Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
வீட்டுல காய்கறி இல்லையா? 1 கைப்பிடி கறிவேப்பிலை இருந்தா.. இப்படி செய்யுங்க.. செமயா இருக்கும்..
Karnataka Style Karuveppilai Thambuli Recipe In Tamil: வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. இனிமேல் காரமாக சாப்பிட பலருக்கும் பிடிக்காது. உடலுக்கு குளிர்ச்சியூட்டும் வகையில், அதே சமயம் சமையலறையில் நீண்ட நேரம் இருக்காமல், சிம்பிளாக செய்யக்கூடிய ரெசிபிக்களையே சமைத்து சாப்பிட விரும்புவோம்.
அதுவும் தயிர், மோர் என்று அதிகம் உணவில் சேர்ப்போம். இப்படி வெறும் தயிர், மோரை சாப்பிடுவதற்கு பதிலாக, அவற்றைக் கொண்டு தம்புளி செய்யுங்கள். இந்த தம்புளி செய்ய காய்கறிகள் எதுவும் தேவையில்லை. 1 கைப்பிடி கறிவேப்பிலையும், மோரும் இருந்தால், கர்நாடகா ஸ்டைல் கறிவேப்பிலை தம்புளியை செய்து சாப்பிடுங்கள்.

உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் கறிவேப்பிலை தம்புளியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா ஸ்டைல் கறிவேப்பிலை தம்புளி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - சிறிது
* மோர் - 1 கப்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெயை
ஊற்றி சூடானதும், 1 கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து வறுக்க
வேண்டும்.
* பின் அதில் சீரகம், பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து நன்கு
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் 1 கப் மோரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,
தம்புளியுடன் சேர்த்து கலந்தால், சுவையான கறிவேப்பிலை தம்புளி
தயார்.



Click it and Unblock the Notifications