படிக்காமலேயே அரசியலில் கலக்கிய அரசியல்வாதிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

படிப்பு தான் ஒருவரின் மதிப்பை உயர்த்தும் என்று நினைக்க வேண்டாம். படிக்காமலேயே திறமை கொண்டும் வாழ்வில் முன்னேற முடியும். அப்படி படிக்காமலேயே வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பலர். அதுவும் எந்த துறையானாலும் ஆர்வம் என்ற ஒன்று இருந்தால் கண்டிப்பாக சாதிக்கலாம்.

அப்படி சினிமா, அரசியல் போன்றவற்றில் பலர் சாதித்துள்ளனர். இங்கு அதிகம் படிக்காமலேயே அரசியலில் கலக்கிய அரசியல்வாதிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இப்போது அவர்கள் யாரென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காமராசர்

காமராசர்

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்களுள் ஒருவரான காமராசர், தமிழ்நாட்டில் 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார். இவர் அவ்வளவாக படிக்காவிட்டாலும், தனது திறமையான அரசியலால் முதலமைச்சராக பல ஆண்டுகள் இருந்தார். அதுமட்டுமின்றி மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம் பிடித்த அரசியல்வாதிகளுள் ஒருவர் இவரே ஆவார்.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்

முன்னாள் முதலமைச்சரும், நடிகருமாக இருந்த எம்.ஜி.ஆர் அவர்கள் கூட படித்ததில்லை. இருப்பினும் இவர் தன் திறமையான ஆட்சியால் மக்களுக்கு பல நன்மைகளை செய்து, இன்று வரை வாழ்ந்து வருகிறார்.

கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலேஜ் சென்றதில்லை. ஏன் பத்தாம் வகுப்பு கூட முடிக்கவில்லை. ஆனால் இவர் சிறந்த எழுந்தாளர். தமிழில் பல திரைப்படங்களுக்கு திரைக்கரை எழுதியுள்ளார்.

ஜெ. ஜெயலலிதா

ஜெ. ஜெயலலிதா

நடிகையாக இருந்த ஜெயலலிதா பின் அரசியலில் குதித்து, பல சாதனைகளை புரிந்து வந்தார். இவர் மெட்ரிகுலேசனில் மாநில அளவில் தேர்ச்சி பெற்றவர். இவர் கல்லூரி செல்லாவிட்டாலும், இவர் மிகவும் திறமையானவர்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

நடிகராக இருந்து அரசியலில் குதித்து, கட்சி ஒன்றை ஆரம்பித்து 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர். இவர் 12 ஆம் வகுப்பிற்கு பின், தன் தந்தையின் அரிசி ஆலையில் சேர்ந்துகொண்டார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Poorly Educated Politicians In TamilNadu

Here's a look at the most poorly educated politicians in tamilnadu over the years.
Subscribe Newsletter