Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
வாஸ்துப்படி, வீட்டின் தென்மேற்கு திசையில் இவற்றை வெக்காதீங்க.. இல்ல கஷ்டம் தான் அதிகரிக்கும்!
Vastu Tips In Tamil: ஒருவரது வீட்டில் சந்தோஷமும், செல்வமும் நிலைத்திருக்க வேண்டுமானால், அந்த வீடு வாஸ்து சாஸ்திர விதிகளின் படி இருக்க வேண்டும். வாஸ்துப்படி இல்லாத வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, அந்த வீட்டில் அமைதி என்பதே இருக்காது. பிரச்சனைகளை தலைவிரித்தாடும். எனவே குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டியது அவசியம்.
வாஸ்து சாஸ்திரத்தில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு என எட்டு திசைகள் உள்ளன. வாஸ்து சாஸ்திர விதிகளின்படி, பொருட்கள் சரியான நிலையில் வைக்கப்பட வேண்டும்; இல்லையெனில், வாழ்க்கை முறையை படிப்படியாகப் பாதிக்கும் சில எதிர்மறை தாக்கங்களை சந்திக்க நேரிடும். அதுவும் நமது வீட்டின் தென்மேற்கு மூலையானது வீட்டின் அடித்தளம். இந்த பகுதியை வலிமையாகவும், நிலையானதாகவும் வைத்திருக்க வேண்டும்.

வாஸ்துப்படி, வீட்டின் தென்மேற்கு மூலையில் ஒருசில பொருட்களை வைத்திருக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் உள்ளோரின் வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். கீழே வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் தென்மேற்கு திசையில் எந்த பொருட்களை வைக்கக்கூடாது என்பது குறித்தும், அப்படி வைத்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பது குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. மீன் தொட்டி/நீரூற்று
வீட்டின் தென்மேற்கு பகுதியில் மீன் தொட்டி/நீரூற்று போன்றவற்றை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நீரானது எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கும். ஆனால் தென்மேற்கு பகுதியில் நிலைத்தன்மை தேவை. இந்த திசையில் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும்படியான பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை மீன் தொட்டி/நீரூற்று போன்றவற்றை வைத்தால், அது தேவையற்ற செலவை அதிகரித்து நிதி நிலையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் மற்றும் உணர்ச்சி சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்.
2. துடைப்பம்/மாப்/சுத்தப்படுத்தும் பொருட்கள்
எக்காரணம் கொண்டும் தென்மேற்கு பகுதியில் துடைப்பம், மாப் மற்றும் சுத்தப்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படியான பொருட்களை வைத்தால், அது அதிகாரம், மரியாதை மற்றும் அமைதி போன்றவற்றை இழக்க வைத்து, வாழ்க்கையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே உங்கள் வீட்டில் தென்மேற்கு பகுதியில் இந்த பொருட்களை வைத்திருந்தால், உடனே அப்புறப்படுத்துங்கள்.
3. குப்பை தொட்டி/கழிவுப் பொருட்கள்
வாஸ்துப்படி வீட்டின் தென்மேற்கு பகுதியில் குப்பைத்தொட்டி மற்றும் கழிவுப் பொருட்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். தென்மேற்கு திசையானது வலிமை மற்றும் உறவுகளை குறிக்கிறது. இந்த திசையில் குப்பைத்தொட்டி மற்றும் கழிவுப் பொருட்களை வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை ஈர்த்து, தவறான புரிதல்களை அதிகரித்து உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தும்.
4. லேசான அல்லது உடைந்த மரச்சாமான்கள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் தென்மேற்கு திசையில் உடைந்த மரச்சாமான்களை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் தென்மேற்கு திசைக்கு கனமான மற்றும் வலிமையான ஆற்றல் தேவை. இப்படிப்பட்ட திசையில் உடைந்த மரச்சாமான்களை வைத்தால், அது தொழில் வளர்ச்சியையும் குடும்ப நிலைத்தன்மையையும் பலவீனப்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
