அமெரிக்கன் இங்கிலீஷ் - பிரிட்டிஷ் இங்கிலீஷ் மத்தியில் இருக்கும் சில குழப்பங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியர்களுக்கு இங்கிலீஷ் என்பது பெரிய சவால் அல்ல. ஆனால், சில சமயங்களில் இது பெரும் குழப்பமாக விளங்கும். இதற்கு காரணம் அமெரிக்கன் இங்கிலீஷ் மற்றும் பிரிட்டிஷ் இங்கிலீஷ். இந்த இரு வகைகளில் சில வார்த்தைகள் மட்டும் ஒரே உச்சரிப்பில் ஓரிரு எழுத்துகள் மாறி வரும்.

தர்மசங்கடமான ஆங்கில பிழைகள் மற்றும் அவற்றை தவிர்க்கும் முறைகள்!

இதை எல்லாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் தான் இப்போது இந்தியன் இங்கிலீஷ் என்ற இன்னொரு வகையை நமது ஆட்கள் புகுத்திவிட்டனர். ஆயினும் கூட இப்போதும் நாம் ஈமெயில், செய்தி எதாவது எழுதும் போது நிறைய பேருக்கு எது சரியானது என்ற குழப்பம் ஏற்படும். அப்படி குழப்பம் ஏற்படுத்தும் சில அமெரிக்கன், பிரிட்டிஷ் ஆங்கில வார்த்தைகள் பற்றி தான் நாம் காணவிருக்கிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Color vs Colour

Color vs Colour

வண்ணம் என்ற சொல் நமது இந்தியர்களை அவ்வப்போது குழப்பம் ஓர் வார்த்தையாக இருந்து வருகிறது. சிலர் எழுதும் போது Color என்றும், சிலர் Colour என்றும் எழுதுவது உண்டு.

Fulfill vs Fulfil

Fulfill vs Fulfil

நிறைவு (அ) நிறைவேற்றம் என்பதை ஆங்கிலத்தில் கூற Fulfill வார்த்தையை பயன்படுத்துகிறோம். இதை அமெரிக்கன் இங்கிலீஷில் Fulfill என்றும், பிரிட்டிஷ் இங்கிலிஷில் Fulfil என்றும் கூறவேண்டும்.

Center vs Centre

Center vs Centre

Center என்ற வார்த்தைக்கு இரண்டாக கூற முடியும் மையம், நடு (மத்தியில்). இதில் பெரும் குழப்பமே சிலர் Center, Centre பொருள் வேறுபாடு உள்ளதாக கருதுவது தான். உண்மையில் Center என்பது அமெரிக்கன் இங்க்லீஷ், Centre என்பது பிரிட்டிஷ் இங்கிலீஷ்.

Analyze vs Analyse

Analyze vs Analyse

ஆராய்ந்து என்பதை ஆங்கிலத்தில் Analyze என்று கூறுகிறோம். இதில் வரும் குழப்பம் என்னவெனில் Analyze என்பது அமெரிக்கன், மற்றும் Analyse என்பது பிரிட்டிஷ் இங்கிலீஷ்.

Pajamas vs Pyjamas

Pajamas vs Pyjamas

பைஜாமா எனப்படும் இரவு உடையை ஆங்கிலத்தில் Pajamas என்று கூறுவது வழக்கம். ஆனால், இதிலும் அமெரிக்கன், பிரிட்டிஷ் குழப்பம் உள்ளது என்பது சிலருக்கு மட்டுமே தெரியும். Pajamas என்பது அமெரிக்கன் மற்றும் Pyjamas என்பது பிரிட்டிஷ்.

Specialty vs Speciality

Specialty vs Speciality

சிறப்பம்சம் என்பதை நாம் ஆங்கிலத்தில் Speciality என்று கூறுகிறோம். பல சமயங்களில் நண்பர்கள் இருவர் மத்தியில் இந்த வார்த்தை எழுதும் போது பிழை என்ற தகராறு வர வாய்ப்புகள் உண்டு. ஏனெனில், Specialty என்பது அமெரிக்கன் இங்கிலீஷ் மற்றும் Speciality என்பது பிரிட்டிஷ் இங்கிலீஷ்.

Omelet vs Omelette

Omelet vs Omelette

முட்டையை கொண்டு சமைக்கப்படும் உணவு ஆம்லேட். ஆண்களுக்கு மிகவும் பிரியமான உணவு என்று கூட கூறலாம். ஆனால், இந்த வார்த்தையிலும் அமெரிக்கன் மற்றும் பிரிட்டிஷ் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. Omelet என்பது அமெரிக்கன் இங்கிலீஷ் மற்றும் Omelette என்பது பிரிட்டிஷ் இங்கிலீஷ்.

Story vs Storey

Story vs Storey

கதை என்பதை தான் ஆங்கிலத்தில் Story என்கிறோம். இந்த வார்த்தையிலும் அமெரிக்கன், பிரிட்டிஷ் வேறுபாடு இருப்பதை பெரும்பாலும் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆம், Story என்பது அமெரிக்கன் இங்கிலீஷ் மற்றும் Storey என்பது பிரிட்டிஷ் இங்கிலீஷ்.

Airplane vs Aeroplane

Airplane vs Aeroplane

விமானம் என்ற வார்த்தை பரவலாக நாம் அனைவரும் அறிந்தது தான். Airplane என்பது அமெரிக்கன் இங்கிலீஷ் மற்றும் Aeroplane என்பது பிரிட்டிஷ் இங்கிலீஷ்.

Oriented vs Orientated

Oriented vs Orientated

சார்ந்த என்ற வார்த்தைக்கு ஆங்கில சொல்லாக விளங்குவது Oriented. இதை அமெரிக்கன் இங்கிலீஷில் தான் Oriented என்று கூற வேண்டும். பிரிட்டிஷ் இங்கிலிஷில் Orientated என்று தான் கூற வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

American Eng vs British Eng Words With Different Spell

Here we have discussed about American English vs British English Ten Words With Different Spelling in tamil, take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter