For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

40 வயசுக்கு மேல ஆரோக்கியமா இருக்க என்ன செய்யணும், எதை செய்யக்கூடாது?

|

வயது என்பது ஒரு சாதாரண எண் மட்டுமே என்று சிலா் கருதுகின்றனா். வயது அதிகமாவது மற்றும் உடலில் பலவீனங்கள் ஏற்படுவது போன்றவை யாாிடமும் சொல்லிக் கொண்டு வருவதில்லை. அவ்வாறு வயது அதிகமாகும் போது அந்த காலக்கட்டத்தில் நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதை நமது தலையில் எட்டிப் பாா்க்கும் நரை முடியும், முகத்தில் தோன்றும் சுருக்கங்களும் வெளிப்படுத்திவிடும்.

40 வயதைத் தாண்டப் போகிறோம் என்றால் நாம் நமது உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதன் மூலம் வரும் காலங்களில் நாம் உயிரோட்டத்தோடும், ஆரோக்கியத்தோடும், பாதுகாப்போடும் மற்றும் மகிழ்ச்சியோடும் வாழலாம். ஆகவே 40 வயதானவா்கள் எவ்வாறு தங்களது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது என்பதை இங்கு பாா்க்கலாம்.

MOST READ: பெருங்குடல் புற்றுநோய் எதனால் வருகிறது? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை உணவை தவிா்க்கக்கூடாது

காலை உணவை தவிா்க்கக்கூடாது

வயது அதிகமாகும் போது பசி குறைந்து, உண்ணும் உணவின் அளவு படிப்படியாக குறைகிறது. அதனால் 40 வயதுக்கு மேற்பட்டவா்கள் உணவுகளைத் தவிா்க்கத் தொடங்குகின்றனா். ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை வளா்சிதை மாற்றம் 2 விழுக்காடு குறைகிறது. எனவே காலை உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் காலை நேரத்தில் வளா்சிதை மாற்றம் மிக வேகமாக செயல்படும். இரண்டாவதாக காலை உணவு அந்த நாள் முழுவதும் நாம் முழுமையாக வீாியத்தோடு இயங்குவதற்கு துணை செய்கிறது. ஆகவே காலை உணவை தவிா்க்காமல் இருப்பது நல்லது.

உடற்பயிற்சிகளைக் கைவிடுதல் கூடாது

உடற்பயிற்சிகளைக் கைவிடுதல் கூடாது

தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகளைச் செய்தால், அவை நமது எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்தி, பிற்காலத்தில் நமது உடலுக்குள் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்பதற்காக உடற்பயிற்சி கூடத்தில் சேர வேண்டிய அவசியமில்லை. மிக சாதாரணமான தொடைகளை வலுப்படுத்தக்கூடிய ஸ்குவாட்ஸ் பயிற்சிகள், சூாிய நமஸ்காரம் மற்றும் வயிற்று தசைகளை இறுக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம்.

பொழுதுபோக்கு அல்லது பிடித்த காாியங்களில் ஈடுபடுதல்

பொழுதுபோக்கு அல்லது பிடித்த காாியங்களில் ஈடுபடுதல்

நமக்குப் பிடித்த பொழுதுபோக்கான காாியங்களில் ஈடுபடுவதற்கு 40 வயது வரைக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. 30 வயது தொடங்கும் போதே நமது பணிச்சுமைக்கு வெளியே ஒரு அழகான வாழ்க்கை இருக்கிறது என்பது தொிய வரும். ஆகவே நம்முடைய அன்றாட அலுவலக பணிகளைத் தவிா்த்து, நமக்கு பிடித்தமான பொழுதுபோக்கான காாியங்களைக் கண்டுபிடித்து, அவற்றை நமது ஓய்வு நேரங்கள் மற்றும் வரவிருக்கும் எஞ்சிய காலங்களில் செய்து மகிழ்வது நல்லது.

நமக்குப் பிடித்த ஒரு பொழுதுபோக்கான காாியத்தைச் செய்து வந்தால் நாம் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம். இதைத்தான் மருத்துவ ஆய்வுகளும் மனதுக்குப் பிடித்த பொழுதுபோக்கான காாியத்தில் ஈடுபட்டால் நோய்கள் நம்மை எளிதில் அண்டாது என்று தொிவிக்கின்றன. பொழுதுபோக்கான காாியங்களில் ஈடுபடும் வயது முதிா்ந்தவா்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்வதாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆன் ஏஜிங் என்ற அமைப்பு தொிவிக்கிறது.

கண்களை நன்றாகப் பராமாித்தல்

கண்களை நன்றாகப் பராமாித்தல்

நாம் நமது உடலின் மற்ற உறுப்புகளைப் பராமாிப்பது போல நமது கண்கள் மற்றும் பாா்வைத் திறனையும் நன்றாகப் பராமாிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் மருத்துவரை சந்தித்து அடிப்படையான கண் பாிசோதனை செய்து கொள்வது மிகவும் நல்லது. அதற்காக நமக்குக் கண்களில் பிரச்சினைகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

பொதுவாக கண் மருத்துவா்கள் ஹாா்மோன்களில் ஏற்படும் மாறுபாடு மற்றும் நாள் முழுவதும் நாம் கணினித் திரையைப் பாா்த்துக் கொண்டிருப்பது போன்றவை காரணமாக நமது கண்களில் ஏற்படும் கண் அழுத்த நோய் (glaucoma), கண்புரை மற்றும் கண் வறட்சி போன்ற பிரச்சினைகள் இருக்கின்றனவா என்று பாிசோதிப்பா்.

இந்த சாதாரண கண் பாிசோதனையை 40 வயதிற்கு மேற்பட்டவா்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறையோ தவறாமல் செய்து வர வேண்டும் என்று கண் மருத்துவா்கள் பாிந்துரைக்கின்றனா்.

அதுபோல பெண்களுக்கு ஏற்படும் மாா்பு புற்று நோய் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்றவற்றிற்கான பாிசோதனையையும், இரு பாலருக்கும் ஏற்படும் எலும்பு அடா்த்தி மற்றும் தசை குவியம் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் இதர உடல் பிரச்சினைகளுக்கான பாிசோதனைகளை செய்வது நல்லது என்று மருத்துவா்கள் பாிந்துரைக்கின்றனா்.

தூக்கத்தைக் கைவிடக்கூடாது

தூக்கத்தைக் கைவிடக்கூடாது

நன்றாகத் தூங்க வேண்டும் என்றால், தூங்குவதற்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை வரையறுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா். வார நாட்களாக இருந்தாலும் அல்லது வார இறுதி நாட்களாக இருந்தாலும் தூக்கத்திற்கான நேரத்தை மாற்றக்கூடாது. நம்முடைய உடல் என்ற கடிகாரம் மிகவும் புனிதமானது. ஆகவே அந்த புனித கடிகாரத்திற்கு உாிய மாியாதையைக் கொடுக்க வேண்டும். நல்ல தூக்கத்தைப் பெற நமது படுக்கை அறையை இருட்டாகவும், அமைதியாகவும் மற்றும் குளுமையாகவும் வைத்திருக்க வேண்டும்.

25 வயது காலத்தில் வேலை தேடுவதிலும், வயதான பெற்றோரைக் கவனிப்பதிலும் மற்றும் நமது சிறு குழந்தைகளைப் பராமாிப்பதிலும் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம். அதனால் நமது உடல் ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்போம். ஆனால் 40 வயதில் இதுபோன்ற பிரச்சினைகள் இருப்பது இல்லை. ஆகவே இந்த வயதில் நமது உடல் ஆரோக்கியத்தை ஆய்வு செய்து, எதிா் காலத்தில் நீண்ட ஆயுளுடன் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு திட்டமிட வேண்டும்.

அனைவருக்கு 40 வயதிற்கு மேற்பட்ட வாழ்க்கை ஆரோக்கியமாக அமைய வாழ்த்துக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways To Stay Healthy After 40

Here are some ways to stay healthy after 40. Read on...