Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
உங்க வீட்டில் பணம் சேரமாட்டீங்குதா? அப்ப வாஸ்து நிபுணர் சொல்லும் இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க...
Vastu Tips: நாம் அனைவருமே நல்ல சந்தோஷமான, நிம்மதியான வாழ்க்கையே வாழ விரும்புகிறோம். அதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொண்டு வந்தால், வந்த வேகத்திலேயே செலவுகள் வந்து கரைத்துவிடும்.
இப்படி ஒருவரது வீட்டில் பணம் நிலைத்திருக்காமல் இருந்தால், அந்த வீட்டில் ஏதோ தவறாக உள்ளது என்று அர்த்தம். அதுவும் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்கிறது என்று அர்த்தம். இதனால் தான் குடியிருக்கும் வீடு அல்லது வீட்டில் இருக்கும் பொருட்கள் வாஸ்துப்படி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

எந்த வீட்டில் வாஸ்து குறைபாடு உள்ளதோ, அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகமாக இருக்கும். இதன் விளைவாக அந்த வீட்டில் பலவிதங்களில் செலவுகள் ஏற்படும் மற்றும் வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். உங்கள் வீட்டிலும் இப்படி பணம் நிலைக்காமல் அதிகம் செலவாகிக் கொண்டிருக்கிறதா? அப்படியானால் வாஸ்து நிபுணரான ஸ்வேதா சுரேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் தீர்வளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "உங்கள் வீட்டை செல்வத்தை ஈர்க்கும் வகையில் சக்தி வாய்ந்ததாக மாற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொண்டாலும், சரியான ஆற்றல் ஓட்டம் இருந்தால் மட்டுமே, பணம் நிலைத்திருக்கும்." என்று கூறினார்.
மேலும் வீட்டை பணத்தை ஈர்க்கும் வகையில் மாற்ற நினைத்தால் அல்லது வீட்டில் பணம் அதிகம் சேர விரும்பினால், வீட்டில் ஒருசில எளிய மாற்றங்களை செய்தால் போதும் என்று கூறியுள்ளார். அவை பின்வருமாறு:
1. மணி பிளாண்ட்
பணம் பெருக நிறைய பேரின் வீட்டில் இருக்கும் ஒரு செடி தான் மணி பிளாண்ட். இந்த மணி பிளாண்ட் உங்கள் வீட்டில் இருந்தால், அதை வடக்கு நோக்கிய ஜன்னலுக்கு அருகில் வைத்திருங்கள். இது நிதி வாய்ப்புக்களை அதிகரிக்கும் என்று வாஸ்து நிபுணர் கூறினார்.
2. கண்ணாடி
உங்கள் வீட்டின் டைனிங் அறையில் கண்ணாடி உள்ளதா? இல்லையென்றால் உடனே வாங்கி வையுங்கள். ஏனெனில் வாஸ்து கண்ணாடியால் நாம் காணும் அனைத்தும் இரட்டிப்பாகும் என்று வாஸ்து நிபுணர் கூறினார்.
3. குப்பை போடாதீர்
"வீட்டின் வடகிழக்கு மூலையில் குப்பையைப் போடாதீர்கள். வீட்டின் வடகிழக்கு மூலைரய ஈசான மூலை என்று அழைப்பர். இந்த பகுதியில் குப்பை போட்டால், அது உள்ளுணர்வு, பணம் மற்றும் நல்லிணக்கத்தைத் தடுக்கும்" என்று கூறினார். எனவே இந்த தவறையும் ஒருபோதும் செய்துவிடாதீர்கள்.
4. சோழி
வீட்டில் செல்வம் நிலைத்திக்க வேண்டுமானால், ஒரு சிவப்பு துணியில் 7 சோழிகளை வைத்து கட்டி, அந்த மூட்டையை பணம் வைக்கும் இடத்தில் அல்லது லாக்கரில் வைத்து கொள்ளுங்கள். இப்படி செய்வது லட்சுமி தேவியை ஈர்க்கும் மற்றும் உங்கள் பணமும் பாதுகாப்பாக இருக்கும் என்று நிபுணர் கூறினார்.
5. பித்தளை கிண்ணத்தில் நீர்
வீட்டில் பணம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமானால், வீட்டின் பிரதான கதவின் உள்ளே, வாசலுக்கு நேராக ஒரு பித்தளை கிண்ணத்தில் நீரை நிரப்பி, அதில் நாணயங்களைப் போட்டு வையுங்கள். இந்த நீரை ஒவ்வொரு 2 நாட்களுக்கும் ஒருமுறை மாற்ற வேண்டும் என்று நிபுணர் கூறினார்,
எனவே நண்பர்களே! இதுவரை உங்கள் வீட்டில் பணம் நிலைக்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தால், வாஸ்து நிபுணர் ஸ்வேதா கூறிய விஷயங்களை உடனே பின்பற்றி, நன்மை பெறுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications