Latest Updates
-
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் வெளியாட்கள் யாருமே செல்ல முடியாத அதிசய கிராமம் - அப்படி இங்க என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்! -
சூப்பரான செட்டிநாடு பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
வரகரிசி கஞ்சியும், முட்டை ஆம்லெட்டும் - எப்படி செய்றது-ன்னு பாத்து இந்த காம்போவை ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 10 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
சனி நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 17 முதல் சனி பகவான் இந்த 3 ராசிக்காரர்களை சோதிக்க போகிறார்! ரெடியா இருங்க
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க!
Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே நல்ல மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழவே விரும்புகிறோம். அதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்தும் வருகிறோம். ஆனால் இப்படி உழைத்தும் சிலருக்கு எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்காது. இதற்கு காரணம் அவர்கள் குடியிருக்கும் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு காரணமாக இருக்கலாம்.
ஆம், வீட்டில் வாஸ்து குறைபாடு இருந்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, அதன் விளைவாக தொழிலில் முன்னேற்றம் காண முடியாமல் சிரமப்படக்கூடும். அதுமட்டுமின்றி, பணம் தொடர்பான பிரச்சனைகளையும் அதிகம் சந்திக்க நேரிடும். மேலும் வீட்டில் வைத்திருக்கும் சில பொருட்கள் மற்றும் அவை இருக்கும் இடமும் ஒருவரது வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

நீங்கள் உங்கள் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்க வேண்டுமென்று விரும்பினால், வாஸ்து சாஸ்திரத்தின் படி 5 பொருட்களை வாங்கி வையுங்கள். இந்த பொருட்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து செல்வத்தையும், மகிழ்ச்சியையும் நிலைத்திருக்க செய்யும். இப்போது அந்த பொருட்கள் எவையென்பதைக் காண்போம்.
1. துளசி செடி
லட்சுமி தேவி குடியிருக்கும் ஒரு புனிதமான செடியாக துளசி செடி கருதப்படுகிறது. இப்படிப்பட்ட துளசி செடியை வீட்டின் முற்றத்திலோ அல்லது வடகிழக்கு திசையிலோ வைத்தால், அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். அதுவும் தினமும் துளசி செடியை வழிபடும் போது, குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிலைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் லட்சுமி தேவியின் அருளால் நிதி நிலையிலும் முன்னேற்றம் ஏற்படும்.
2. சங்கு
லட்சுமி தேவி வாசம் செய்யும் மற்றொரு பொருளாக சங்கு கருதப்படுகிறது. இந்த சங்கை வீட்டின் பூஜை அறையில் வைத்திருப்பது மிகவும் நல்லது. அதுவும் தினமும் மாலை வேளையில் இந்த சங்கை ஊதுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் சங்கில் இருந்து வெளிவரும் ஒலி, சூழலை தூய்மைப்படுத்தி, எதிர்மறை ஆற்றலை விரட்டும். இதன் மூலம் வீட்டு சூழல் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருக்கும்.
3. ஸ்வஸ்திக் சின்னம்
ஸ்வஸ்திக் சின்னம் என்பது அதிர்ஷ்டத்தின் சின்னமாகும். இந்த சின்னத்தை வீட்டின் நுழைவாயில் அல்லது வழிபாட்டு இடங்களில் வைத்திருப்பது நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கும். முக்கியமாக ஸ்வஸ்திக் சின்னம் புதிய தொடக்கங்களையும், முன்னேற்றத்தையும் குறிக்கிறது. எனவே வெற்றிகள் குவிய வேண்டுமானால், இந்த சின்னத்தை வீட்டில் வாங்கி வையுங்கள்.
4. நீர் நிரம்பிய கலசம்
பொதுவாக கலசம் ஒரு தூய்மையின் அடையாளமாக கருதப்படுகிறது. அதுவும் நீர் முழுவதுமாக நிரம்பியிருக்கும் கலசத்தை வீட்டின் வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பதால் வீட்டில் நீர் ஆற்றல் சமநிலைப்படுத்தப்படும். இதன் மூலம் மனத்தெளிவு, வெற்றி மற்றும் நிதி நிலையில் உயர்வு ஏற்படக்கூடும். அதுவும் அந்த கலசத்தில் சந்தனம், பூக்கள், கிராம்பு ஆகியவற்றை வைப்பதனால், நேர்மறை ஆற்றல் இரட்டிப்பாகும்.
5. பித்தளை அல்லது செம்பு மணிகள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, பித்தளை, செம்பு ஆகியவை மிகச்சிறந்த உலோகங்களாகும். இவற்றில் வீட்டின் பூஜை அறையில் ஒரு பித்தளை மணியை வாங்கி வைத்து, ஒவ்வொரு முறை இந்த மணியை ஒலிக்கும் போதும் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, எதிர்மறை ஆற்றலை அப்புறப்படுத்துகிறது. இதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியுடன் செல்வமும் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications













