For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்துல தூங்க முடியாமல் கஷ்டப்படுறீங்களா? அப்ப இத குடிங்க...நிம்மதியா தூங்கலாமாம்...!

தூங்கும் முன் ஒரு கப் கெமோமில் டீ குடிப்பது நரம்புகளை தளர்த்தவும், பதட்டத்தை குறைக்கவும் மற்றும் தூக்கத்தை தூண்டவும் உதவும்.

|

குளிர்காலத்தில் நாம் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்திக்கிறோம். அதில், தூக்கமின்மை பிரச்சனையும் ஒன்று. மன அழுத்தம், குளிர் காலநிலை அல்லது அதிகப்படியான திரை வெளிப்பாடு, தூக்கமின்மை ஆகியவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம் மற்றும் மூளை செல்களை பலவீனப்படுத்துகிறது. பொதுவாக குளிர்காலம் என்றாலே, நம்மால் உற்சாகமாக செயல்பட முடியாது. குளிர்நிலை நம் உடலை சோர்வாக்குகிறது. இதனால், குளிர்காலத்தில் நம் உடல்செயல்பாடுகள் குறையும். இதனால், செல்போன் மற்றும் மடிக்கணினியில் நாம் அதிக நேரம் செலவிட நேரிடும். இது உங்களின் தூக்க நேரத்தை பிடித்துக்கொண்டு, தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

Winter Special: Warm Drinks To Fix Insomnia And Sleepless Nights in tamil

நீங்கள் தூக்கமின்மையின் ஆரம்ப அறிகுறிகளை எதிர்கொண்டிருந்தால், ஆரோக்கியமான உணவு மற்றும் சிறந்த வாழ்க்கை முறைக்கு மாறுவதன் மூலம் இந்த நிலைமையை மாற்றியமைக்க உங்களுக்கு இன்னும் நேரம் உள்ளது. சில சூடான வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்கள், தூக்கத்தைத் தூண்டுவதற்கும் நரம்புகளை இயற்கையாக குணப்படுத்துவதற்கும் சிறந்தவை. அவை என்னென்ன பானங்கள் என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குங்குமப்பூ பால் அல்லது தேநீர்

குங்குமப்பூ பால் அல்லது தேநீர்

படுக்கை நேரத்தில் குங்குமப்பூ டீ போன்ற மூலிகை டீ குடிப்பது நரம்புகளை தளர்த்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் மற்றும் தூக்கத்தை தூண்டவும் உதவும். வயது முதற்கொண்டு குங்குமப்பூ அதன் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு மனநிலையை உயர்த்தி, பதட்டம் மற்றும் மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறிகளைக் குறைக்கிறது மற்றும் தூக்கத்தைத் தூண்டுகிறது. பாலில் டிரிப்டோபான் என்ற கலவை இருப்பதால், பாலுடன் கலந்து குடிப்பதால் பானத்தின் செயல்திறனை மேலும் மேம்படுத்துகிறது.

பெருஞ்சீரகம் பாதாம் பால்

பெருஞ்சீரகம் பாதாம் பால்

பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் பாதாமை ஒன்றாக சேர்த்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். 1 டீஸ்பூன் பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து, தூங்கும் முன் குடித்தால், தூக்கமின்மை குறைவது மட்டுமின்றி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். அதுமட்டுமின்றி, பெருஞ்சீரகம் மற்றும் ஒமேகா 3 நிறைந்த பாதாமைச் சேர்ப்பது பார்வையை மேம்படுத்த உதவுகிறது மற்றும் நீண்ட நேரம் திரையில் வெளிப்படும் விளைவைக் குறைக்கிறது மற்றும் கண்களின் மாகுலர் சிதைவின் விளைவையும் குறைக்கிறது.

கெமோமில் தேயிலை

கெமோமில் தேயிலை

தூங்கும் முன் ஒரு கப் கெமோமில் டீ குடிப்பது நரம்புகளை தளர்த்தவும், பதட்டத்தை குறைக்கவும் மற்றும் தூக்கத்தை தூண்டவும் உதவும். அதுமட்டுமல்லாமல், தினமும் இந்த டீ குடிப்பது ஒழுங்கற்ற தூக்க முறைகளை சரிசெய்வது மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை உறுதிப்படுத்தவும் உதவுகிறது. இந்த தேநீர் தயாரிக்க, 2 கப் தண்ணீர் எடுத்து, நன்றாக கொதிக்க வைக்கவும். அதில் கெமோமில் பூவை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, தேன் சேர்த்து சாப்பிடுங்கள்.

லாவெண்டர் தேநீர்

லாவெண்டர் தேநீர்

லாவெண்டர் தேநீர் தயாரிக்க, ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீரை கொதிக்க வைக்கவும். லாவெண்டர் பூக்கள் அல்லது தேநீர் பையை அதில் வைக்கவும். நன்றாக கொதிந்ததும் தேநீரை வடிகட்டி தேனுடன் சேர்த்து அருந்தலாம். இந்த டீயைக் குடிப்பதால் தூக்கத்தின் தரம் மேம்படும், வேகமாக தூக்கம் வர உதவுகிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள் இருப்பதால் ஏற்படும் செல் சேதத்தையும் குறைக்கிறது. லாவெண்டரில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை சிறந்த செல் மீளுருவாக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகின்றன.

அஸ்வகந்தா தேநீர்

அஸ்வகந்தா தேநீர்

இந்த பழமையான மூலிகை பெரும்பாலான ஆயுர்வேத மருந்துகளில் செயலில் உள்ள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த தேநீரில் ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால், நரம்புகளை தளர்த்தவும், மன அழுத்தம், மனச்சோர்வு அறிகுறிகளை குறைக்கவும் மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. ½ தேக்கரண்டி அஸ்வகந்தா தூள் அல்லது வேரை தண்ணீரில் காய்ச்சி, தேனுடன் கலந்து குடிக்கவும். அதன் செயல்திறனை அதிகரிக்க, இந்த தேநீரில் பாலையும் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Winter Special: Warm Drinks To Fix Insomnia And Sleepless Nights in tamil

Here we are talking about the Winter Special: Warm Drinks To Fix Insomnia And Sleepless Nights in tamil.
Story first published: Wednesday, December 21, 2022, 12:15 [IST]
Desktop Bottom Promotion