For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் உள்ள விசித்திரமான உயிரினங்கள்!!!

By Babu
|

கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிரினமும் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டு தான் இருக்கும். ஆனால் ஒருசில உயிரினங்களைப் பார்த்தால், அவை விசித்திரமாக காணப்படுவதோடு, அச்சமூட்டும் வகையிலும், நினைத்தாலே தூக்கம் வராதவாறு மனதில் பதிந்து இருக்கும். அப்படி உலகில் பல்வேறு உயிரினங்கள் மிகவும் விசித்திரமாக உள்ளது. மேலும் அவற்றைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இதுப்போன்று வேறு ஏதாவது படிக்க: உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14 உயிரினங்கள்!!!

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில விசித்திரமான உயிரினங்களை உங்களின் பார்வைக்காக கொடுத்துள்ளது. ஆனால் கீழே கொடுக்கப்பட்ட உயிரினங்கள் போன்று பல மில்லியன் விசித்திரமான உயிரினங்கள் உலகில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இப்போது உலகில் படைக்கப்பட்ட விசித்திரமான உயிரினங்களில் சிலவற்றைப் பார்ப்போமா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அய் அய் (Aye Aye)

அய் அய் (Aye Aye)

இது இரவு நேரங்களில் நடமாடும் விலங்குகளில் ஒன்று. இந்த உயிரினத்தைப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கும். இது மடகாஸ்கர் பகுதியில் காணப்படும் ஒரு உயிரினம். ஆனால் இந்த உயிரினத்தைப் பார்த்தால் துரதிர்ஷ்டம் தொற்றிக் கொள்ளும் என்று அந்த பகுதியில் உள்ள மக்கள் இதனை கொன்றுவிடுகின்றனர்.

ஆக்சோலால் (Axolotl)

ஆக்சோலால் (Axolotl)

இந்த உயிரினத்தைப் பற்றி ஒரு சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்றால், இந்த உயிரினத்திற்கு தனது உறுப்பை மீண்டும் உருவாக்கும் சக்தி உள்ளது.

எட்டி நண்டு (Yeti Crab)

எட்டி நண்டு (Yeti Crab)

இந்த வகை நண்டானது உடல் முழுவதும் ரோமங்களைக் கொண்டிருப்பதோடு, இந்த நண்டு சமீபத்தில் தான் விலங்குகள் ராஜ்ஜியத்தில் சேர்க்கப்பட்டது.

வைப்பர் மீன் (Viper Fish)

வைப்பர் மீன் (Viper Fish)

இந்த மீனானது கடலில் மிகவும் ஆழத்தில் இருக்கும். அதிலும் பகல் நேரத்தில் 5000 அடி ஆழத்தில் காணலாம். இது மிகவும் ஆபத்தான உயிரினம். மேலும் இது காடுகளில் 30-40 வருடம் வாழக்கூடியது.

இலைவடிவ கடல் டிராகன் (Leafy Sea Dragon)

இலைவடிவ கடல் டிராகன் (Leafy Sea Dragon)

இந்த உயிரினம் உங்கள் கண் முன் இருந்தால் கூட, இதனை கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவில் இது பார்ப்பதற்கு இலை போன்று இருக்கும். ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், அதன் கண்களைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்.

நீள மூக்கு குரங்கு (Proboscis Monkey)

நீள மூக்கு குரங்கு (Proboscis Monkey)

இந்த குரங்கின் மூக்கு மிகவும் நீளமாக இருப்பதால் தான், இதற்கு இந்த பெயர் வந்தது. மேலும் இந்த குரங்கின் முகம் சிவப்பு நிறத்தில் இருப்பதோடு, 10 செ.மீ நீளத்தில் மூக்கை கொண்டிருக்கும். இதுவும் உலகில் உள்ள புதிரான உயிரினங்களில் ஒன்று.

கல்ப்பர் விலாங்கு மீன் (Gulper Eel)

கல்ப்பர் விலாங்கு மீன் (Gulper Eel)

இந்த உயிரினமும் உலகில் உள்ள விசித்திரமான உயிரினங்களில் ஒன்று. இந்த மீனில் உள்ள ஒரு வேறுபாடு என்னவென்றால், இதன் வால் நீளமாக இருப்பதோடு, இதன் வாய் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

ஹாக்மீன் (Hagfish)

ஹாக்மீன் (Hagfish)

இந்த மீன் பார்ப்பதற்கு மீன் போன்று காணப்படாவிட்டாலும், இது கடலுக்கு அடியில் வாழும் ஒரு விசித்திரமான உயிரினம். மேலும் இது ஒருவித அறுவெறுக்கத்தக்க வகையிலான கோழைப் போன்றதை சுரக்கும் சக்தி கொண்டது.

நட்சத்திர மூக்கு கொண்ட உயிரினம் (Star Nosed Mole Animal)

நட்சத்திர மூக்கு கொண்ட உயிரினம் (Star Nosed Mole Animal)

இந்த உயிரினம் முதலில் பார்ப்பதற்கு விசித்திரமாக காணப்பட்டாலும், உண்மையில் இதற்கு கண் இல்லை. இருப்பினும் இது உணவை நட்சத்திரம் போன்று உள்ள உறுப்பின் மூலம் உணர்ந்து, உணவைக் கண்டுப்பிடித்து உண்ணும்.

குமிழ் மீன் (Blob Fish)

குமிழ் மீன் (Blob Fish)

இந்த மீனைப் பார்த்ததும், அனைவருக்கும் முதலில் தோன்றுவது இது ஏலியனாக இருக்குமோ என்று தான். மேலும் இந்த மாதிரியான உயிரினத்தை ஹாலிவுட் படமான 'மென் இன் ப்ளாக்' படத்தில் பார்த்திருப்போம். இது வெறும் கற்பனை மட்டுமின்றி, உலகில் உள்ள ஒரு உண்மையான உயிரினம் தான். குறிப்பாக இந்த உயிரினத்திற்கு எலும்புகளே கிடையாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weirdest Creatures On Earth

Today, Tamil Boldsky is going to enthrall you with some of the weirdest creatures on earth which will completely blow your mind. These weirdest creatures ever found on earth are ugly to look and have features which will make you have sleepless nights.
Desktop Bottom Promotion