Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
கொளுத்தும் கோடை வெயிலால் சருமம் சேதமடையக்கூடாதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. வெளியே சென்றாலே சருமம் பொசுங்கி போகும் அளவில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் கோடையில் எப்படி உடல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டியது அவசியமோ, அதேப் போல் சருமமும் கூடுதல் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். மேலும் சருமம் நேரடியாக வெயிலில் படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இது தவிர சருமத்திற்கு பாதுகாப்பளிக்கும் வகையில் சன்ஸ்க்ரீனை பயன்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, சருமத்தை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்படியான ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும். அதுவும் நம் வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போட வேண்டும்.

இப்படி ஃபேஸ் பேக் போடுவதால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்படும் மற்றும் சருமத்தின் அமைப்பும் சீராக இருக்கும். அதுமட்டுமின்றி, சருமம் ஆரோக்கியமாகவும், நீரேற்றத்துடனும் இருக்கும். மேலும் சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். இப்போது கோடைக்காலத்தில் வெயிலால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவும் சில ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
ஃபேஸ் பேக் #1
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு பிளெண்டரில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் சிறிது வெள்ளரிக்காயை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #2
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த பப்பாளியை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #3
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஃபேஸ் பேக் #4
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்து, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தை நீரேற்றத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளும்.
ஃபேஸ் பேக் #5
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 எலுமிச்சையின் சாற்றினை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துவதன் மூலம், சருமம் பளிச்சென்று பிரகாசமாகவும், நீரேற்றத்துடனும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications


