இந்த சூப்பை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகரும் கண்ட்ரோலா இருக்கும்..

Posted By:

Weight Loss Vegetable Kambu Soup Recipe In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் உள்ளீர்களா? உங்கள் டயட்டில் நல்ல சுவையான அதே சமயம் சத்தான உணவுகளை சேர்க்க நினைக்கிறீர்களா? அதுவும் காலையில் தான் எடையைக் குறைக்க என்ன சாப்பிடுவது என்று தெரியவில்லையா?

அப்படியானால் கம்பு மற்றும் காய்கறிகள் இருந்தால், அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் கம்பு சூப் தயாரித்து குடியுங்கள். இந்த கம்பு சூப் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, ருசியாகவும் இருக்கும். மேலும் இது உடல் எடையைக் குறைக்க உதவுவதோடு, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உதவும். அதுமட்டுமின்றி, இந்த சூப்பை பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் சாப்பிடலாம்.

Weight Loss Vegetable Kambu Soup How To Make Vegetable Pearl Millet Soup

இந்த வெஜிடேபிள் கம்பு சூப் குறித்து திஎவிரிடேகுக்கிங்தமிழ் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெஜிடேபிள் கம்பு சூப் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்,

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* கம்பு - 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

சூப்பிற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சின்ன கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 4 (பொடியாக நறுக்கியது)
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* ஸ்வீட் கார்ன் - 1/4 கப்
* ப்ராக்கோலி - சிறிது (நறுக்கியது)
* காலிஃப்ளவர் - சிறிது (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் கம்பை நீரில் 2-3 முறை கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரில் அரைத்த கம்பை சேர்த்து, அத்துடன் 3 கப் நீரை ஊற்றி, சீரகம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கம்பை மசித்து விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, ஸ்வீட் கார்ன், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் ஆகியவற்றை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் 1 கப் நீரை ஊற்றி, 1 பச்சை மிளகாயை கீறி சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து, காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் வேக வைத்துள்ள கம்பை சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறிவிட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான வெஜிடேபிள் கம்பு சூப் தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, April 14, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion