை இந்த நேரத்தில் செய்ய முடியாவிட்டால், காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், அதன் பின் காலை 9.00 மணி முதல் 10.20 மணி வரையிலும் வழிபாடு செய்யலாம். உங்கள் வீட்டில் அம்மனுக்கு கூழ் காய்ச்சி உணவு படைத்து வழிபாடு செய்வீர்களானால், மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரையிலான நேரத்தில் வழிபாடு செய்யலாம். இப்படி வழிபாட்டின் போது பிரசாதமாக பொங்கல், பாயாசம், கும்மாயம் என ஏதாவது செய்து படைக்கலாம்.
ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் வெள்ளிக்கிழமையில் பிறப்பதால், மற்றொரு சிறப்பு வழிபாடு செய்வதும் விஷேசமான பலன்களைத் தரும். அது தான் ராகு கால வழிபாடு. வெள்ளிக்கிழமைகளில் காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் ராகு காலம் என்பதால், இக்காலத்தில் துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதுவும் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்றோ அல்லது வீட்டிலேயே கூட இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
ஒருவேளை எந்த ஒரு சிறப்பு வழிபாட்டையும் செய்ய முடியாதவர்கள், மாலை 6 மணிக்கு அம்பாளின் முன் ஒரு நெய் விளக்கேற்றி வைத்து, அபிராமி அந்தாதியின் 100 பாடல்களையும் பாராயணம் செய்யலாம். இப்படி அபிராமி அந்தாதியை பாராயணம் செய்வதன் மூலம், அம்மன் அற்புதமான பலன்களை அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.
ஆடி முதல் நாளில் என்ன வாங்க வேண்டும்?
ஆடி மாதம் மங்களகரமானதாக இருக்க வேண்டுமானால், காலையிலேயே மங்களகரமான பொருட்களான மஞ்சள், உப்பு ஆகியவற்றை வாங்கி வந்து, அம்பாளின் முன் வைத்து வழிபாடு செய்யுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications