Latest Updates
-
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா?
இந்த 1 ரூபாய் பொருளை தினமும் இப்படி யூஸ் பண்ணுங்க.. பணக்கஷ்டம் தீர்ந்து செல்வம் குவியும்...
Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருந்தால் தான், வாழ்க்கை செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதுவும் வாஸ்து விதிகள் வீட்டில் உள்ள அறைகளுக்கு மட்டுமின்றி, வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் மற்றும் அது இருக்கும் இடங்களுக்கும் பொருந்தும். எனவே தான் வீட்டில் எந்த ஒரு பொருளை வைப்பதாக இருந்தாலும், அதை வாஸ்துப்படி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டைகள் வருகிறதா? வீட்டில் பணப்பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறீர்களா? மேலும் உங்கள் வீட்டில் உள்ளோர் தங்கள் வேலை மற்றும் தொழிலில் எந்த முன்னேற்றத்தையும் காணாமல் உள்ளார்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்துள்ளது என்று அர்த்தம்.

வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்க நம் வீட்டு பூஜை அறையில் உள்ள கற்பூரம் பெரிதும் உதவி புரிகிறது. கற்பூரத்திற்கு எதிர்மறை சக்தியை நீக்கி வீட்டிற்கு நேர்மறையை கொண்டு வரும் ஆற்றல் இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்கு கற்பூரத்தை பின்வருமாறு பயன்படுத்துங்கள்.
1. நீங்கள் உங்கள் வேலையில் தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலோ அல்லது வீட்டு சூழல் அமைதியிழந்து இருந்தாலோ, உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் காலையிலும், மாலையிலும் வீட்டில் கற்பூரத்தை எரியுங்கள். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
2. நீங்கள் பணப்பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் கற்பூரத்தை எரிக்க்கும் போது அத்துடன் ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை சேர்த்து எரியுங்கள். இப்படி எரிப்பதன் மூலம் பணப் பிரச்சனைகள் நீங்கி, வீட்டில் செல்வம் பெருகும்.
3. வீட்டில் வாஸ்து குறைபாடுகள் அல்லது வாஸ்து தோஷம் இருந்தால், அதை கற்பூரத்தைக் கொண்டே போக்கலாம். அதற்கு வீட்டின் பல்வேறு மூலைகளில் கற்பூரத்தை ஏற்றி வையுங்கள். அப்படி ஏற்றும் போது கற்பூரம் கரைவது போன்று வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, வீட்டில் அமைதியைக் கொண்டு வரும்.
வீட்டின் எந்த இடங்களில் கற்பூரத்தை வைக்க வேண்டும்?
* வாஸ்துப்படி கற்பூரத்தை வீட்டின் நுழைவாயில், பூஜை அறை மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்திருப்பது மிகவும் நல்லது. இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகரித்து, நிதி நிலைமை வலுவடையும்.
* தம்பதிகளிடையே சண்டைகள் அதிகம் வந்தால், படுக்கை அறையில் கற்பூரத்தை வைப்பது நல்லது. அதுவும் தூங்கும் போது தலையணைக்கு அடியில் ஒரு கற்பூரத்தை வைப்பது மனநிலையை அமைதிப்படுத்தி, நல்ல தூக்கத்தைப் பெற உதவும்.
எந்தெந்த நாட்களில் கற்பூரத்தை எப்படி ஏற்ற வேண்டும்?
* செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கற்பூரத்துடன் கிராம்பை சேர்த்து எரித்தால், வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும்.
* வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிக்க வேண்டும். இதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேறும்.
* ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் கற்பூரத்துடன் பட்டை சேர்த்து எரிக்கும் போது, வீட்டில் பணப்பிரச்சனைகள், கடன் தொல்லைகள் போன்றவை நீங்கி, வீட்டில் செல்வம் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications