கார்கில் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

கார்கில் என்பது ஸ்ரீநகரில் இருந்து 215 கி.மீ. தொலைவில் இமயமலையில் உள்ளது. நம் நாட்டுடன் அதனை இணைக்கும் சோஜிலா பாஸ் வருடத்தில் 7 மாதங்கள் மூடியிருப்பதால் இந்த இடம் நாட்டின் பிற பகுதியை விட்டு தனிமைப்படுத்தப்பட்டே இருக்கும். கார்கில் என்ற இடத்தை பற்றி இந்தியாவில் உள்ள ஒரு சாதாரண மனிதனுக்கு தெரியாமலே இருந்தது.

உலகத்தில் உள்ள மிகவும் மோசமான மற்றும் கொடூரமான 10 சர்வாதிகாரிகள்!!!

அவனிடம் போய் நான் கார்கிலிலிருந்து வந்திருக்கிறேன் என சொன்னால் கண்டிப்பாக அப்படி ஒரு இடம் எங்கே இருக்கிறது என்று தான் கேட்பான். ஆனால் அது பாகிஸ்தானிற்கு மிக அருகில் இருப்பதால் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. எதிரிகளை நேரடியாக கண்காணிப்பதற்கு இது தேசிய நெடுஞ்சாலையாக விளங்குகிறது. இதுவே சியாச்சென்னுக்கு காப்புக்கயிறாகவும் விளங்குகிறது.

மிகவும் சக்தி வாய்ந்த சில இந்திய பெண்மணிகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யாருக்கும் தெரியாத கார்கில்

யாருக்கும் தெரியாத கார்கில்

1999-ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில், கார்கில் திடீரென ஒரு நாள் அனைவரின் கவனத்திற்கு வந்தது. கார்கில் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள கிராமங்களான கக்சார், ஹர்ட்ராஸ், திராஸ், பாடலிக் போன்றவைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. அதற்கு காரணம் கார்கிலின் பெரும் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது என அப்போது தான் இந்திய அரசாங்கத்திற்கு தெரிய வந்தது. எதிரிகளை நம் மண்ணை விட்டு விரட்டியடித்து, நம் மூவர்ண கொடியின் கௌரவத்தை அங்கே மீண்டும் மீட்டமைக்க உருவாக்கப்பட்டதே ஆபரேஷன் விஜய்.

ஆபரேஷன் விஜய்

ஆபரேஷன் விஜய்

திடீரென அனைத்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் தலைப்புச் செய்தியாக மாறியது கார்கில். நாட்டின் தனிமைப்படுத்தப்பட்ட இந்த பூமியில் செய்தியாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். ஒவ்வொரு இந்தியனும் கார்கிலைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தான். கடவுளின் ஆசீர்வாதம், இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமான படையின் துணிச்சல் மற்றும் தியாகத்தால் ஆபரேஷன் விஜய் வெற்றிகரமாக முடிந்தது. பாகிஸ்தானை எதிர்த்து இந்தியாவிற்கு கிடைத்த மற்றொரு மகத்தான வெற்றியாக இது அமைந்தது.

பேரழிவுக்குரியது ஆபரேஷன் விஜய்

பேரழிவுக்குரியது ஆபரேஷன் விஜய்

இந்த ஆபரேஷன் தொடங்குவதற்கு முன்பே, இந்த ஆபரேஷன் ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என உலகத்தில் உள்ள முதன்மையான பல ராணுவ மூலோபாயவாதிகள் கூறினார்கள். அமைதியை காத்து, இரு தரப்பினரும் பேசி இப்பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என வழக்கம் போல அமெரிக்காவும் அறிவுறுத்தியது. ஆனால் அந்த நேரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு நம் ராணுவத்தின் மீது அபார நம்பிக்கை இருந்தது. அதன் பேரில் கார்கிலை மீட்க ஆபரேஷன் விஜயை அறிவித்தது. எப்போதும் போல நம் ராணுவமும் வென்று காட்டியது.

இந்திய வீரர்களின் தியாகம்

இந்திய வீரர்களின் தியாகம்

இந்த வெற்றிக்கு இந்திய ராணுவம் கொடுத்த விலை மதிப்பில்லாதது. அவர்கள் இழந்தது கொஞ்சம் நஞ்சமல்ல. 600-க்கும் மேற்பட்ட தீரமிக்க வீரர்கள் போரில் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் தன் தாய்நாட்டை காக்க தங்கள் உடல் உறுப்புகளை இழந்தனர். இதேப்போன்ற நிலைமை வருமேயானால் நாமும் அவர்களை போல் இந்த நாட்டிற்காக போராடுவோம் என ஒவ்வொரு இந்தியனும் அவர்களின் தியாகத்திற்கு முன்பு வணங்கி, உறுதி மொழி எடுக்க வேண்டும்.

ஆபரேஷன் விஜய்க்கு முன் கார்கில்

ஆபரேஷன் விஜய்க்கு முன் கார்கில்

சரி, கார்கில் போருக்கு முன்பு நம் கவனத்திற்கு வராமல் அங்கே நடந்த பல நிகழ்வுகளை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். ஆபரேஷன் விஜய்க்கு முன்பு அங்கே நடந்த நிகழ்வுகள் இப்படி தான் இருந்திருக்கும் என்று யூகித்து எழுதப்படுவதே இது. இது நம் நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்காது. ஆனால் அவைகளையெல்லாம் கார்கிலில் வாழ்ந்த மக்கள் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள்.

இந்தியா பாகிஸ்தான் எல்லை தான் கார்கில்

இந்தியா பாகிஸ்தான் எல்லை தான் கார்கில்

நம் அனைவருக்கும் தெரிந்ததை போல் பாகிஸ்தானில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் தான் கார்கில் உள்ளது. அதனால் இந்திய பாகிஸ்தான் எல்லைகளில் ஒன்று தான் கார்கில் என்றும் கூறலாம். அதேப்போல் சியாச்சென் பகுதிக்கான ஒரே இணைப்பும் இது தான். அதேப்போல் பாகிஸ்தான் குணத்தை பற்றியும் நாம் அறிந்ததே. இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் எப்போதுமே ஒரு பூசல் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் இவை அனைத்தும் இந்திய ராணுவத்தின் எல்லை சாவடிகள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் கக்சார் போன்ற சில கிராமங்கள் வரை மட்டுமே இருக்கும். இப்பகுதியில் குடியிருப்பவர்கள் எல்லாம் பாதுகாப்பான பகுதியில் தஞ்சம் புகுந்திட தங்கள் உடைமைகளை எப்போதும் தயாராக வைத்திருப்பார்கள். பாகிஸ்தான் உருவானது முதலே அவர்கள் வாழ்க்கையில் இது ஒரு பகுதியாகவே இருந்தது. அதனால் இது பெரிய முக்கியத்துவத்தை பெறவில்லை.

பாகிஸ்தானின் திடீர் தாக்குதல்

பாகிஸ்தானின் திடீர் தாக்குதல்

ஆனால் 1997 ஆம் ஆண்டு நீண்ட குளிர் காலத்திற்கு பின், இளவேனிற் காலத்தில் மக்கள் சூரிய ஒளியை ரசித்து கொண்டிருந்த போது, பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த பீரங்கிப்படை கார்கிலை உலுக்கி போட்டது. இந்த பீரங்கிப்படைகள் முதலில் அவர்களின் ராணுவ தளங்கள், நகரத்தின் வெளியே தான் முகாமிட்டது. இது பயத்தையும், சில உள்ளூர்வாசிகளின் மரணத்தையும் ஏற்படுத்தியது. அதன் பிறகு இது ஒரு அன்றாட பழக்கமாக மாறியது. மக்கள் பயத்துடன் வாழ ஆரம்பித்தார்கள்.

பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

சில நாட்கள் கழித்து, அவர்கள் மீது ஷெல் தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. அதனால் சில நாட்கள் அமைதி நிலவியது. ஆனால் சில காலம் கழித்து அவர்கள் மீண்டும் தங்கள் வேலையை காட்டத் தொடங்கினார்கள். ஆனால் அப்போதெல்லாம் இந்திய ராணுவம் மிகுந்த விழிப்புடன் செயல்பட்டது. வானில் சில பலூன்களை இந்திய ராணுவம் பறக்க விட்டது. மின்னும் வகையில் அதில் தொங்கியிருந்த சிறிய பொருளை பார்த்து, எதிரிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க இந்திய ராணுவம் பயன்படுத்திய கேமரா என மக்கள் கருதி வந்தனர். அதேப்போல் நம்முடைய சில ஹெலிக்காப்டர்களும் உயர பறந்து கொண்டே இருந்தது. அவைகளும் கூட வானில் கண்காணிப்பு நடத்துவதற்கு என கூறப்பட்டது.

செப்டம்பர் 27, 1997 - பயங்கரமான நாள்

செப்டம்பர் 27, 1997 - பயங்கரமான நாள்

எந்த ஒரு எச்சரிக்கையும் இன்றி, இந்த நாளில் தான் பாகிஸ்தானின் நூற்றுக்கணக்கான பீரங்கிப்படை திடீர் தாக்குதலை நடத்தியது. கார்கில் நகரில் குண்டு மழை பொழிந்தது. கார்கில் மக்கள் பலரும் உயிரை இழந்தனர். பலர் காயமடைந்தனர். அவர்கள் பள்ளிக்கூடங்களை கூட விட்டு வைக்கவில்லை. அப்படி தாக்குதலுக்கு உண்டான ஒரு பள்ளிக்கூடம் தான் சுறு வேலி பப்ளிக் ஸ்கூல். இதனால் பல மாணவர்களுக்கும் படு காயமடைந்தனர். எல்.கே.ஜி.-யை சேர்ந்த ஒரு மாணவன் சம்பவ இடத்திலேயே பலியானான். அதேப்போல் தர்ஷன் லால் என்ற ஆசிரியருக்கு ஏற்பட்ட காயத்தால், அவர் சில மாதங்கள் கழித்து உயிரை இழந்தார்.

பதுங்கு குழிகளில் தங்கிய மக்கள்

பதுங்கு குழிகளில் தங்கிய மக்கள்

வெகு விரைவில் குளிர் காலம் தொடங்கியவுடன் இவையனைத்தும் நிறுத்தப்பட்டது. மீண்டும் 1998-ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில், இது தொடர்ந்தது. ஆனால் இப்படி தாக்குதல் நடக்கும் போது என்ன செய்ய வேண்டும் என தெரிந்து கொண்டதால், இந்த முறை கார்கில் மக்கள் சற்று மாறியிருந்தார்கள். ஆம், மக்கள் தங்கள் வீடுகளில் பதுங்கு குழிகளை கட்டி வைத்திருந்தார்கள். அதே போல் அரசாங்கமும், ராணுவத்தின் உதவியோடு, மக்களுக்கு அடைக்கலம் கொடுக்க பல்வேறு இடங்களில் பல பதுங்கு குழிகளை கட்டிக் கொடுத்திருந்தது. கார்கில் மக்களுக்கு பழகி விட்டதால், இதனை ஏற்றுக் கொண்டு வாழ அவர்கள் தயாரானார்கள். அப்படி தான் செயல்பட்டது நம் உளவுத்துறையும், ராணுவமும், அரசாங்கமும்.

பயங்கர திட்டங்களை தீட்டிய பாகிஸ்தான்

பயங்கர திட்டங்களை தீட்டிய பாகிஸ்தான்

பீரங்கிப்படை தாக்குதல் என்பது கார்கில் மக்களுக்கு சாதாரணமாய் போனது. நட்பின் அடையாளமாக திரு.வாஜ்பாய் அவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு பேருந்தில் பயணித்த போது, திடீரென ஒரு புது நம்பிக்கை பிறந்தது. 50 ஆண்டு கால பகை முடிவுக்கு வந்தது என இரு நாடுகளும் கொண்டாடி வந்தனர். சொல்லப்போனால் நம் இந்தியர்கள் மட்டும் தான் அப்படி நினைத்திருப்போம். ஆனால் எல்லையை ஒட்டி பாகிஸ்தான் சில பயங்கர திட்டங்களை தீட்டி, வெற்றியை நோக்கி நடை போட்டு கொண்டிருந்தது. இந்திய படைகளும் உளவுத்துறை அமைப்புகளும் கூட இந்த அமைதியை எண்ணி மகிழ்ந்தனர். தங்கள் கடமையை அமைதியாக புரிந்த இந்திய படை மற்றும் உளவுத்துறையின் வெளிப்பாட்டை இது காண்பிக்கும் விதமாக இருந்தது. அரசாங்கத்தில் இருந்து வந்த கட்டளையின் பேரால் கூட அவர்கள் அமைதியாக செயல்பட்டிருக்க கூடும். ஆனால் கார்கிலில் எதுவும் பெரிதாக மாறி விடவில்லை. சீரான இடைவெளியில் அங்கே தாக்குதல்கள் நடந்து கொண்டே தான் இருந்தது.

இந்திய ராணுவத்தின் இடத்தை ஆக்கிரமித்த பாகிஸ்தான் ராணுவம்

இந்திய ராணுவத்தின் இடத்தை ஆக்கிரமித்த பாகிஸ்தான் ராணுவம்

மீண்டும் குளிர் காலம் வந்தது. அப்போது உயர்ந்த இடத்தில் கண்காணிப்பில் இருந்த இந்திய ராணுவத்தினர் இடத்தை காலி செய்தனர். குளிர் காலத்தில் இத்தகைய உயர்ந்த இடத்தில் இருப்பது கஷ்டம் என்பதால் இரு ராணுவமும் இசைந்து கொண்டதன் படி இது நடந்தது. 1998-99 ஆண்டு குளிர் காலத்தில் இந்த தாக்குதல் குறைந்த வீரியத்துடன் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது. இந்திய ராணுவம் தங்கள் இடத்தை காலி செய்தவுடன், எதிரி நாட்டில் உயரிய இடத்தில் இருந்த ராணுவம், லாகூர் பேருந்து மூலமாக மெல்ல நுழைந்து இந்திய ராணுவம் அமர்ந்திருந்த இடத்தை எந்த ஒரு எதிர்ப்பும் இன்றி ஆக்கிரமித்தது. இங்கே நாம், நமக்கு நல்ல அண்டை நாடு கிடைத்து விட்டது என ஏமாந்து கொண்டிருந்தோம்.

நம் நாட்டில் எதிரி ராணுவம் புகுந்து விட்டது என்ற தகவலை உள்ளூர் ஆடு மேய்ப்பவரின் மூலமாக தெரிந்த பிறகு தான், நம் அண்டை நாட்டின் உண்மை முகம் 1999 ஆம் ஆண்டு இளவேனிற் காலத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. அதற்கு பின் நடந்ததைத் தான் இந்த நாடே அறியுமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Kargil War Unknown Facts

What are some unknown facts and stories about the 1999 Kargil war? What is the truth behind kargil war? Read on to know more....
Please Wait while comments are loading...
Subscribe Newsletter