For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்!

இன்றைய அரசியலில் முக்கிய பதவிகள் வகித்து வரும் பெண் தலைவர்களைப் பற்றிய சிறப்பு தொகுப்பு.

|

எல்லா காலங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஓர் உணர்வுப் போராட்டம் இருந்து கொண்டே தான் இருந்திருக்கிறது. ஒரு காலத்தில் வீட்டை விட்டு வெளியில் வருவதையே குற்றமாக எண்ணிக் கொண்டிருந்த காலத்திலிருந்து இன்றைக்கு எல்லா துறைகளில் ஆண் பெண் சரிசமமாக போட்டி போடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள்.

தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ளவும் தன் லட்சிய இடத்தை அடையவும் ஏராளமான போட்டியினை சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்த சூழலில் அரசியல் களத்தை நினைத்துப் பாருங்கள். இந்தியாவை எடுத்துக் கொண்டால் ஒன்றிரண்டு பெண் அரசியல் தலைவர்களை விரல் விட்டு எண்ணிடலாம். இந்நிலையில் உலகளவில் பெண் தலைவர்களாக உருவெடுத்திருக்கும் பெண்களைப் பற்றிய ஓர் தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொராசியா :

கொராசியா :

கொராசியா நாட்டின் அதிபராக இருப்பவர் கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக். இவர் யூகஸ்லோவியாவில் 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி பிறந்தார். ஸ்டூடண்ட் எக்ஸ்சேஞ் ப்ரோகிராம் மூலமாக மெக்ஸோவில் உள்ள லாஸ் அலமோஸ் என்ற பள்ளியில் சேர்ந்து படித்தார். அதன் பிறகு ஜாகர்ப்,வியன்னா,வாசிங்டன்,ஹார்ட்வேர்ட் ஆகிய இடங்களில் தன் உயர்கல்வியை முடித்தார்.

இவர் சரளமாக கொராடியன், ஆங்கிலம்,ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீசிய மொழிகளில் பேசக்கூடியவர்.ஜெர்மன்,ஃபிரஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளை புரிந்து கொண்டு பதிலளிப்பார். இவர் தற்போது கொராசியாவின் முதல் பெண் அதிபராக 2015 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.

Image Courtesy

தெரசா மே :

தெரசா மே :

மார்கெட் தாட்சருக்கு பிறகு பிரிட்டனின் பெண் அதிபராக பதவி ஏற்றிருப்பவர் தெரசா மே. பிரிட்டன் வரலாற்றிலேயே நீண்ட காலம் உள்துறை அமைச்சராக பணியாற்றிருக்கிறார். 1956 ஆம் ஆண்டு சக்சஸ் என்னுமிடத்தில் பிறந்தார். ஆக்ஸ்வோர்டு பல்கலைக்கழகத்தில் 1977 ஆம் ஆண்டு தன்னுடைய இளங்கலை படிப்பான பிஏ ஜியாகிரபி முடித்தார்.

அடுத்த 20 ஆண்டுகள் வரை பல்வேறு இடங்களில் பணியாற்றி கூடவே அரசியல் விருப்பத்தையும் வளர்த்துக் கொண்டார். தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அரசியலில் குதித்தார்,1997 ஆம் ஆண்டு மெய்டன்ஹெட் பகுதிக்கான எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டார்.

டசாய் இங் வென் :

டசாய் இங் வென் :

இவர் சீனக் குடியரசான தாய்வானின் முதல் பெண் பிரதமர் ஆவார். சீனக்குடியரசு என்பது கிழக்கு ஆசியாவில் அமைந்திருக்கும் ஒரு தீவு பகுதி. சீனாவின் உள்நாட்டு யுத்தம் காரணமாக சீன பெருநிலப்பரப்பின் ஆட்சி இரண்டாக பிரிந்தது. 1940களுக்கு பிறகு தாய்வான் அத்துடன் கின்மேன்,மாட்சு உட்பட சில தீவுகளை ஒருங்கிணைத்து சீன குடியரசு ஆட்சி நடத்தி வருகிறது.

சீன குடியரசின் ஏழாவது பிரதமராக பதவியேற்றிருக்கும் இவர் தான் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Courtesy

லித்துவனியா :

லித்துவனியா :

இது வடக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும். இங்கு டேலியா க்ரைபாஸ்கைட் என்பவர் பிரதமராக பதவியேற்றார். இவர் லித்துவனியாவின் முதல் பிரதமர் அதோடு இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் இவர் தான்.

இவரை இரும்பு பெண்மணி என்றும் மக்கள் அழைக்கிறார்கள். இவர் பிறக்கும் போது மிக சாதரண குடும்பத்தில் தான் பிறந்திருக்கிறார் அப்பா ஒரு எலெக்ட்ரீசியன் மற்றும் டிரைவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா ஒரு கடையின் விற்பனைப் பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

Image Courtesy

நார்வே :

நார்வே :

ஸ்கண்டிநேவிய தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு நாடு நார்வே ஆகும். இங்கு பிரதமராக இருப்பவர் தான் எர்னா சோல்பெர்க். இவர் நார்வே நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகும். உலகிலுள்ள பிற நாடுகளை விட நார்வே தான் மக்கள் வாழ்வாதாரம் உயர்ந்ததாக இருக்கும்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய எண்ணெய் வளம் நார்வேயிடமிருந்து தான் வருகிறது. அதைச் சுற்றியே தான் பொருளாதாரம் நிர்ணயிக்கப்பப்படுகிறது. இவர் 2013 ஆம் ஆண்டு முதல் பிரதமராக பதவியேற்று தொடர்ந்து வருகிறார்.

Image Courtesy

மால்டா :

மால்டா :

மால்டா என்று அழைக்கப்படும் இந்த நாடு தெற்கு ஐரோப்பாவின் மத்தியில் அமைத்திருக்கக்கூடிய ஒரு தீவு ஆகும். இங்கே மொத்தம் ஏழு தீவுகள் இருக்கிறது அவற்றை ஒருங்கிணைத்து மால்டா நாடு என்று அழைக்கிறார்கள்.

இங்கே பெரும்பாலும் ரோமன் கத்தோலிக்கர்கள் வசிக்கிறார்கள். இந்த நாட்டின் ஒன்பதாவது பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் தான் மேரி லூயிஸ் கொலிரோ பெர்கா

Image Courtesy

மொரீசியஸ்

மொரீசியஸ்

மடகாஸ்கர் தீவுக்கு கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த நாடு ஆப்ரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் . இந்த நாட்டின் குடியரசு தலைவராக கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் மொரீசியஸ் நாட்டின் ஆராய்ச்சியாளராக இருந்தார்.

நடுவில் ஓர் க்ரிடிட் கார்ட் மாற்றி பயன்படுத்திய வழக்கில் தலையிட்ட காரணத்திற்காக தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இவர் ராஜினாமா செய்தாலும் மொரீசியஸ் நாட்டின் தலைசிறைந்த அறிவியலாளர் என்ற முறையில் போற்றப்படுகிறார்.

நேபாளம் :

நேபாளம் :

இமையமலையின் அடிவாரத்தின் அமைந்திருக்கக்கூடிய ஓர் நாடு தான் நேபாளாம். நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் தான் இந்தியா இருக்கிறது. நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வருகிறார் வித்யா தேவி பண்டாரி.

வித்யா தேவி பண்டாரிக்கு இளவயதிலிருந்தே அரசியலில் ஆர்வம் அதிகம். 1978 ஆம் ஆண்டு கட்சியின் இளைஞர் அணியில் சேர்ந்து களச் செயற்பாட்டாளராக செயல்படத் துவங்கினார். இரண்டாவது முறையாகவும் 2018 ஆம் ஆண்டு இவரே குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

ஹில்டா ஹைன் :

ஹில்டா ஹைன் :

மார்ஷல் தீவுகளின் பிரதமராக இருப்பவர் தான் இந்த ஹில்டா ஹைன். இந்த தீவு பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கக்கூடிய ஒரு தீவு நாடு ஆகும். இவர் சிறந்த அரசியல்வாதியாக மட்டுமல்ல மிகச்சிறந்த கல்வியாளரும் கூட. முன்னதாக இவர் கல்வி அமைச்சராக இருந்திருக்கிறார்.

அந்த மார்சல் தீவுகளிலிருந்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் நபரும் இவரே.பெண்களுக்காக அவர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.

Image Courtesy

நியூசிலாந்து :

நியூசிலாந்து :

37 வயதே நிரம்பிய ஜசிண்டா ஆர்ட்ரென் நியூசிலாந்தின் நாற்பதாவது பிரதமராக பதவி வகிக்கிறார். இவர் 2017 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதோடு இவர் நியூலாந்தின் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்கிறார்.

முன்னதாக இவர் பிரிட்டனின் பிரதமராக இருந்த டோனி ப்ளேருக்கு ஆலோசகராக இருந்தார். உலகிலேயே இளவயதில் நாட்டின் உயரிய பதவி வகிக்கும் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இவர்.

சமீபத்தில் அதாவது கடந்த மாதம் 21 ஆம் தேதி இவருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. உலகிலேயே பதவியில் இருக்கும் குழந்தையை பெற்றெடுத்த இரண்டாவது பெண் இவர் தான்! தற்போது இவர் மெட்டர்னிட்டிக்கான விடுப்பில் இருக்கிறார். வின்ஸ்டன் பீட்டர்ஸ் என்பவர் தற்காலிக பிரதமராக செயல்பட்டு வருகிறார்.

வங்காளதேசம் :

வங்காளதேசம் :

டாக்காவை தலைநகராக கொண்ட வங்காளதேசம் ஒரு தெற்காசிய நாடு ஆகும். சேய்க் ஹஸீனா பங்கலாதேஷின் பத்தாவது பிரதமராக பதவி வகித்து வருகிறார். 2008 ஒரு முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்ட இவர் 2014 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார் .

1981 ஆம் ஆண்டு முதல் வங்காளதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக்கின் தலைவராக இருக்கிறார். வங்காளதேசத்தின் முதல் அதிபரான சேக் முஜிபுர் ரகுமானின் மகள் தான் இன்றைய பிரதமரான சேக் ஹசீனா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse women
English summary

Inspiring Women Political Leaders in Present Day

Inspiring Women Political Leaders in Present Day
Story first published: Wednesday, July 18, 2018, 18:15 [IST]
Desktop Bottom Promotion