For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்தில் உள்ள முதன்மையான 10 சக்தி வாய்ந்த ராணுவங்கள்!!!

By Ashok CR
|

உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவம் என்ற பட்டியலை பொறுத்த வரையில் மேற்கத்திய நாடுகள் தான் மேலோங்கி இருக்கிறது என்ற பேச்சுக்கே இனி இடமில்லை. தங்களை பாதுகாத்து கொள்வதற்காக இன்று பல நாடுகளும் தங்களின் ராணுவத்தை வலுமிக்கதாக மாற்றி கொண்டு வருகிறது. அதனால் உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் புது வரவாக சில நாடுகள் நுழைவது ஆச்சரியப்படும் விஷயமாக கருதப்படவில்லை.

உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான 8 நகரங்கள்!!!

ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகள் பக்கம் அதிகமாக சாய்ந்திருந்த வீதம் இன்று மாறத் துவங்கியுள்ளது. உதாரணத்திற்கு, இந்தியா மற்றும் சீனா உட்பட, ஆசிய நாடுகள் பலவும் தங்களின் பாதுகாப்பிற்காக பட்ஜெட் செலவுகளை அதிகரித்து வருகின்றனர். அதே போல் தன்னுடைய ராணுவ பலத்தை சக்தி வாய்ந்ததாக காட்டும் எண்ணத்தில் பலவீனமான அதன் அண்டை நாடுகளின் மீது மேலாதிக்கத்தை செலுத்தி வருகிறது.

உலகத்தில் உள்ள மிகவும் மோசமான மற்றும் கொடூரமான 10 சர்வாதிகாரிகள்!!!

உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவங்களைப் பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். ராணுவ தொழில்நுட்பம், சிறந்த ராணுவ வீரர்களை உருவாக்கும் பயிற்சிகள் மற்றும் செயற்பாட்டு நுட்பங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ராணுவங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் உள்ள சில சக்தி வாய்ந்த ராணுவம் தான் உலகத்தில் உள்ள மிகப்பெரிய ராணுவங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமெரிக்கா

அமெரிக்கா

ஈடு இணையில்லாத அளவிற்கு 612 பில்லியன் அமெரிக்க டாலரை பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு ஒதுக்கியுள்ள அமெரிக்காவின் ராணுவம் மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும், நுட்பம் வாய்ந்ததாகவும் செயல்படுகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு 19 விமானம் தாங்கிகளை வைத்துள்ளது அமெரிக்கா. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் விமான தாங்கிகளையும் கூட்டினாலும் கூட இவர்களுக்கு அருகில் செல்ல முடியாது; அதன் எண்ணிக்கை மொத்தம் 14 மட்டுமே. உங்களுக்கு தெரியுமா - பாதுகாப்பிற்காக பட்டியலில் உள்ள அடுத்த 10 நாடுகள் செலவழிக்கும் கூட்டு தொகையை விட அமெரிக்க அதிகமாக செலவிடுகிறது. அதனால் தான் உலகத்தில் உள்ள மிகப்பெரிய சக்தி வாய்ந்த ராணுவத்தை அமெரிக்கா கொண்டுள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

USSR காலத்தை விட தற்போதைய ரஷ்ய ராணுவம் தான் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளது. தன் செலவுகளை வருடந்தோறும் அதிகரித்து கொண்டே வரும் ரஷ்யா, தன் கவனத்தை உச்ச சிறப்புமிக்க ராணுவ தொழிநுட்ப ஆராய்ச்சியில் செலுத்தியுள்ளது. உலகத்தில் உள்ள மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக விளங்குகிறது ரஷ்யா. அதே போல மிகப்பெரிய பீரங்கி படையை கொண்டுள்ளது - கிட்டத்தட்ட 15,500 பீரங்கிகளை வைத்துள்ளது. முனைப்புடன் செயல்படும் அதன் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 7,60,000 பேர்கள்.

சீனா

சீனா

உலகத்தில் உள்ள மிகப்பெரிய ராணுவம் சீனா. அதே போல் ராணுவம் மற்றும் பாதுகாப்பிற்கு செலவு செய்வதில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள நாடும் சீனா. ராணுவ செலவுகளை அதிவேகமாக அதிகரித்து வருகிறது சீனா. இறக்குமதியை பெருமளவில் குறைத்துக் கொண்ட சீனா தற்போது தன் கவனத்தை உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சியின் மீது செலுத்தியுள்ளது. தன் அண்டை நாடுகள் மீதான அதன் சமீபத்திய மோதல்கள், அதன் தாக்கக்கூடிய அணுகுமுறையை எடுத்துக் காட்டுகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத 25 லட்ச ராணுவ வீரர்களை கொண்டுள்ளது சீனா.

யூனைடட் கிங்டம்

யூனைடட் கிங்டம்

கடந்த 5 வருடத்தில் யூனைடட் கிங்டமின் பாதுகாப்பு பட்ஜெட் கிட்டத்தட்ட 20 சதவீத சரிவை சந்தித்துள்ளது. மேலும் தன் ராணுவத்தின் அளவையும் 20 சதவீத அளவிற்கு குறைக்க அது திட்டமிட்டுள்ளது. தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்துவதிலும் தன் கவனத்தை செலுத்தியுள்ளது UK. உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவத்தின் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்துள்ளது UK.

இந்தியா

இந்தியா

தன் ராணுவத்தை நவீனமயமாக்குவதில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது இந்தியா. அதனால் தன் ராணுவ செலவுகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வியப்பூட்டும் வகையில் 1.1 கோடி ராணுவ வீரர்களை கொண்டுள்ள இந்திய ராணுவம் தான், எண்ணிக்கை அடிப்படையில் உலகத்தில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய இராணுவமாகும். ராணுவத்திற்காக இந்தியா 46 பில்லியன் அமெரிக்க டாலரை செலவு செய்கிறது. வரும் வருடங்களில் இந்த தொகை அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் உலகத்தில் உள்ள மிகப்பெரிய ஆயுத பொருட்கள் இறக்குமதியாளராக விளங்குகிறது இந்தியா.

பிரான்ஸ்

பிரான்ஸ்

2013-ல் ராணுவத்திற்கு செலவிடுவதை வெகுவாக குறைத்து கொண்ட ஜப்பான், ராணுவத்திற்கான தன் செலவுகளில் 10 சதவீதத்தை குறைத்துக் கொண்டது. ஆராய்ச்சி மற்றும் உயரிய தொழில் நுட்ப உபகரணங்களில் செலவு செய்வதில் கவனம் செலுத்துவதன் காரணத்தினாலேயே இந்த முடிவை எடுத்தது. பிரான்ஸ் நாடோ தன் ராணுவத்திற்காக 40 பில்லியன் அமெரிக்க டாலருக்கு சற்று கூடுதலாக செலவிடுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்ரிக்காவில் முனைப்புடன் செயல்படுகிறது அவர்களின் ராணுவம்.

ஜெர்மனி

ஜெர்மனி

ஐரோப்பிய ஐக்கியத்தில், ஜெர்மன் பொருளாதாரமும் ராணுவமும் ஒப்பிடலுக்கு அப்பால் திகழ்கிறது. NATO-வின் சுறுசுறுப்பான உறுப்பினராக விளங்கும் ஜெர்மனி, தன் ராணுவத்தை பொறுத்த வரையில், ஈர்க்கத்தக்க உயர்ந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தவதாக மார்தட்டுகிறது. ராணுவத்தை விட தன் பொருளாதாரத்தின் மீதே அதிக கவனம் செலுத்துகிறது இந்த நாடு. இந்த ஒரே முக்கிய காரணத்தினால் தான் மற்ற முக்கிய சக்திகளில் இது பின் தங்கியுள்ளது.

ஜப்பான்

ஜப்பான்

இரண்டாம் உலகப் போரின் போது எதிர்கொள்ளும் பிடிவாதத்திற்காக அறியப்பட்ட நாடான ஜப்பான் தான் சக்தி வாய்ந்த ராணுவ பட்டியலில் அடுத்த இடத்தை பிடிக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட படுவீழ்ச்சிக்கு பின், குறிப்பிடத்தக்க அளவில் தன் ராணுவத்தின் அளவை குறைத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு உள்ளானது ஜப்பான். இருப்பினும் உலகத்தில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள ஜப்பான், ராணுவத்திற்காக மிகப்பெரிய தொகையை செலவு செய்ய தான் செய்கிறது. சீனா மற்றும் ரஷ்யா கொடுக்கும் இடையூறுகளே இதற்கு காரணமாக விளங்குகிறது.

தென் கொரியா

தென் கொரியா

அண்டை நாடுகளான சீனா மற்றும் வட கொரியாவிடம் இருந்து எதிர்பாராத போட்டிகளும் அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருவதால், ராணுவத்திற்கு உண்டாகும் செலவினை சீரான முறையில் அதிகரித்து வருகிறது தென் கொரியா. 1950-களில் நடந்த கொரியா போரிலிருந்தே வட கொரியாவும், தென் கொரியாவும் நிலையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பவும் அப்பவும் நுட்பத்துடன் கூடிய ஏவுகணைகளை சோதனை செய்து வரும் இந்நாடு, ராணுவ செலுவுகளுக்காக 40 பில்லியன் டாலர்களை செலவு செய்கிறது.

இஸ்ரேல்

இஸ்ரேல்

தன் சக்தியை தொடர்ந்து வெளிக்காட்டி வரும் நாடான இஸ்ரேல், கடந்த 50 ஆண்டுகளாக பல சச்சரவுகளையும் எல்லை பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறது. பயிற்சி மற்றும் செயற்பாட்டின் நுட்பங்களுக்கு புகழ் பெற்றதாகும் இஸ்ரேல் ராணுவம். எண்ணிக்கையின் அடிப்படையில் குறைவாக இருந்தாலும், உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த ராணுவத்தில் இஸ்ரேல் ராணுவமும் ஒன்றாகும். ஈடு இணையில்லா ராணுவ தொழில் நுட்பமும் கூட இதன் பலத்திற்கு காரணமாக விளங்குகிறது. ராணுவ செலவிற்காக தன் பட்ஜெட்டில் இருந்து 20 சதவீதத்தை இந்நாடு செலவழிக்கிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Most Powerful Armies In The World

As far as the list of most powerful armies in the world is concerned, the usual names of the west aren't entirely dominant anymore. With several countries splurging on strengthening their defences in order to defend themselves and project military might, it comes as no surprise that there are quite a few new entrants to this list of most powerful armies in the world.
Desktop Bottom Promotion