Latest Updates
-
2 உருளைக்கிழங்கும், 2 கப் கோதுமை மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
அக்டோபர் 08 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்காத்து பலமா அடிக்கப்போகுதாம் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது! -
அக்டோபர் 11-ல் உருவாகும் வைதிருதி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
கொங்கு ஸ்பெஷல் பழ கச்சாயம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாப்பிட புசுபுசுனு அருமையா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு ஒருடைம் இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று முன்னோர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மற்றவர்களிடம் மறைக்கும் உங்களின் நச்சு குணம் பத்தி சொல்றோம்.. -
தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா நீங்க நம்பவே மாட்டிங்க... -
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
தயிர் Vs. மோர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?
Curd Vs. Buttermilk: தற்போது கோடைக்காலம் என்பதால் வெயில் ஆளை சுட்டெரிக்கும் வகையில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கோடையில் உடலை குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள மோர், தயிர், இளநீர் போன்றவை பெரிதும் உதவுகின்றன. தற்போது நிறைய பேர் உடல் எடையைக் குறைக்க முயற்சித்து வருகிறார்கள்.
அப்படி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தங்கள் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதுவும் இந்த கோடையில் தாகத்தை தணிக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் மோர், தயிர் என இவ்விரண்டில் எது சிறந்தது என்ற ஒரு கேள்வி மனதில் எழும். உங்கள் மனதிலும் இப்படியொரு சந்தேகம் உள்ளதா? வாருங்கள் இப்போது இவ்விரண்டில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது என்பதை ஒப்பிட்டு பார்ப்போம்.

ஊட்டச்சத்து மதிப்புகள்
தயிர்
பாலை நொதிக்க வைத்தால் கிடைப்பது தான் தயிர். இந்த தயிரில் புரோட்டீன், கால்சியம், புரோபயோடிக்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் ஏராளமான அளவில் உள்ளன. அதுவும் 100 கிராம் தயிரில் 98 கலோரிகள், 3.5 கிராம் புரோட்டீன், 4.3 கிராம் கொழுப்பு மற்றும் 3.4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
மோர்
தயிரில் இருந்து பெறப்படுவது தான் மோர். இந்த மோர் கோடையில் மிகவும் பிரபலமான மற்றும் தாகத்தைத் தணிக்கக்கூடிய பானம். சொல்லப்போனால் இந்த மோருடன் புதினா, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், உப்பு சேர்த்து மசாலா மோராக குடிக்கும் போது, இன்னும் சுவையாக இருக்கும். மோரில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் குறைவு. அதுவும் 100 கிராம் மோரில் 40 கலோரிகள், 3 கிராம் புரோட்டீன், 1 கிராம் கொழுப்பு மற்றும் 4.8 கிராம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.
எடை இழப்பு நன்மைகள்
தயிர் எப்படி எடை இழப்புக்கு உதவுகிறது?
தயிரில் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இதை உட்கொள்ளும் போது நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும், பசி குறையும். கூடுதலாக இதில் புரோபயோடிக்குகள் இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கும். மேலும் உட்லின் மெட்டபாலிச அளவு அதிகரிக்கும் மற்றும் செரிமானம் மேம்படும். இருப்பினும் கொழுப்புமிக்க தயிரில் கலோரிகள் அதிகம் என்பதால், எடை இழப்புக்கு கொழுப்பு குறைவான அல்லது ப்ளைன் தயிரை தேர்ந்தெடுப்பது நல்லது.
மோர் எப்படி எடை இழப்புக்கு உதவுகிறது?
மோரில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவு. மேலும் இது உடலுக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு, உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள உதவும். முக்கியமாக மோரில் உள்ள புரோபயோடிக்குகள், வயிற்று உப்புசத்தை தடுத்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் மூலம் எடை இழப்பில் பயனுள்ளதாக உள்ளது. மேலும் இதில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரி குறைவாகவும் இருப்பதால், உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக உள்ளது.
அதுவும் டாக்டர் பால் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மோர் கொழுப்பைக் கரைக்க எப்படி உதவுகிறது என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "நமது குடல் இரண்டாவது மூளை போன்றது. ஏனெனில் இது நியூரான்களை கட்டுப்படுத்துகிறது. அதுவும் நமது குடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருந்தால், அது நல்ல நியூரான்களை தூண்டி, கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் நல்ல பாக்டீரியாக்களுடன், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் பி12, ரிபோஃப்ளேவின் போன்றவை உள்ளன. எனவே தினமும் குறைந்தது 2 டம்ளர் மோரை குடியுங்கள். குறிப்பாக கோடையில் அவசியம் குடிக்க வேண்டும்" என்று கூறினார்.
மேலும் "மோரை தயாரிப்பது மிகவும் சுலபம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், பிளெண்டரில் சிறிது புதினா, கொத்தமல்லி, வறுத்த சீரகப் பொடி, மிளகுத் தூள், இஞ்சி, தயிர் மற்றும் சிறிது நீரை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்" என்றும் டாக்டர் கூறினார்.
எது எடை இழப்புக்கு சிறந்தது?
தயிர், மோர் என இரண்டுமே உடல் எடையைக் குறைக்க உதவி புரிகின்றன. உடல் எடையைக் குறைக்க தயிர், மோர் ஆகிய இரண்டுமே தமக்கே உரிய நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆனால் இவற்றில் எதை தேர்ந்தெடுப்பது என்பது ஒருவரது தனிப்பட்ட விருப்பம்.
நீங்கள் புரோட்டீன் அதிகம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தாலோ அல்லது நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்க வேண்டுமென்று நினைத்தாலோ, தயிரை தேர்ந்தெடுக்கலாம். அதுவே கலோரி குறைவான மற்றும் நீர்ச்சத்து நிறைந்த ஒன்றை விரும்பினால், மோரை தேர்ந்தெடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


