For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

|

சமீபத்தில் சீனாவில் ஒரு புது வகையான வைரஸ் காய்ச்சலால் சுமார் 800-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவம் இதை மிகவும் அவசரநிலை என அறிவித்துள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் இதுவரை 830 கொரோனா வைரஸ் வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி சுமார் 25 பேர் இறந்துள்ளனர். இதில் பெரும்பாலான வழக்குகள் வுஹானில் தான் உள்ளன. மேலும் அங்கு கடந்த ஆண்டு இந்த வைரஸ் தோன்றியதாக நம்பப்படுகிறது.

What Is Coronavirus? Everything You Need To Know In Tamil

முன்னதாக, இந்த வைரஸ் கடல் உணவு சந்தைகளில் இருந்து தோன்றதாகவும், இது விலங்குகளிடமிருந்து மட்டுமே மனிதர்களுக்கு பரவுவதாகவும் நம்பப்பட்டது. ஆனால் இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதன் பரவுவதாக சீன சுகாதார அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

MOST READ: இத தினமும் ஒரு கையளவு சாப்பிட்டால் தொப்பை நிச்சயம் குறையுமாம்.. ட்ரை பண்ணி பாருங்களேன்!

இந்த கொடிய கொரோனா வைரஸ் தொடர்பான முதல் வழக்கை அமெரிக்கா சமீபத்தில் தெரிவித்துள்ளது. எனவே வுஹானில் இருந்து வரும் பயணிகளை தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்க அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் தென் கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா வைரஸ் என்றால் என்ன?

கொரோனா வைரஸ் என்றால் என்ன?

கொரோனா வைரஸ் என்பது வைரஸின் ஒரு பெரிய குடும்பமாகும். இது சாதாரண சளி முதல் சுவாச நோய்களான மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி மற்றும் தீவிரமான சுவாச நோய்க்குறி போன்ற கடுமையான நோய்கள் வரை நோயை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

கடந்த வருடம் டிம்பர் மாதத்தில் சீனாவின் வுஹான் பகுதியில் உள்ள ஒரு நோயாளி மருத்துவரிடம் சென்று, தனக்கு காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்றவை அடிக்கடி ஏற்படுவதாக தெரிவித்திருந்தார். அதோடு அவரது உடலும் பலவீனமாக இருந்தது. இதுப்போன்ற அறிகுறிகளுடன் மக்கள் தொடர்ந்து வந்ததில், ஏதோ ஒரு புதிய வைரஸ் மக்களிடையே பரவியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். இந்த வைரஸ் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டது டிசம்பர் 31 ஆம் தேதி ஆகும். இதைத் தொடர்ந்து சீனாவின் தேசிய சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு விழிப்புணர்வை தீவிரமாக செய்யத் தொடங்கியது.

கொரோனா என்ற பெயர் எப்படி வந்தது?

கொரோனா என்ற பெயர் எப்படி வந்தது?

இந்த வைரஸ் தொற்றுக்கு 90 சதவீதம் கொரோனா வைரஸ் குடும்பம் தான் என்பதை உறுதி செய்தனர். ஏற்கனவே கொரோனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்றுகள் இருக்கும் நிலையில், இது 7 ஆவது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 2019- nCoV (New Strain Of Coronavirus) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்த வைரஸ் 2019 ஆம் கண்டறிந்ததற்காக 2019 என்ற ஆண்டையும், n என்பது புதிய என்பதையும், CoV என்பது கொரோனாவையும் குறிக்கிறது.

கொரோனா வைரஸின் அறிகுறிகள்

கொரோனா வைரஸின் அறிகுறிகள்

கொரோனா வைரஸ் ஒருவரைத் தாக்கியிருந்தால், எப்படிப்பட்ட அறிகுறிகள் வெளிப்படும் என சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. முதலில் உடல் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாகி காய்ச்சல் வரும். அதைத் தொடர்ந்து இருமல் அதிகமாக இருக்கும். சுவாசிப்பதில் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும். இப்படி படிப்படியாக நிலைமை தீவிரமாகும். மொத்தத்தில் மற்ற சுவாச தொற்றுக்களான மூக்கு ஒழுகல், இருமல், தொண்டைப்புண், களைப்பு, தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் காய்ச்சல் போன்றவற்றைப் போலவே கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளும் இருக்கும்.

கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?

கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது?

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்டவை. அதில்,

* நோய்த்தொற்று உள்ளவருடன் நெருக்கமான தொடர்புகளான கைகளை குலுக்குதல், தொடுதல் அல்லது இதர தொடர்பு கொள்வதால் பரவும்.

* வைரஸ் உள்ள இடம் அல்லது பொருளைத் தொடுவதால் பரவும். எனவே இந்த வைரஸ் தாக்கம் உங்கள் பகுதியில் இருப்பதாக தெரிந்தால், எந்த ஒரு பொருளைத் தொட்ட பின்பு கைகளை நீரால் கட்டாயம் கழுவ வேண்டும்.

* சில சமயங்களில் இந்த வைரஸ் இருமல் அல்லது தும்மலினால் காற்றின் மூலமும் பரவும்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது எப்படி?

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது எப்படி?

உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த சில எளிய முன்னெச்சரிக்கைகளைப் பரிந்துரைக்கிறது. அவையாவன:

* நோயாளிகளைக் காணச் சென்றால், கைகளைத் தவறாமல் கழுவவும்.

* தும்மல் மற்றும் இருமலின் போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ளவும். மேலும் எப்போதும் மாஸ்க் அணிந்து கொள்ளவும்.

* இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு சமைத்து சாப்பிடவும்.

* சுவாச பிரச்சனைகள் உள்ள யாருடனும் நெருக்கமாக தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.

தற்போது கொரோனா என்னும் கொடிய வைரஸ் பரவிக் கொண்டிருப்பதால், காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதை சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Coronavirus? Everything You Need To Know In Tamil

Coronavirus affects the respiratory tract of the infected person. This virus appeared in Wuhan, China last month. The outbreak has now claimed nine lives and sickened hundreds.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more