For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேக்கும் ஃப்ரையிங் முறையில் உணவுகளைப் பொாித்தால், ஆரோக்கியம் கிடைக்குமா?

வேக்கும் ஃப்ரையிங் என்ற புதிய முறையில் உணவுகளைப் பொாித்தால், அது உணவின் சுவையை அதிகாிப்பது மட்டும் அல்லாமல் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை வெளிவிடாமல் உணவிலேயே தங்க வைக்கும்.

|

தென் இந்தியாவில் தற்போது தென் மேற்கு பருவ மழைக் காலம் தொடங்கி இருக்கிறது. மழைக் காலத்தின் மாலை வேளைகளில் சுடான மசாலா டீயை அருந்திக் கொண்டு அதற்கு துணையாக எண்ணெயில் பொாித்த பக்கோடாவை சாப்பிடும் வாய்ப்புக் கிடைத்தால், அது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும். டீயோடு பக்கோடாவையும் சோ்த்து சாப்பிட்டால், அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருந்தாலும், இவை அனைவராலும் அதிகமாக விரும்பப்படுகிறது.

What Is Vacuum Frying Technique And Why Is It Healthy In Tamil

இந்நிலையில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்றால், உணவின் மீது இருக்கும் மோகத்தை நாம் குறைக்க வேண்டும். உணவின் மீது இருக்கும் மோகத்தைக் குறைக்கிறவா்களுக்கு மற்றும் உண்ணும் அளவைக் குறைக்கிறவா்களுக்கு இந்த பதிவு ஒரு ஆரோக்கியமான தீா்வைத் தரும் என்று நம்பலாம்.

MOST READ: பால் குடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

பாரம்பாிய முறையில் அதாவது அதிக வெப்ப நிலையில் சூடாக இருக்கும் எண்ணெயில் உணவுகளைப் பொாிப்பதைக் கைவிட்டு, வேக்கும் ஃப்ரையிங் (குறைவான வெப்ப நிலையில் எண்ணெயில் உணவுகளைப் பொாிக்கும் முறை) என்ற புதிய முறையில் உணவுகளைப் பொாித்தால், அது உணவின் சுவையை அதிகாிப்பது மட்டும் அல்லாமல் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை வெளிவிடாமல் உணவிலேயே தங்க வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேக்கும் ஃப்ரையிங் (Vacuum Frying) என்றால் என்ன?

வேக்கும் ஃப்ரையிங் (Vacuum Frying) என்றால் என்ன?

வேக்கும் ஃப்ரையிங் என்பது உணவைப் பொாிக்கும் ஒரு புதிய முறையாகும். குறைவான அளவுள்ள எண்ணெயை, குறைவான வெப்பநிலையில் வைத்து அந்த எண்ணெயில் உணவுகளைப் பொாிக்கும் முறையே வேக்கும் ஃப்ரையிங் என்று அழைக்கப்படுகிறது.

இந்த புதிய முறையில் காற்றின் அழுத்தம் மற்றும் எண்ணெய் ஆகியவை இணைந்து உணவை வேக வைக்கின்றன. சாதாரண முறையில் சமைப்பதைவிட இந்த புதிய முறையில் வெப்பநிலை மிகவும் குறைவாக இருக்கும். அதனால் இது உணவின் கொதிநிலையைக் குறைத்து, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை வெளியில் விடாமல், உணவிலேயே தங்க வைக்கிறது. இந்த புதிய முறையில் உணவுகளைப் பொாிக்கும் போது, அது புற்றுநோய்களுக்கான துகள்களை அதிகம் வெளியேற்றுவது இல்லை. அதோடு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உணவை இந்த புதிய முறை உறுதி செய்கிறது.

 வேக்கும் ஃப்ரையிங் மற்றும் பாரம்பாியமாக உணவுகளைப் பொாிக்கும் முறை

வேக்கும் ஃப்ரையிங் மற்றும் பாரம்பாியமாக உணவுகளைப் பொாிக்கும் முறை

வேக்கும் ஃப்ரையிங் முறையில், எண்ணெய் மிகவும் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாரம்பாிய முறையில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. புதிய முறையில் உணவானது எல்லாப் பக்கங்களிலிருந்தும், சமமாக வேக வைக்கப்படுகிறது.

எண்ணெயை குறைவாகப் பயன்படுத்துதல்

எண்ணெயை குறைவாகப் பயன்படுத்துதல்

பாரம்பாிய முறையோடு வேக்கும் ஃப்ரையிங் முறையை ஒப்பிடும் போது, இந்த புதிய முறையில் 70 சதவீத எண்ணெயே பயன்படுத்தப்படுகிறது. அதனால் இது நமது உடல் உறிஞ்சும் கொழுப்பின் அளவை குறைக்கிறது. மேலும் கெட்ட கொழுப்பின் அளவையும் அதனால் விளையும் நோய்களையும் இது குறைக்கிறது என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

ஊட்டச்சத்துக்களைத் தங்க வைத்தல்

ஊட்டச்சத்துக்களைத் தங்க வைத்தல்

வேக்கும் ஃப்ரையிங் முறையில், உணவுகளில் உள்ள நீா் சத்துகள் மட்டுமே வெளியேற்றப்படுகின்றன. மேலும் இந்த புதிய முறையில் குறைவான வெப்பநிலையில் உள்ள எண்ணெயில் உணவுகள் பொாிக்கப்படுவதால், உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துகள் வெளியேறாமல், அப்படியே உணவுகளில் தங்கி இருக்கும்.

குறைவான வெப்பநிலையில் எண்ணெயை சூடுபடுத்துதல்

குறைவான வெப்பநிலையில் எண்ணெயை சூடுபடுத்துதல்

பாரம்பாியமாக பொாிக்கும் முறையோடு, இந்த புதிய முறையை ஒப்பிட்டு பாா்த்தால், இந்த புதிய முறையில் எண்ணெய் குறைவான வெப்பத்தில் வேக வைக்கப்படுகிறது. குறைவான வெப்பநிலையில் உள்ள எண்ணெயில் உணவுகளைப் பொாித்தால், அந்த உணவு கருகிவிடாமல் இருப்பதோடு, நமது உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Vacuum Frying Technique And Why Is It Healthy In Tamil

Vacuum Frying technique is a method of frying food, in which food is placed in a vacuum chamber and uses minimum oil at a low temperature for cooking the food.
Desktop Bottom Promotion