Latest Updates
-
வீட்டில் எப்பவும் செல்வமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கணுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வையுங்க! -
தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப டாக்டர் ஸ்வேதா சொல்ற இந்த விதைகளை தினமும் 1 ஸ்பூன் சாப்பிடுங்க! -
தமிழ்நாட்டில் வெளியாட்கள் யாருமே செல்ல முடியாத அதிசய கிராமம் - அப்படி இங்க என்ன இருக்கு தெரியுமா? -
ஆந்திரா ஸ்டைல் சுட்ட பச்சை மாங்காய் ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க! -
வாஸ்து படி உங்கள் பாத்ரூமில் ஒரு கிண்ணம் உப்பை வைப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் அசுப யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படலாம்! -
சூப்பரான செட்டிநாடு பச்சை சுண்டக்காய் கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
வரகரிசி கஞ்சியும், முட்டை ஆம்லெட்டும் - எப்படி செய்றது-ன்னு பாத்து இந்த காம்போவை ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 10 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம்
கோடைகாலத்தில் எடையை புயல் வேகத்தில் குறைக்க உதவும் சிறந்த 10 உணவுகள்
Summer Weight Loss Tips: எடைக் குறைப்பு என்பது அனைவரும் செய்ய விரும்பும் அதேசமயம் மிகவும் கடினமான ஒரு விஷயமாகும். நம்முடைய உணவு முறை, நம்முடைய உடற்பயிற்சியின் அளவு மற்றும் நமது வாழ்க்கை முறை ஆகிய அனைத்தும், நமது எடை குறைப்புப் பயணத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. எடைக்குறைப்பு பயணத்தில் பெரும்பாலான மக்கள் கவனிக்கத் தவறும் ஒரு விஷயம் வானிலையாகும். வானிலையானது நமது உடல் எடையையும், எடை குறைப்புச் செயல்முறையையும் கணிசமாகப் பாதிக்கக்கூடியது.
நிபுணர்களின் கூற்றுப்படி, கோடைக்காலம் எடைக்குறைப்பிற்கு மிகவும் சாதகமான வானிலையாக அமையலாம். சூரிய ஒளி மற்றும் வெப்பமான வானிலை ஆகியவை, தொடர்ச்சியான வியர்வை மற்றும் பிற காரணிகள் மூலம் எடை குறைப்புச் செயல்முறையைத் துரிதப்படுத்த உதவக்கூடும். இந்த கோடைக்காலத்தில் நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், உங்கள் உணவு முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டிய, கொழுப்பை எரிக்கும் சிறந்த உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தயிர்
தயிர் அனைத்து பருவக்காலத்திலும் மக்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவாகும். தயிர் அதன் ஊட்டச்சத்து மதிப்பிற்கும் புத்துணர்ச்சியூட்டும் சுவைக்கும் பெயர் பெற்றது. இது புரதச்சத்து நிறைந்தது, இந்த புரதச்சத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், மற்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளைப் போல அல்லாமல் இது உடலுக்குக் குளிர்ச்சியையும் அளிக்கிறது.
குடைமிளகாய்
குடைமிளகாய் வைட்டமின்களின் சிறந்த ஆதாரமாக உள்ளது. புரதங்களை உடல் உறிஞ்சிக்கொள்ள வைட்டமின்கள் உதவுகின்றன. ஆரஞ்சுப் பழங்களை விட குடைமிளகாய்களில் வைட்டமின் C அதிகமாக உள்ளது. இதனால் இது சிறந்த எடைக்குறைப்பை ஊக்குவிக்கும் உணவாக உள்ளது.
தர்பூசணி
கோடைகாலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது தர்பூசணிதான். ஒரு தர்பூசணி 92 சதவீதம் நீரால் ஆனது. இது, இந்த உணவில் கலோரி அளவை குறைவாக இருக்கச் செய்வதுடன், உங்கள் உடலில் போதுமான நீர்ச்சத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இந்த இரண்டு பண்புகளும் கொழுப்பை வேகமாகக் கரைக்க உதவுகின்றன.
வெள்ளரிக்காய்
தர்பூசணியைப் போலவே, வெள்ளரிக்காயும் முழக்க முழுக்க நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்தவை. இவை உடல் வெப்பநிலையை அதிகரிக்காமலேயே, உடல் கொழுப்பை எரிக்க உடலுக்கு உதவுகின்றன.
இலவங்கப்பட்டை
அனைத்து அசைவ உணவுகளிலும் சேர்க்கப்படும் ஒரு அத்தியாயவசிய பொருள் என்றால் அது இலவங்கபட்டைதான். இலவங்கப்பட்டை சத்தான மற்றும் நறுமணமிக்க ஒரு பொருளாகும். இதில் 'சின்னமால்டிஹைட்' என்ற ஒரு கூறு உள்ளது. இது உடல் எடை அதிகரிப்பதைத் தடுப்பதுடன், உடலில் உள்ள கொழுப்புச் செல்களை எரிப்பதற்கும் உதவுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இலைக்காய்கறிகள்
ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், கேல், காலிஃபிளவர் போன்ற இலை காய்கறிகள் கொழுப்பை எரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இந்த காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்தும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கோடைகால எடை குறைப்பு பயணத்தில் இவற்றை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிட்ரஸ் பழங்கள்
உடல் எடையைக் குறைப்பதற்கும், உடல் புரதங்களை உறிஞ்சிக்கொள்ள உதவுவதற்கும், வைட்டமின் நிறைந்த உணவை உட்கொள்வது முக்கியமாகும். சிட்ரஸ் பழங்கள் நீர்ச்சத்தும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்தவை. எனவே அவற்றை கோடைகாலத்தில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பெர்ரிகள்
பெர்ரிகளில் பல்வேறு ஊட்டச்சத்துக்களும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளன. மேலும், இவற்றில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், இவற்றின் கலோரி அளவும் குறைவாகவே உள்ளது. எனவே கோடைகாலத்தில் இவற்றை உட்கொள்வது கொழுப்பை வேகமாக எரித்து எடையைக் குறைக்க உதவுகிறது.
இளநீர்
இளநீர் உடல் வறட்சி மற்றும் சோர்வைத் தடுக்கும், இயற்கையான மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்த பானமாகும். வியர்வை மூலம் வெளியேறும் அத்தியாவசியத் தாதுக்களை இது ஈடுசெய்வதால், கோடைக்காலத்தில் உட்கொள்ள வேண்டிய மிகச்சிறந்த உணவுகளில் ஒன்றாக இது உள்ளது.
மோர்
வெயில் காலத்தில் அனைவரும் குடிக்கும் ஒரு பானமென்றால் அது மோர்தான். குறைந்த கொழுப்பு மற்றும் அதிக புரோபயாடிக்குகளைக் கொண்ட மோர், வயிற்றை இதமாக்கி, உடலுக்குத் தேவையான நீரேற்றத்தை அளிக்கிறது. கோடைகாலத்தில் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த உணவாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












