Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
வீட்டில் ஏற்படும் தேவையற்ற செலவை குறைக்கணுமா? அப்ப இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...
Vastu Tips In Tamil: நாம் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிப்பதே செலவு செய்யத் தான். அதுவும் அத்தியாவசிய செலவுகளுக்கு பணத்தை செலவு செய்தால் பரவாயில்லை. ஆனால் சில சமயங்களில் தேவையற்ற செலவுகள் நாம் எதிர்பார்க்காத அளவில் வந்துவிடும். அதுவும் இப்படி வரும் தேவையற்ற செலவுகளை புறக்கணிக்கவும் முடியாது.
இப்படி ஒருவரது வீட்டில் பணத்தை சேமிக்க முடியாத அளவில் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியுள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்க வாஸ்து சாஸ்திரத்தில் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வழிகளை ஒருவர் பின்பற்றி, வீட்டில் மாற்றங்களை செய்து வந்தால், வீட்டில் ஏற்படும் தேவையற்ற செலவுகள் குறைவதோடு, சேமிப்பு அதிகரித்து, நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். இப்போது வீட்டில் ஏற்படும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் சில வாஸ்து குறிப்புகளைக் காண்போம்.
பிரதான வாசல் பரிகாரம்
ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல் வீட்டின் பிரதான வாசல் வழியாகத் தான் நுழைகிறது. ஆனால் எப்போது வீட்டில் பிரச்சனைகள் அதிகமாக எழுகிறதோ, அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகம் உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் வீட்டின் வாசலுக்கு அருகில் துளசி செடியையும், மற்றொரு பக்கத்தில் வாழை செடியையும் வையுங்கள். இப்படி வைப்பதன் மூலம், அந்த வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் நீங்கி, வீட்டில் தேவையற்ற செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரிக்கும்.
செப்பு நாணயங்கள்
வீட்டிற்கு பணம் வந்த வேகத்திலேயே செலவாகிவிடுகிறதா? அப்படியானால் செப்பு நாணயங்களை வீட்டின் பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். அதுவும் மகாசிவராத்திரி போன்ற சுப நாட்களில், 3 செப்பு நாணயங்களை எடுத்து, ஒரு சிவப்பு துணியில் கட்டி, பணம் வைக்கும் இடத்தில் வையுங்கள். இப்படி வைக்கும் போது, தேவையற்ற செலவுகள் குறையும்.
படிக சிவலிங்கம்
ஒரு வீட்டில் பூஜை அறை மிகவும் முக்கியமான பகுதியாகும். சொல்லப்போனால் பூஜை அறை முழு வீட்டின் ஆற்றலையும் பாதிக்கிறது. இப்படிப்பட்ட பூஜை அறையில் ஒரு படிக சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்யுங்கள். இப்படி சிவலிங்கத்தை பூஜை அறையில் வைத்தால், எப்போதும் பூஜை அறை சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டும். முக்கியமாக உடைந்த அல்லது பழைய பொருட்களை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்மறை ஆற்றல் வீட்டில் அதிகரித்துவிடும்.
சங்கு மற்றும் தீபம்
தினமும் வீட்டில் காலை மற்றும் மாலை வேளையில் தீபத்தை ஏற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். இப்படி செய்வது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. மேலும் வீட்டில் வழிபாடு செய்யும் போது சங்கை ஊதுவது நல்லது. வாஸ்துப்படி, வீட்டில் சங்கை ஒலிப்பது எதிர்மறை ஆற்றலை நீக்கும். மேலும் சங்கு லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. எனவே இதை தினமும் ஊதும் போது, அது லட்சுமி தேவியின் ஆசியுடன் வருமானத்திற்கான புதிய வழிகளையும் திறக்கிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
