Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
வீட்டுல துளசி செடி இருக்கா? அப்ப இந்த திசையில் வெக்காதீங்க.. இல்ல பண பிரச்சனையை சந்திப்பீங்க..
வாஸ்து சாஸ்திரத்தில் துளசி செடியை வீட்டில் வைக்க சில விதிகள் உள்ளன. அந்த விதிகளைப் பின்பற்றாமல் துளசி செடியை வீட்டில் வளர்த்தால், நற்பலனுக்கு பதிலாக கெடுபலன்களே அதிகம் கிடைக்கும்.
Vastu Tips For Tulsi Plant: மருத்துவ குணம் கொண்ட மிகவும் புனிதமாக செடி தான் துளசி. இந்த துளசி செடியானது தென்னிந்தியாவின் ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்து மதத்தின் படி, துளசி லட்சுமி தேவியின் வடிவமாக பார்க்கப்படும் ஒரு மரியாதைக்குரிய செடியாகும். வாஸ்துப்படி, இந்த புனிதமான செடியை வீட்டில் வளர்த்தால், சுற்றுச்சூழல் சுத்தமாவதோடு, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஆனால் வீட்டில் துளசியை செடியை வளர்த்தால், அந்த செடியை தவறாமல் காலை மற்றும் மாலை வேளையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

வாஸ்து சாஸ்திரத்தில் துளசி செடியை வீட்டில் வைக்க சில விதிகள் உள்ளன. அந்த விதிகளைப் பின்பற்றாமல் துளசி செடியை வீட்டில் வளர்த்தால், நற்பலனுக்கு பதிலாக கெடுபலன்களே அதிகம் கிடைக்கும். குறிப்பாக பண பிரச்சனை வீட்டில் அதிகரிக்கும். இப்போது வீட்டில் துளசி செடியை வைக்க வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள விதிகளைக் காண்போம்.

எந்த திசையில் துளசி செடியை வைக்க வேண்டும்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, துளசி செடியை வீட்டின் கிழக்கு திசையில் வைப்பது நல்லது. இல்லாவிட்டால், வீட்டின் வடக்கு அல்லது வட கிழக்கு திசையில் வைப்பது நல்லது. வாஸ்துப்படி வடக்கு திசையானது நீரின் திசையாகும். எனவே இந்த வடக்கு திசையில் துளசி செடியை வைத்து வளர்கும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்படும்.

துளசியின் அருகில் வைக்கக்கூடாத செடிகள்
துளசி செடியை வீட்டில் வைத்து வளர்த்து வந்தால், அந்த செடிக்கு அருகே முட்கள் நிறைந்த எந்த செடிகளையும் வைக்கக்கூடாது. மேலும் துளசி செடிக்கு அருகே காய்ந்த செடி எதுவும் இருக்கக்கூடாது. இல்லாவிட்டால் அது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, வீட்டில் உள்ளோரிடையே பிரச்சனைகளை அதிகரிக்கும். துளசி செடிக்கு அருகே பூச்செடிகளை வேண்டுமானால் வளர்க்கலாம்.

வாஸ்துப்படி செய்யக்கூடாதவைகள்
துளசி செடியை வீட்டில் வைப்பதாக இருந்தால், அந்த செடிக்கு அருகே துடைப்பம், காலணி, குப்பைத் தொட்டிகளை வைக்கக்கூடாது. மேலும் துளசி செடி உள்ள பகுதி எப்போதும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.

துளசியை தரையில் வைக்கக்கூடாது
துளசி செடி புனிதமான செடியாக கருதப்படுவதோடு வழிபடப்படுகிறது. அப்படிப்பட்ட துளசி செடிகளை நேரடியாக தரையில் வளர்க்கக்கூடாது. எப்போதும் அதை ஒரு தொட்டியில் தான் வளர்க்க வேண்டும். அதுவும் இந்த துளசியை வீட்டின் வடக்கு திசையில் உள்ள ஜன்னல் அல்லது பால்கனியில் வைத்து வளர்ப்பது நல்லது.

எத்தனை செடியை வளர்க்கலாம்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் துளசி செடியை வளர்ப்பதாக இருந்தால், ஒன்று, மூன்று அல்லது ஐந்து என்று ஒற்றைப்படை எண்ணில் தான் வளர்க்க வேண்டும். அப்போது தான் நல்ல பலன் கிடைக்கும். மேலும் துளசி செடியை வீட்டில் வளர்க்க நினைத்தால், கார்த்திகை மாதத்தில் வரும் வியாழக்கிழமைகளில் வளர்க்கத் தொடங்குங்கள்.

எந்த திசையில் துளசி செடியை வைக்கக்கூடாது?
வீட்டில் துளசி செடியை வளர்க்க நினைத்தால், வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள திசைகளில் வைத்து வளர்த்தால் தான், நல்ல பலன்கள் கிடைக்கும். வாஸ்துப்படி, துளசி செடியை வீட்டின் தென் கிழக்கு திசையில் வைத்து வளர்க்கக்கூடாது. ஏனெனில் இது அக்னி மூலை. இந்த திசையில் வைத்தால் வீட்டில் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications