Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது!
Tomato Thokku Recipe In Tamil: அடிக்கடி இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து முடிவெடுப்பது பெரிய வேலையாக உள்ளதா? உங்கள் வீட்டில் தக்காளி நிறைய உள்ளதா? அப்படியானால் அந்த தக்காளியைக் கொண்டு தொக்கு செய்யுங்கள். இந்த தொக்கு இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம். இந்த தொக்கை ஒருமுறை செய்து வைத்தால் 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த தக்காளி தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 250 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பூண்டு - 25 பல் (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 3-4 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து மிதமான தீயில் வைத்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து,
சுவைக்கேறப் உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறி, நன்கு
வதக்க வேண்டும்.
* தக்காளியில் இருந்து நீர் விட்டு வரும் போது, அதில் குழம்பு மிளகாய்
தூள் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கிளறி விட்டு, மீண்டும் மூடி வைத்து 10
நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும். அப்படி வேக
வைக்கும் போது அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், தொக்கில் இருந்து எண்ணெய்
பிரிந்து வந்திருக்கும். இந்நிலையில் 1/2 டீஸ்பூன் கரம் மசாலாவை
சேர்த்து கிளறி, மீண்டும் 2-3 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, தக்காளி தொக்குடன்
சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications
