For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களோட 'இந்த' பழக்கம்தான் ஆபத்தான கொழுப்பு கல்லீரல் நோய் வருவதற்கு காரணமாம்... ஜாக்கிரதை!

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது அவசியம் என்றாலும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளைச் சேர்ப்பதும் அவசியம்.

|

நம் உடலிலுள்ள உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது. கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் என்பது உலகெங்கிலும் உள்ள கல்லீரல் நோய்களுக்கான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும்போது, கொழுப்பு கல்லீரல் நோய் உருவாகிறது. ஆரோக்கியமான கல்லீரலில் ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு உள்ளது. ஆனால் அந்த அளவு அதிகமாக இருந்தால், அது உடல்நல பிரச்சனையாக மாறும். உங்கள் கல்லீரலில் அதிகளவு கொழுப்பைக் கொண்டிருப்பது நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும் அபாயத்துடன் தொடர்புடையது.

These eating habits can increase your risk of fatty liver in tamil

இந்த சுகாதார நிலை கண்டறியப்படாமலோ அல்லது சிகிச்சையளிக்கப்படாமலோ விட்டுவிட்டால், அது சில தீவிர உடல்நல சிக்கல்களை உண்டாக்கும். சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விளைவை கூட ஏற்படுத்தும். சில உணவுப் பழக்கங்கள் உங்கள் கல்லீரலில் தீய விளைவுகளை ஏற்படுத்தலாம். கொழுப்பு கல்லீரலுக்கும் உங்கள் உணவுப் பழக்கத்துக்கும் உள்ள தொடர்பை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்னென்ன காரணங்கள்?

என்னென்ன காரணங்கள்?

உடல் பருமன் மற்றும் நீரிழிவு ஆகியவை கொழுப்பு கல்லீரல் நோய் பிரச்சினைக்கு வழிவகுக்கும் பொதுவான காரணிகளில் சில. இருப்பினும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆகியவை கொழுப்பு கல்லீரல் நோயின் அபாயத்தை மேலும் அதிகரிக்கின்றன. ஒரு ஆய்வின்படி, உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் அதிக ஆபத்து ஆகியவற்றுக்கு இடையே ஒரு நேர்மறையான தொடர்பு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.

உணவுப் பழக்கம்

உணவுப் பழக்கம்

நீங்கள் உட்கொள்ளும் உணவுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு உணவும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை என்றாலும், உங்கள் கல்லீரலை பாதிக்கும் சில உணவுகள் உள்ளன. அதை மனதில் வைத்து, கொழுப்பு கல்லீரல் நோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் இருந்தால், நீங்கள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டிய உணவுகளை முதலில் நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்

ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள்

இன்று மக்கள் சாப்பிட விரும்பும் பெரும்பாலான உணவுகளில் நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ளன. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வயதானவர்களை விட 12 முதல் 18 வயதுக்குட்பட்ட இளையவர்கள் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணம். இந்த நாட்களில் குளிர்ந்த காபியில் அதிக சர்க்கரை செறிவு உள்ளது, இது கொழுப்பு விரைவாக படிவதற்கு வழிவகுக்கிறது.

உணவில் புரதம் சேர்க்கப்படவில்லை

உணவில் புரதம் சேர்க்கப்படவில்லை

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது அவசியம் என்றாலும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளைச் சேர்ப்பதும் அவசியம். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பை சாப்பிடுபவர்களுடன் ஒப்பிடுகையில், புரதம் குறைவாக உள்ள உணவை உட்கொள்பவர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும் அபாயம் குறைவு எனத் தெரியவந்துள்ளது. லிவர் இன்டர்நேஷனல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், அதிக புரதம் மற்றும் கலோரிகளைக் குறைக்கும் உணவு உங்கள் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கண்டறிந்துள்ளது. கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க உங்கள் உணவில் புரதத்தை உட்கொள்வதை அதிகரிப்பது சிறந்தது.

பொரித்த மற்றும் பொதி செய்யப்பட்ட உணவு

பொரித்த மற்றும் பொதி செய்யப்பட்ட உணவு

கடைகளில் கிடைக்கும் பொரித்த உணவுகளை அதிகமாக உண்பது உங்களுக்கு மிகவும் பிடிக்குமா? ஆம். எனில், இந்த உணவுகள் உங்கள் கல்லீரலுக்கு சிறந்தவை அல்ல. உட்கார்ந்த வாழ்க்கை முறையும் சாப்பிடுவதற்குத் தயாராக இருக்கும், முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட, வறுத்த உணவுகளை சாப்பிடுவதற்கு வழிவகுக்கிறது. ஆனால் இவை அனைத்தும் கொழுப்பு கல்லீரல் நோய்க்கு வழிவகுக்கிறது. உண்மையில், கொழுப்பு, உப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால், கொழுப்பு நிறைந்த உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மோசமானவை.

தினமும் மது அருந்துவது

தினமும் மது அருந்துவது

அதிகப்படியான ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் உட்பட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கொழுப்பு கல்லீரல் நோயைத் தவிர்க்க, மது அருந்துவதைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகிறார். ஆல்கஹால் அதிகமாக உட்கொள்வது உங்கள் கல்லீரலில் கொழுப்புகளை உருவாக்க வழிவகுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது ஆல்கஹால் கொழுப்பு கல்லீரல் நோய் என்று அழைக்கப்படுகிறது. இவை தவிர, மது அருந்துதல், விரைவான எடை இழப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவை கொழுப்பு கல்லீரலுக்கு வழிவகுக்கிறது.

குறிப்பு: இந்த உணவுப் பழக்கங்கள் கொழுப்பு கல்லீரல் நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும் அதே வேளையில், உங்களுக்கு எது வேலை செய்கிறது மற்றும் எது செய்யாது என்பதை தெரிந்துகொள்ள உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These eating habits can increase your risk of fatty liver in tamil

Here we are talking about these eating habits can increase your risk of fatty liver in tamil.
Story first published: Tuesday, December 6, 2022, 15:30 [IST]
Desktop Bottom Promotion