For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகள்!

|

உலககோப்பை கிரிக்கெட் சூடுபிடிக்க நடைபெற்று கொண்டிருக்கிறது. அனைவரும் இந்தியா வெல்ல வேண்டும் என பிரார்த்தனை செய்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில். உங்களுக்கு கிரிக்கெட்டில் இப்படி எல்லாம் கூட அதிசியங்கள் நடந்திருக்குமா என தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாத பல சுவாரஸ்ய தகவல்களை அள்ளி தரவே இந்த கட்டுரை.

சச்சின் பாகிஸ்தானுக்காக விளையாடியது, ஒரே அணி வீரர் இரண்டு சர்வதேச அணிகளுக்காக விளையாடியது என பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் உலக கிரிக்கெட் அரங்கில் நிகழ்ந்திருக்கிறது. அதைப் பற்றி நீங்கள் மேலும் விவரமாக தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாகிஸ்தானுக்காக விளையாடிய சச்சின்

பாகிஸ்தானுக்காக விளையாடிய சச்சின்

இந்தியாவிற்காக விளையாடுவதற்கு முன்பாகவே பாகிஸ்தானுக்காக சச்சின் விளையாடி இருக்கிறார். 1987ஆம் ஆண்டு பிரபௌர்னே ஸ்டேடியத்தில் (Brabourne Stadium) பாகிஸ்தானில் நடந்த ஒரு பயிற்சி போட்டியில் பிரபௌர்னே ஸ்டேடியத்தில், பாகிஸ்தானுக்காக மாற்று வீரராக களமிறங்கி ஃபீல்டிங் செய்திருக்கிறார் சச்சின்.

சச்சினை விட அதிக சராசரி கொண்டவர் கம்பளி

சச்சினை விட அதிக சராசரி கொண்டவர் கம்பளி

சச்சினின் சிறு வயது தோழரான வினோத் கம்பளி 17 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக பங்கற்றிருகிறார். அவரது சராசரி 54.20. இவர் அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் அடித்து கலக்கியவர். இவரது சராசரி சச்சினை விட (53.78) அதிகம். ஆனால், சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பந்திலேயே விக்கெட் இழந்து கவாஸ்கர் சாதனை

முதல் பந்திலேயே விக்கெட் இழந்து கவாஸ்கர் சாதனை

டெஸ்ட் அரங்கில் நீண்ட வருடங்களாக அதிக சதம் அடித்தவர் என்ற சாதனையை தக்க வைத்திருந்தவர் சுனில் கவாஸ்கர். பின் இந்த சாதனை சச்சின் வசம் சென்றுவிட்டது. டெஸ்ட் அரங்கில் முதல் பந்திலேயே மூன்று முறை தன் விக்கெட்டை இழந்து சோகமான சாதனயை தன் வசம் வைத்துள்ளார் கவாஸ்கர். டெஸ்ட் அரங்கில் 10,000 ரன்களை கடந்த முதல் வீரர் கவாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து கெயில் சாதனை

முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து கெயில் சாதனை

உலக கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை டெஸ்ட் போட்டிகளில் எந்த ஒரு வீரரும் முதல் பந்தில் சிக்ஸர் அடித்தது இல்லை, கெயிலை தவிர. கடந்த 2012ஆம் ஆண்டு வங்காள தேசத்திற்கு எதிராக விளையாடிய போட்டியில் கெயில் இந்த சாதனையை செய்தார்.

முதல் முறை ஆடுகளத்தில் முத்தம் பெற்ற வீரர்

முதல் முறை ஆடுகளத்தில் முத்தம் பெற்ற வீரர்

இந்திய வீரரான அப்பாஸ் அலி, கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஆடுகளத்தில் விளையாடும் போது ரசிகை ஒருவரிடம் முத்தம் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கடந்த 1960ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர்க்கு இந்த முத்தம் கிட்டியது.

ஐந்து நாட்களும் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்த வீரர்கள்

ஐந்து நாட்களும் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்த வீரர்கள்

இந்தியாவின் ஜெய் சிம்ஹா மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் டெஸ்ட் போட்டியின் ஐந்து நாட்களும் பேட்டிங் செய்து சாதனை செய்துள்ளனர்.

இந்தியா, இங்கிலாந்து இரு அணிகளில் விளையாடிய வீரர்

இந்தியா, இங்கிலாந்து இரு அணிகளில் விளையாடிய வீரர்

இந்தி நடிகர் சாயப் அலிகானின் தாத்தா இப்டிக்கார் அலி கான் பட்டோடி, இந்தியாவிற்காகவும் இங்கிலாந்துக்காகவும் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஒரே வீரர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

டான் பிராட்மனை ஹிட் விக்கெட் செய்த ஒரே பவுளர்

டான் பிராட்மனை ஹிட் விக்கெட் செய்த ஒரே பவுளர்

டான் பிராட்மனை ஹிட் விக்கெட் செய்த ஒரே பவுளர் என்ற சாதனையை இந்திய வீரர் அமர்நாத் தன் வசம் வைத்துள்ளார்.

இந்தியாவின் லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி

இந்தியாவின் லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி

இந்தியா 1983ஆம் ஆண்டு உலககோப்பை வென்று மூன்று வருடம் கழித்து தனது முதல் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி வெற்றியை ருசித்தது. அதே போல, கடந்த 2011ஆம் ஆண்டு இரண்டாவது முறை உலககோப்பை வென்ற பிறகு மூன்று ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி வெற்றியை ருசித்தது.

அனைத்து வகை உலக கோப்பைகளும் வென்ற இந்தியா

அனைத்து வகை உலக கோப்பைகளும் வென்ற இந்தியா

இந்தியா மட்டுமே 60 ஓவர், 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை வென்ற ஒரே அணி என்ற சாதனை செய்துள்ளது.

டெஸ்ட் அரங்கில் ஒரே இன்னிங்ஸில் 1௦ விக்கெட்

டெஸ்ட் அரங்கில் ஒரே இன்னிங்ஸில் 1௦ விக்கெட்

ஜிம் லேகர் மற்றும் அணில் கும்ப்ளே ஆகிய இருவரும் டெஸ்ட் அரங்கில் ஒரே இன்னிங்ஸில் 1௦ விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையை தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இதில் ஜிம் லேகர் அணில் கும்ப்ளே பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்த 10 விக்கெட் போட்டியை கண்டுகளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்த நாள் அன்று ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்

பிறந்த நாள் அன்று ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர்

பிறந்த நாள் அன்று ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையான சாதனை நிகழ்த்தி இருப்பவர் பீட்டர் சிடில். கடந்த 2010 ஆண்டு நவம்பர் மாதம் 25 தேதி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை பீட்டர் சிடில் செய்திருக்கிறார்.

ஷாஹித் அப்ரிடி அடித்த அதிவேக சதம், சச்சினின் பேட்டில் அடிக்கப்பட்டது

ஷாஹித் அப்ரிடி அடித்த அதிவேக சதம், சச்சினின் பேட்டில் அடிக்கப்பட்டது

ஷாஹித் அப்ரிடி இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் அடித்த அதிவேக சதம் சச்சினின் பேட்டில் அடிக்கப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts That Happened In Cricket World

Do you know there are so many interesting facts happened in world cricket, read here.
Desktop Bottom Promotion