ச்சீ!!! பாத்ரூமில் இதெல்லாமா செய்வாங்க??

By: viswa
Subscribe to Boldsky

எந்த கடனை வேண்டுமானாலும் பாக்கி வைக்கலாம். ஆனால், பாக்கி வைக்க கூடாத ஒரே கடன், காலை கடன். இது நமக்கும் நல்லதல்ல, நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதல்ல. நம்மில் பலருக்கு இந்த வினோத பழக்கம் இருக்கலாம், பாத்ரூம் சென்றால் சிலர் மணிக்கணக்கில் அங்கேயே இருப்பார்கள்! அப்படி என்னதான் செய்வார்கள் என அவர்களை தவிர யாருக்கும் தெரியாது. இதை நீங்க உங்கள் வீட்டிலோ அல்ல நண்பர்கள் மத்தியிலோ கண்டிப்பாக பார்த்திருக்க கூடும். நாம் என்னதான் நச்சரித்து கேட்டாலும் இந்த கேள்விக்கான பதில் மட்டும் கிடைக்காது.

இணையதளத்தில் தேடினால் கிடைக்காதது எதுவும் இல்லை, அப்படி கிடைத்த இந்த கேள்விக்கான பதில் இப்போது உங்களுக்காக. ஒன்றல்ல இரண்டல்ல மணிக்கணக்கில் கழிவறையில் நேரம் கழிப்பவர்கள், 21 செயல்கள் செய்கிறார்கள் என விடைக் கிடைத்துள்ளது. இதில் பல விஷயங்கள் வினோதமாகவும், குழந்தைத்தனமாகவும் இருக்கின்றன. சரி வாருங்கள் இனி, அந்த விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்துக் கொள்ளல்லாம்...

13 Reasons Why That Makes You To Feel, Bathroom Is The Best Place On Earth

பிரச்சனைகளை பற்றி யோசிப்பது

அன்றாட வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பாத்ரூமில் தான் பலரும் யோசிப்பதாக கூறுகின்றனர். சரி தான் அமைதியாக யோசிக்க அங்கு மட்டும் தான் நேரம் இருக்கும்.

தனுக்கு தானே பேசிக்கொள்வது

பலருக்கு இந்த பழக்கம் இருக்கிறது. ஏன் இதை படிக்கும் உங்களுக்கே கூட இந்த பழக்கம் இருக்கலாம். தனுக்கு தானே பேசிக்கொண்டு, அவர்களது செயல்களை பற்றி பட்டிமன்றம் வைத்துக்கொள்வார்களாம் பலர்.

கவலையை மறக்குமிடம்

நமது வீட்டிலே கூட அம்மா பல சமயங்களில் இதை சொல்லி கேட்டுருப்போம், "சும்மா அத நெனச்சு கவலைப்படாம போய் குளிச்சுட்டு வாடா". ஆம்! பல பேர் அவர்களது கவலையை மறந்துபோக அதிக நேரம் பாத்ரூமில் குளிப்பர்கலாம்.

நானே ராஜா, நானே மந்திரி!

சிலர் பாத்ரூம் தான் தங்கள் இஷ்டப்படி இருக்க ஏற்ற இடம் என எண்ணுகின்றனர். அதனால், அங்கு பாட்டு கேட்பது, புத்தகம் படிப்பது என குளித்துக்கொண்டே நேரம் கழிக்கின்றனர்.

13 Reasons Why That Makes You To Feel, Bathroom Is The Best Place On Earth

நடந்ததை எண்ணி பார்ப்பது

நாம் ஏன் அப்படி செய்தோம், எதற்காக அப்படி பேசுனோம் என கடந்த விஷயங்களை எல்லாம் சிலர் பாத்ரூமில் தான் யோசிகின்றனர்.

குழந்தைத்தனம்

குழந்தைகள் சில நேரம் குளிக்கும் போது சோப்பை நீரில் கரைத்து விளையாடுவது, தண்ணீரை ஊற்றி ஊற்றி விளையாடுவது போல சில காரியங்கள் செய்யும். இதே போல பலர் பெரியவர்கள் ஆனாலும் பாத்ரூமில் விளையாடிக் கொண்டு நேரம் கழிக்கின்றனர்.

ஒத்திகை

பலருக்கு நடனம் ஆடி, பாட்டு பாடி ஒத்திகை பார்க்கும் இடமாக இருக்கிறது பாத்ரூம். நம் நாட்டில் பல சூப்பர் சிங்கர்ஸ் பாத்ரூமில் தான் உதயம் ஆகின்றனர் போல.

செல்போன் விளையாட்டுகள்

பலர் பாத்ரூமில், அவர்களுக்கு பிடித்த செல்போன் விளையாட்டுகளை விளையாடி அதிக ஸ்கோர் எடுத்து சாதனைப் புரிகின்றனராம்.

புதிய ஐடியா!

பலருக்கு எங்கும் யோசித்து கிடைக்காத பல ஐடியாக்கள், பாத்ரூமில் தான் கிடைக்கிறதாம். ஆசானி மூலையில் யாரோ ஞான மூலையும் சேர்த்து வைத்துவிட்டார்கள் போல.

13 Reasons Why That Makes You To Feel, Bathroom Is The Best Place On Earth

எதிர்காலத்தை பற்றிய யோசனை

வீட்டு வேலைகளில் இருந்து அலுவலக வேலை வரை எதிர்காலத்தை பற்றிய அனைத்துத் திட்டங்களையும் பாத்ரூமில் தான் வியூகம் வகுக்கின்றனர் பலர்.

சமூக வலைத்தளங்கள்

முகப்புத்தகம், ட்விட்டர், என பலர் அவர்களது சமூக வலைத்தளங்களில் பாத்ரூமில் இருந்தபடியே மூழ்கி விடுகின்றனராம்.

இரகசிய அழைப்புகள்

பல பருவ வயதினர் அவர்களுக்கு வரும் செல்போன் அழைப்புகளை பாத்ரூமில் இருந்து தான் எடுத்து பேசுகின்றனர் என கூறப்படுகிறது.

வெளியில் செய்ய முடியாததை

இன்னும் சிலர் வெளியில் செய்ய முடியாத பல விஷயங்களை பாத்ரூமில் தான் செய்கின்றனராம். அதாவது திருட்டு தனமாக புகைப்பிடிப்பது, மற்றும் நீங்கள் மனதில் நினைப்பதையும் கூட...

Story first published: Monday, February 16, 2015, 18:46 [IST]
Subscribe Newsletter