Latest Updates
-
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க..
பாவக்காயை இந்த மாதிரி கர்நாடக ஸ்டைலில் புளி குழம்பு செய்யுங்க - கசப்பே இல்லாம சூப்பரா இருக்கும்
Karnataka Style Pavakkai Puli Kulambu Recipe in Tamil: காய்கறிகளிலேயே பெரும்பாலான நபர்களுக்கு பிடிக்காத காய்கறி என்றால் அது பாகற்காய்தான். ஆனால் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்திருப்பது பாகற்காயில்தான். பாகற்காயை பெரும்பாலான மக்கள் வெறுப்பதற்கு காரணம் அதன் கடுமையான கசப்பு சுவைதான். ஆனால் ஆரோக்கியமாக வாழ விரும்புபவர்கள் நிச்சயம் அவர்கள் உணவில் பாகற்காயை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பாகற்காயை தவிர்க்கவும் முடியாது, கசப்பாகவும் சாப்பிட முடியாது என்பவர்களுக்கு பாகற்காயை கசப்பு இல்லாமல் சமைத்து சாப்பிடுவதுதான் ஒரே வழி. பொதுவாக பாகற்காயை பொரியல் செய்து சாப்பிடுவார்கள், சிலசமயங்களில் சாம்பார் வைப்பார்கள். ஆனால் கர்நாடகாவில் பாகற்காயை கசப்பே தெரியாமல் சுவையாக ஒரு ஸ்பெஷல் குழம்பு செய்வார்கள். இந்த பாகற்காய் புளி குழம்பு செய்வதற்கு எளிதானது, அதேசமயம் சுவையானதும் கூட.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் பாகற்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா பாகற்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- எள் - 1 ஸ்பூன்
- சீரகம் - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 ஸ்பூன்
- துருவிய தேங்காய் - அரை கப்
- வர மிளகாய் - 8
- பாகற்காய் - 1 (சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கியது)
- புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு
- வெல்லம் - 1 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 3 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- வர மிளகாய் - 1
- பெருங்காயம் - 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கொத்தமல்லி இலைகள் - அலங்கரிக்க
செய்முறை:
- பாகற்காயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- புளியை கரைத்து சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம்பருப்பு, எள், சீரகம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் வர மிளகாய் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். தேங்காய் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்து ஆற விடவும்
- இந்த கலவை ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதன் பின் கடுகு, வர மிளகாய் , பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கியாய் பாகற்காயை சேர்த்து நன்றாக கிளறவும். பாகற்காய் பாதி வேகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த மசாலா, புளிச்சாறு, வெல்லம், உப்பு மற்றும் தண்ணீர் நன்றாக கொதிக்க விடவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து 2 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
- பிரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து அதன் பதத்தை சரிபார்க்கவும். குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
- இறுதியாக கொத்தமல்லி சேர்த்து கிளறினால் சுவையான கர்நாடகா ஸ்டைல் பாகற்காய் குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications