Latest Updates
-
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது.. -
உடல் சூட்டைக் குறைக்கும் வெந்தய களி - இப்படி பாரம்பரிய முறைப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன?
நவகிரகங்களில் கேது மிகவும் முக்கியமான கிரகமாகும். பொதுவாக ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்கள் என்று அறியப்படுகின்றன. கேதுவின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கேதுபகவான் ஏப்ரல் 20, மாலை 4:49 மணிக்கு மக நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். கேதுவுன் இந்த நட்சத்திர மாற்றம் ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜோதிடத்தில் கேதுபகவான் ஆன்மீகம், பற்றின்மை மற்றும் விடுதலையுடன் தொடர்புடையது. பொதுவாக ஒரு தீய கிரகம் என்று அழைக்கப்பட்டாலும், அதன் பெயர்ச்சிகள் கர்ம பலன்களையும், மனமாற்றத்தையும் தூண்டும் என்று நம்பப்படுகிறது. இந்த நட்சத்திர மாற்றம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் கேது மக நட்சத்திரத்தின் ஆளும் கிரகமாகக் கருதப்படுகிறார். இந்த சக்திவாய்ந்த நட்சத்திர மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் மகத்தான நன்மைகளை அளிக்கப்போகிறது. அவர்கள் வாழ்வில் கேதுவின் அருளால் உச்சத்தை அடைய வேண்டிய நேரமிது. இப்போது உங்களின் நிதிநிலை வெகுவாக அதிகரிக்கும், கடந்தகால கடன் சுமைகளிலிருந்து விடுபடலாம். மற்றவர்கள் உங்ககளுக்கு மரியாதைக் கொடுப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும் காலம் இது.
கடந்த கால ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். பணியில் இருப்பவர்களுக்கு தொழில் துறையில் எதிர்பார்த்த உயர்வு இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு பிரகாசிக்கும். பரம்பரை சொத்துக்கள் உங்கள் கைக்கு வரும். புதிய வீடு, வாகனம், சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சிறப்பான வாய்ப்புகள் உருவாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இந்த நட்சத்திர மாற்றத்தை பிரகாசிக்கப்போகிறது. இந்த கிரக மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்களின் வருமான நிலைகள் உயர வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறலாம் மற்றும் அவர்களின் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைப் பெறலாம்.
மாணவர்களுக்கு, கேதுவின் ஆசீர்வாதம் கல்வியில் வெற்றியைக் கொடுக்கப்போகிறது மற்றும் போட்டித் தேர்வுகளை சிறப்பாக எழுதுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சினைகள் சுமூகமாக தீர்க்கப்படும். பழைய முதலீடுகள் உங்களுக்கு லாபத்தைக் கொடுக்கலாம், மேலும் வணிகர்கள் புதிய லாபம் தரும் ஒப்பந்தங்களை எதிர்பார்க்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையிலும் இழந்த நிம்மதியும், அமைதியும் திரும்பும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திர மாற்றம் அங்கீகாரத்தையும், முன்னேற்றத்தையும் கொண்டு வரக்கூடும். பல்வேறு திட்டங்களை சரியான நேரத்தில் முடிக்க அவர்களிடம் ஆற்றல் நிறைந்திருக்கும், மேலும் அதன்மூலம் பாராட்டுகளைப் பெறலாம். வேலையில், அவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும், மேலும் அவர்களின் கடின உழைப்பு சிறந்த பலன்களைத் தரும். பல்வேறு பணிகளை வெற்றிகரமாக முடிப்பதால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் .
கேதுவின் ஆசியால் மன ஆரோக்கியத்தில் சரியான கவனம் செலுத்துவதன் மூலம், அவர்கள் அனைத்து தீய எண்ணங்களையும் கடந்து வாழ்க்கையில் சரியான சமநிலையைக் காணலாம். குடும்ப வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை இருக்கும், மேலும் அவர்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடலாம். உடல்நல பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












