பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளை கையாளுவதற்கான 6 வழிகள்!!!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

இந்த உலகம் பல்வேறு துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் முன்னேறியுள்ளனர். என்னதான் முன்னேற்றம் கண்டாலும் பெண்களிடம் ஆண்களின் அணுகுமுறையில் மட்டும் பெரிய முன்னேற்றம் இல்லை. இன்னமும் கூட பெண்களை தங்களின் காம இச்சைக்கு பயன்படுத்தவே பல ஆண்களும் முயல்கின்றனர். ஏன் 2015 இல் கூட, பாலியல் சம்பந்தமான கிண்டலும், பாலியல் தொந்தரவுகளும் பரவலாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர முடிவுக்கு வருகிற மாதிரி தெரியவில்லை.

ஏன், நம் தலைநகரமான டெல்லியில் பெண்களுக்கு இன்றைய தேதி வரை பாதுகாப்பு உள்ளதா? இது ஒரு பக்கம் இருந்தாலும் கூட இதனை எப்படி கையாள வேண்டும் என்பதை பெண்களும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த பாரபட்சம் நிறுத்தப்பட வேண்டும். மேலும் இவ்வகையான கொச்சையான செய்கைகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கும் ஆண்களை அதற்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும். இப்படி பாலியல் தொந்தரவு கொடுக்கும் நபருக்கு அது வேடிக்கையான ஒரு செயலாக தெரியலாம். ஆனால் மற்றவர்களுக்கு அதில் கண்டிப்பாக வேடிக்கை இருக்காது.

ஒரு நிறுவனம் என வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அங்கே இம்மாதிரி செயல்களுக்கு பஞ்சமே இல்லை. இன்றளவும் பெண்கள் பணியிடங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாகிறார்கள் என்பது வருத்தப்பட கூடிய விஷயமாகும். சரி, அதற்காக அவைகளை அப்படியே விட்டு விட முடியுமா? பெண்கள் இதனை எப்படி கையாளுவது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவ்வகையான ஆண்களுக்கு சவுக்கடி கொடுக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவர்களை புறக்கணியுங்கள்

அவர்களை புறக்கணியுங்கள்

நீங்கள் பதிலுக்கு எதிர்ச்செயல் ஆற்றுவீர்கள் என்ற எண்ணத்தில் தான் பாலியல் ரீதியான கருத்துக்கள் கூறப்படுகிறது. மிக கொச்சையான நகைச்சுவைகள், கிண்டல் கேலிகள் அல்லது அருவெறுக்கத்தக்க பேச்சு போன்றவைகளும் பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொந்தரவுகளே. இதனை கையாள சிறந்த வழி, இவ்வகையான ஆண்களை புறக்கணித்து விடுங்கள். அதற்கு காரணம், இவர்கள் எல்லாம் தம் மீது கவனம் விழ வேண்டும் என எண்ணி இதை செய்பவர்கள்.

பாத்திரத்தை மாற்றுங்கள்

பாத்திரத்தை மாற்றுங்கள்

பாலியல் தொந்தரவுகளில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், குற்றம் புரிபவர் கடுமையாக இருப்பதை போன்ற தோற்றத்தை வெளிப்படுத்துவார். அவ்வகையான ஆண்களிடம் இருந்து பாலியல் தொந்தரவு அளிக்கும் பேச்சுக்கள் வந்தால், அதே போன்று நீங்களும் பதிலளியுங்கள். பணியிடத்தில் பாலியல் தொந்தரவுகளை கையாள வேண்டுமானால் உங்களை சீண்டுபவர்களின் போக்கையே நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வளவு தான், தன்னாலே அவர் வாய் மூடிக்கொள்ளும்.

அவர்களுக்கு புரிய வைத்தல்

அவர்களுக்கு புரிய வைத்தல்

சில நேரங்களில் பணியிடத்தில் பாலியல் ரீதியாக ஜோக் அல்லது கிண்டல் செய்பவர்கள், அதனை உணர மாட்டார்கள். அது அவர்களுக்கு இயல்பான ஒன்றாக தெரியும். அப்படிப்பட்ட சூழல்களில், அவர்களிடம் தனியாக பேசி, அவர்களின் இந்த பேச்சினால் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.

உங்கள் குறைகளை தெரிவிக்கவும்

உங்கள் குறைகளை தெரிவிக்கவும்

பாலியல் ரீதியாக பேசுபவர்களை கண்டு நீங்கள் பயப்படுவதும், அவர்களுக்கு எதிர் செயலாற்றாமல் இருப்பதும் ஒன்றும் தவறில்லை. அப்படிப்பட்ட சூழல்களில் பாலியல் தொந்தரவுகளை கையாளுவதற்கு ஒரு வழி உள்ளது. உயர் மட்ட நிர்வாகத்திடம் சென்று உங்கள் குறைகளை தெரிவியுங்கள். அதற்கு பிறகு நீங்கள் எதை பற்றியும் கவலை படத்தேவையில்லை.

பெண்கள் குழு ஒன்றை அமைக்கவும்

பெண்கள் குழு ஒன்றை அமைக்கவும்

நீங்கள் சந்தித்தது போலவே இவ்வகையான அனுபவங்களை சந்தித்துள்ள பெண்களை ஒன்று திரட்டி ஒரு ஆதரவு குழுவை உருவாக்கவும். இது உங்களுக்கு நீண்ட கால பயனை அளிக்கும். தனி நபர் என இல்லாமல் ஒரு குழுவாக இருந்தால் யாருக்குமே பயம் இருக்க தான் செய்யும். பணியிடத்தில் இவ்வகையான தொந்தரவுகளைப் பற்றி புகாரளிக்க செல்லும் போதும் உங்களுக்கு ஆதரவாக ஓர் கூட்டம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

வேறு வேலையை முயற்சிக்கவும்

வேறு வேலையை முயற்சிக்கவும்

சுய மரியாதையை காட்டிலும் வேலை ஒன்றும் பெரியதில்லை. அவ்வகையான ஆண்களின் செயல்களை தடுத்து நிறுத்த நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளிலும் தோல்வியை கண்டால், வேறு பணியை தேடிக் கொள்வது தான் சிறந்த தேர்வாக இருக்கும். வேறு வேலை தேடப்போகிறீர்கள் என்றால், மேலிடம் உங்கள் புகாரின் மீது எந்த ஒரு அக்கறையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று தான் அர்த்தமாகும். அதனால் அப்படிப்பட்டவர்களிடம் வேலை பார்ப்பதை விட வேறு எங்காவது வேலை செய்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Ways To Deal With Sexism At Your Workplace

Sexism is as relevant as ever. We list out ways to deal with it at your workplace. Read on.