Latest Updates
-
வீட்டுல காய்கறி எதுவும் இல்லையா? மீல் மேக்கர் வெச்சு இந்த வெள்ளை சால்னா செய்யுங்க.. அள்ளும்.. -
வெயிலால் கருப்பாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப தக்காளியை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது... -
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்ககிட்ட இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப உங்களுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
Aani Amavasya 2026: ஆனி அமாவாசையான இன்று இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த கஞ்சியை வாரம் 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடையும் குறையும், சுகருக்கும் நல்லது.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப பதட்டமான நாளாக இருக்கப்போகுதாம் -
ஜூலை 16-ல் சூரிய-சந்திரனின் பரிவர்த்தன யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
ஜூலை 16-ல் உருவாகும் நவபஞ்சம யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: டெல்லி ஸ்டைல் குக்கர் கேரட் அல்வா ரெசிபி - ட்ரை பண்ணுங்க
Delhi Carrot Halwa Recipe in Tamil: தமிழ் புத்தாண்டு வந்துவிட்டது. தமிழ்நாட்டில் பண்டிகைகள் என்றாலே விதவிதமான உணவுகளும், இனிப்புகளும்தான். இந்த தமிழ் புத்தாண்டுக்கு வழக்கமான பாயாசம், கேசரி போன்ற இனிப்புகளைத் தவிர்த்து புதிதாக ஏதாவது இனிப்பு செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த டெல்லி ஸ்டைல் கேரட் அல்வாவை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இந்த கேரட் அல்வா இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் வித்தியாசமாக அருமையாக இருக்கும்.
பொதுவாக கேரட் அல்வா என்றால் அதை பாத்திரத்தில் கஷ்டப்பட்டுதான் செய்வோம். ஆனால் இந்த டெல்லி ஸ்டைல் கேரட் அல்வாவை ஈசியாக குக்கரிலேயே செய்து விடலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு புதிதாக ஏதாவது இனிப்பு செய்ய விரும்பினால் குக்கர் கேரட் அல்வாவை செய்து கொடுங்கள். இந்த கேரட் அல்வா புகழ்பெற்ற இனிப்பக்கங்களில் கிடைக்கும் அல்வாவை போல ரிச்சான சுவையில் இருக்கும்.

இந்த தமிழ் புத்தாண்டுக்கு நீங்கள் அல்வா செய்ய முடிவெடுத்து விட்டீர்களா? உங்களுக்கு டெல்லி ஸ்பெஷல் குக்கர் கேரட் அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டெல்லி கேரட் அல்வாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- துருவிய கேரட் - 2 கப்
- சர்க்கரை - முக்கால் கப்
- ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
- காய்ச்சிய பால் - 1/2 கப்
- உப்பு - ஒரு சிட்டிகை
- முந்திரிப் பருப்புகள் - 10
- நெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
- கேரட்டை நன்றாகக் கழுவி, அதன் வெளித்தோலை நீக்கவும். பெரிய துளைகள் கொண்ட துருவியைக் கொண்டு அதை நன்றாக துருவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் முந்திரி பருப்பை போட்டு வறுக்கவும்.
- அதிலிருந்து 2 கோப்பைகளை அளந்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரின் அடியில், 1 ஸ்பூன் நெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.
- கேரட்டின் பச்சை வாசனை நீங்கும் வரை 5 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் பால் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.
- அடுப்பை அதிக தீயில் வைத்து 2 முதல் 3 விசில் வரும் வரை பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்.
- பிரஷர் வெளியேறிய பிறகு குக்கரைத் திறக்கவும். சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- அல்வா குக்கரின் ஓரங்களிலிருந்து தனியாக பிரியத் தொடங்கும் வரை மிதமான தீயில் நன்றாகக் கிளறவும்.
- கடைசியாக, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்புகளை மீதமுள்ள நெய்யுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா ரெடி. சூடான கேரட் அல்வாவை ஐஸ்க்ரீமுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.



Click it and Unblock the Notifications