Latest Updates
-
காரசாரமான.. சேப்பங்கிழங்கு சாப்ஸ் - இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. மட்டன், சிக்கன் சாப்ஸ் தோத்துடும்.. -
மழைக்காலம் ஆரம்பிக்குது! இந்த வாஸ்து செடிகளை வீட்ல வச்சா… கஷ்டம் எல்லாம் பறந்துடும்! -
இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்த ஜப்பான்: உலக புகழ்பெற்ற இந்திய மாம்பழ வகைகளும்.. அவற்றின் பிறப்பிடமும்.. -
மணி பிளான்ட் செடியை இந்த திசையில் வைத்தால் போதும்… பண வரவு தானாக அதிகரிக்கும் ரகசியம்! -
அடுத்தடுத்து 4 முறை நிலையை மாற்றும் சனி பகவான்: ஜூலை முதல் இந்த 4 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
சாமை கார கொழுக்கட்டையும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் துரத்தப்போகுதாம் -
ஜூன் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
3 கத்திரிக்காயும், 4 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் செய்யுங்க.. எல்லாத்துக்கும் பக்காவா இருக்கும்.. -
வீட்டில் புகைபிடிக்கும் பழக்கம் இருக்கா? உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை நீங்களே இப்படித்தான் அழிக்கிறீர்கள்!
கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா - இப்படி செஞ்சா, 10 இட்லி கூட சாப்பிடுவாங்க!
Kumbakonam Special Kadappa Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபனா? அந்த இட்லி, தோசைக்கு எப்பவும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பாவை செய்யுங்கள்.
இந்த கடப்பா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கடப்பாவை சைடு டிஷ்ஷாக செய்தால், வீட்டில் உள்ளோர் கணக்கில்லாமல் இட்லி, தோசையை சாப்பிடுவார்கள். இந்த கடப்பாவை ஒருமுறை செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

இந்த கும்பகோணம் கடப்பா ரெசிபி குறித்து கோமதிஸ் கிச்சன் என்னும் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே அந்த கும்பகோணம் கடப்பா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* பச்சை மிளகாய் - 4
* பெரிய உருளைக்கிழங்கு - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* வேக வைத்து மசித்த பருப்பு
* சுடு தண்ணீர் - 2 கப்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1 கப்
* பச்சை மிளகாய் - 3
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் பாசிப்பருப்பை கழுவி சேர்த்து, அத்துடன் 1 1/2
கப் நீர், 4 பச்சை மிளகாய், பெரிய துண்டுகளாக்கப்பட்ட 2 பெரிய
உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து குக்கரை மூடி
அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, அதில் உள்ள உருளைக்கிழங்கை
வெளியே எடுத்து, பருப்பை நன்கு மசித்து விட வேண்டும்.
* பின் உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு தனியாக மசித்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் துருகிய தேங்காய், பச்சை மிளகாய், கசகசா,
சோம்பு, முந்திரி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, கல்பாசி,
சோம்பு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் கறிவேப்பிலையை
தூவி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கண்ணாடி பதத்தில் வெங்காயத்தை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை சேர்த்து, 2
கப் சுடுதண்ணீரை சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சிறிது
சுடுநீரை ஜாரில் ஊற்றி அலசி சேர்த்து, லேசாக மசித்து வைத்துள்ள
உருளைகிழங்கை சேர்த்து, 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கொத்தமல்லியைத் தூவி, எலுமிச்சை சாற்றினை சேர்த்து
கிளறி இறக்கினால், சுவையான கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா தயார்.



Click it and Unblock the Notifications