Tamil New Year 2026: இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!

Tamil New Year 2026 Predictions: வேத நாட்காட்டியின் படி, ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் ஒரு சுழற்சியை முடித்து, மீண்டும் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி சூரியனின் ஒவ்வொரு சுழற்சி முடியும் போது புதிய தமிழ் ஆண்டுகள் பிறக்கின்றன. அந்த வகையில் ஏப்ரல் 14 ஆம் தேதி மேஷ ராசிக்குள் சூரியன் நுழையும் போது பராபவ தமிழ் ஆண்டு பிறக்கிறது.

பொதுவாக புத்தாண்டு என்பது புதிய தொடக்கங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த புதிய தமிழ் ஆண்டில் சனி, குரு, ராகு, கேது போன்ற போன்ற முக்கிய கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றி, மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் இந்த புத்தாண்டில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் எப்படி தாக்கம் தெரியுமோ, அதேப் போல் 27 நட்சத்திரக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கம் தெரியும்.

Tamil New Year 2026 Predictions People Born Under These Nakshatras Will Be Lucky

அதுவும் இந்த பராபவ புத்தாண்டில் கிரகங்களின் நிலைகளால் சில நட்சத்திரகாரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி நிலை மற்றும் தொழிலில் முன்னேற்றம், முதலீடுகளில் லாபம் போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது தமிழ் புத்தாண்டில் சகல ஐஸ்வர்யங்களையும் பெறப்போகும் நட்சத்திரக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

1. அஸ்வினி

அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டில் குரு பகவானின் பரிபூர்ண அருள் கிடைக்கப் போகிறது. இதனால் வாழ்வில் பெரிய மாற்றங்களைக் காண்பார்கள். முக்கியமாக தொழிலில் சந்தித்து வந்த தடைகள் நீங்கி, நல்ல லாபம் கிடைக்கும்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சியடைவீர்கள். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

முதலீடுகளில் இருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். இன்னும் சிறப்பான பலனைப் பெற வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து குரு பகவானுக்கு நெய் விளக்கேற்றி மனதார வழிபாடு செய்தால், வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் பெறக்கூடும்.

2. ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டில் சுக்கிரன் உச்ச நிலையை அடைவதால், வாழ்வில் பெரும் மாற்றங்கள் ஏற்படக்கூடும். முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன வீடு, வாகனம் வாங்கும் கனவு இந்த புத்தாண்டில் நிறைவேறும்.

குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்னும் சிறப்பான பலனைப் பெற, இந்த நட்சத்திரக்காரர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபம் போட்டு, மல்லிகை, வெள்ளை தாமரை போன்றவற்றை வாங்கி படைத்து மனதார வழிபாடு செய்ய வேண்டும்.

3. புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வருகிற தமிழ் புத்தாண்டு ஒரு திருப்புமுறையாக இருக்கும். ஏனெனில் சனி பகவான் சாதகமான நிலையில் இருப்பதால், இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும்.

கடன் சுமைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழிலைப் பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இன்னும் சிறப்பான பலனைப் பெற ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிபகவானுக்கு எள்ளு தீபம் ஏற்றி, அன்னதானம் அல்லது கருப்பு ஆடைகளை தானம் செய்யுங்கள்.

4. மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் பெரிய அளவில் வளர்ச்சியைக் காண்பீர்கள். நீண்ட காலமாக போராடி வந்த அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

அரசு தேர்வு எழுதி காத்திருப்வர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். நிதி ரீதியாக, பணப்புழக்கம் சீரான இருக்கும். நிலையான வருமானம் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அதோடு, ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வதன் மூலம் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தானம் செய்வது சகல நன்மைகளைத் தரும்.

5. அவிட்டம்

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் புத்தாண்டு ஒரு எதிர்பாராத நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும். இந்த ஆண்டில் கேது பகவானின் அருள் கிடைப்பதால், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். தீராத கடன்கள் அனைத்தும் இந்த ஆண்டில் தீரும். பல வழிகளில் இருந்து புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சேமிப்பு உயரும். நிறைய கோவில்களுக்கு பயணம் செய்வீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டைகள் முடிவுக்கு வரும். சுப காரியங்களுக்கு செலவு செய்வீர்கள். இது மனநிறைவைத் தரும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கு நிறைய லாபம் கிடைக்கும்.

இன்னும் சிறப்பான பலன் கிடைக்க செவ்வாய்க்கிழமை அல்லது ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் கோதுமை பொருட்களை கேதுவிற்கு படைத்து வழிபாடு செய்யுங்கள். அதோடு விநாயகருக்கு அருகம்புல்லை வழங்கி வழிபாடு செய்வதன் மூலம், வளமான வாழ்க்கையை வாழலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, April 13, 2026, 9:54 [IST]
Desktop Bottom Promotion