உங்கள் ஐ-லைனர் ஸ்டைல் உங்களைப் பற்றி என்ன கூறுகிறது என தெரியுமா?

By: Ashok CR
Subscribe to Boldsky

ஒருவரின் உடலில், தோற்றத்தை அழகுப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது கண்கள். கண்டிப்பாக இதனை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். மற்றவர்கள் உங்களிடம் முதில் கவனிப்பது பெரும்பாலும் உங்கள் கண்களாக தான் இருக்கும். நம் கண்களின் மூலமாகவே அன்பு, பாசம், கவனிப்பு, காதல், அலட்சியம், வெறுப்பு என பல விதமான உணர்வுகளை காட்டலாம். ஒருவரின் உணர்ச்சிகளை கண்கள் சிறப்பாக வெளிப்படுத்தும்.

"கண்களே மனதின் கண்ணாடி" என்ற பழைய வாக்கியத்தின் படி, அவை உங்கள் ஆளுமையைப் பற்றி பல விஷயங்களை கூறும். உங்கள் கண்களுக்கு நீங்கள் செய்யும் மேக்-அப் இந்த அழகிய ஜன்னல்களுக்கு அருமையான ப்ரேம்மாக விளங்கும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன? கண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதைப் போல், கண்களுக்கு நீங்கள் செய்யும் மேக்-அப், குறிப்பாக ஐ-லைனர் போடுவதும் கூட உங்கள் ஆளுமையைப் பற்றி தெரிவிக்கும்.

ஐ-லைனர் போடுவதில் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவருக்கென ஒரு ஸ்டைல் இருக்கும். இதுவே வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கண்ணோட்டத்தை ரகசியமாக வெளிக்காட்டி விடும். இதனைப் பற்றி உங்களுக்கு எதுவுமே தெரியாதா? அப்படியானால் உங்கள் ஐ-லைனர் ஸ்டைல் உங்களைப் பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அடர்த்தியான மற்றும் தடிமனான ஐ-லைனர்

அடர்த்தியான மற்றும் தடிமனான ஐ-லைனர்

உங்களது ஐ-லைனர் ஸ்டைலை போலவே, வாழ்க்கையையும் மிகவும் தைரியமாக எதிர் கொள்வீர்கள். திடமான உருதியைகொண்டுள்ளவர்கள் நீங்கள். அதே போல் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதை எண்ணி சந்தோஷமாகவே இருப்பீர்கள். வெறுமனே ஒரு கூட்டத்தில் இருப்பதன் மூலமாகவே, சில நேரங்களில் மற்றவர்களை மிரள செய்து விடுவீர்கள். ராஜ வாழ்க்கை வாழ்வீர்கள், கடினமாக உழைப்பீர்கள், அதை விட கடினமாக பார்ட்டி செய்து குதூகலமாக இருப்பீர்கள். அனைத்து விதத்திலும் நீங்கள் தைரியமான மற்றும் அழகான ஒரு நாகரீக இந்திய மங்கையாவீர்கள்.

பூனை கண்கள்

பூனை கண்கள்

அனைத்து விஷயங்களையும் ஆழமாக சென்று, நுண்ணிய அளவில் மதிப்பீடு செய்ய விரும்புவீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும், அது எப்படி வேண்டும் என்பதில் நீங்கள் மிகவும் குறிப்பாக இருப்பீர்கள். கவனிக்கிற இயல்பை கொண்டவராக நீங்கள் இருப்பதால், மற்றவர்களுடைய உண்மையான குணத்தை உடனடியாக உங்களால் கண்டு கொள்ள முடியும். கூடுதலாக, உங்களின் வாசனை ஒரு வித வசீகரத்தை உண்டாக்கும். நீங்களும் சரி, உங்களை சுற்றியுள்ளவர்களும் சரி, நுட்பங்கள் மற்றும் தரத்தின் மீது குறிப்பாக இருப்பீர்கள்.

பளபளக்கும் கண்கள்

பளபளக்கும் கண்கள்

வாழ்க்கையில் தனித்துவமான மற்றும் புதிய விஷயங்களை முயற்சி செய்வதற்கு நீங்கள் பயப்பட மாட்டீர்கள். ரிஸ்க் எடுக்க நீங்கள் விரும்புவீர்கள். மேலும் முழுமையாக பரந்த மணம் கொண்டவராக இருப்பீர்கள். உங்கள் குழுவுக்கு நீங்களே இதயமும் ஆத்மாவாகவும் இருப்பீர்கள். நீங்கள் இல்லாமல் பார்ட்டி இருக்காது, வெளியே செல்லுதல் இருக்காது. நீங்கள் இல்லாமல் அவை முழுமை அடையாது. எதுவாக இருந்தாலும் முன்னே நிற்கும் நீங்கள் மனதில் பட்டதை பேசுவீர்கள். உங்கள் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்த நீங்கள் வெட்கப்பட மாட்டீர்கள். 'நீங்கள் நீங்களாகவே இருப்பீர்கள்' என்ற வாக்கியத்தை திடமாக நம்புவீர்கள். அதனால் தான் என்னவோ நீங்கள் விசேஷமானவராவும் விளங்குவீர்கள்.

புகையை போன்ற ஐ-லைனர்

புகையை போன்ற ஐ-லைனர்

நீங்கள் கலகக்காரராக இருப்பீர்கள். உங்களை சந்தோஷமாக வைத்துக் கொள்ள உங்களுடன் யாரையுமே எதிர்ப்பார்க்க மாட்டீர்கள். வாழ்க்கையில் எந்த ஒரு தருணத்திலும் மரபு வழியில் நடக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். உங்களுக்கு எது சரி என படுகிறதோ அதை மட்டும் தான் நீங்கள் செய்வீர்கள். நீங்கள் கடுமையானவராக இருப்பீர்கள். ஒரு வித மனப்பாங்குடன் இருப்பீர்கள். உங்கள் சட்டத்திற்கு ஏற்ப தான் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்திடுவீர்கள். எந்த ஒரு வகையிலும் தவறான நடத்தையை நீங்கள் பொறுத்து கொள்ள மாட்டீர்கள். ஆம், உங்களின் கவர்ச்சியான ஸ்டைலும், உறுதியான ஆளுமையும் கண்டிப்பாக அனைவரையும் உங்கள் பக்கம் சுண்டி இழுக்கும்.

வர்ணஜாலம்

வர்ணஜாலம்

உங்களின் நேர்மறையான மற்றும் துடிப்பான குணம் தான், உங்கள் கூட்டத்திற்கு மத்தியில் உங்களை புகழுடன் இருக்கச் செய்யும். உங்களுடன் சேர்ந்து இருப்பது சந்தோஷத்தை அளிக்கும். அதற்கு காரணம் உங்கள் வாழ்க்கை முழுவதும் வாசனையுடன் கூடியதாக இருக்கும். உங்களின் தன்னியல்பை குணமும் கூட உங்களிடத்தில் வசீகரத்தை அதிகரிக்க செய்யும். நீங்கள் மிகுந்த ஜாலியான குணத்தை கொண்டுள்ளவர் என்பதால், நீங்கே எங்கே சென்றாலும், அந்த இடத்தில் நீங்கள் தான் புகழ் பெற்று இருப்பீர்கள். நீங்கள் அந்த இடத்தில் இருந்தாலே போது, உங்களை சுற்றியுள்ளவர்களின் எதிர்மறை எண்ணங்கள் அகலும். இதனால் உங்களை சுற்றியுள்ள இடத்தில் எப்போதும் சந்தோஷம் நிலவும்.

மேலே ஒற்றை கோடாக போடுதல்

மேலே ஒற்றை கோடாக போடுதல்

நீங்கள் மிகவும் நடைமுறையான நபராக இருப்பீர்கள். வாழ்க்கையில் உங்களது இலக்குகள் உங்களுக்கு நன்றாக தெரியும். அதனை உங்களது சொந்த முயற்சியாலேயே அடைய முற்படுவீர்கள். எளிமையை நீங்கள் விரும்புவதால், கவனத்தை ஈர்க்க தேவையில்லாமல் முயற்சி செய்ய மாட்டீர்கள். அதேப்போல் நீங்கள் விரும்புபவர்களிடம் இருந்து தேவையற்ற எதிர்ப்பார்ப்புகளையும் வளர்த்து கொள்ள மாட்டீர்கள். உங்களின் துணை ஓரளவிற்கு உங்களை போல் இருக்க ஆசைப்படுவீர்கள். உங்கள் மீது அனைவரும் சுலபமாக நம்பிக்கை வைப்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Discover What Your Eyeliner Style Reveals About You

Every woman has her own definite signature style of applying the eyeliner, which secretly tells what her outlook is towards the life. Find out what your eyeliner style says about your personality. 
Subscribe Newsletter