Latest Updates
-
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...!
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா?
இளைஞர்களின் காதல் ட்ரெண்டுகள் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் மாறி வருகிறது. அந்த வகையில் தற்போது 2K கிட்ஸ்களிடையே பிரபலமாகி வரும் காதல் ட்ரெண்டுதான் "Slow Dating". டேட்டிங் என்பதன் அர்த்தம் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது நீங்கள் ஒரு உண்மையான உறவைத் தேடுகிறீர்கள் என்றால் Slow Dating உங்களுக்கு சரியானதாக இருக்கும்.
Slow Dating என்பது இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது, இந்த டேட்டிங் முறையில் இளைஞர்கள் அனைத்து விஷயங்களையும் மெதுவான வேகத்தில் எடுத்துக்கொள்கிறார்கள், ஒருவரை மதிப்பிட போதுமான நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள், ஒருவருக்கொருவர் நேரத்தை அதிகம் செலவிடுகிறார்கள், ஒருவருக்கொருவர் நன்கு புரிந்துகொள்கிரார்கள், அதன்பின்னர் சீரியஸான உறவில் இணைகிறார்கள். அவர்களுக்கு அந்த உறவு செட்டாகாது என்று நினைத்தால், எந்தவிதமான வெறுப்புகளும் இல்லாமல் தெளிவாக பேசி அதிலிருந்து அந்த உறவிலிருந்து வெளியேறுகிறார்கள். இந்த Slow Dating முறையின் சிறப்புகள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொறுமையை கற்றுக்கொடுக்கிறது
Slow Dating உறவில் ஈடுபடும் இருவருமே, தங்கள் டேட்டிங் மற்றும் தங்கள் துணையைப் பற்றி தெரிந்துகொள்ளும் கட்டங்களில் பொறுமையைக் கடைபிடித்து, உறுதிமொழிகளுக்காக அவசரப்படாமல், தங்கள் காதல் இயல்பாகவே அடுத்தக் கட்டத்திற்கு செல்ல வழிவகுக்கின்றனர்.
இது புத்திசாலித்தனமான முடிவை எடுக்க உதவுகிறது
நீங்கள் Slow Dating செய்யத் தொடங்கும்போது, அது நீங்கள் போதுமான நேரத்தை எடுத்துக்கொள்ள உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொள்ளலாம், அதிக நேரம் செலவிடலாம், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் ஒன்றாக சேர்ந்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கலாம். Slow Dating செயல்முறைக்கு 1 முதல் 3 மாதங்கள் வரை ஆகும், அந்த நேரத்தில் உங்கள் துணையை அறிந்துகொண்டு அவர்களுடன் சீரியஸான உறவில் இணைவதற்கு முன்பு நீங்கள் அவர்களைப் புரிந்துகொள்வீர்கள்.
இது நம்பிக்கைக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது
நம்பிக்கையான உறவை உருவாக்குவதற்கு போதுமான நேரமும், முயற்சியும் தேவை, ஏனெனில் நம்பிக்கையை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது. Slow Dating-ல் நீங்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளும்போது, அவர்களைப் பற்றி உண்மையாக புரிந்து கொள்ள தொடங்குகிறீர்கள், உங்களின் தனித்தன்மைகளையும் பழக்கவழக்கங்களையும் தெரிந்து கொள்கிறீர்கள் மற்றும் நம்பிக்கையை வளர்க்கிறீர்கள்.
டேட்டிங்கைத் தொடர எந்த அழுத்தமும் இல்லை
நீங்கள் Slow Dating-ல் ஈடுபடும்போது அதில் எந்த அழுத்தமும், எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. நீங்கள் ஒரு துணையைக் கண்டுபிடித்து அவர்களுடன் பழகத் தொடங்கினாலும், உங்களுக்கு செட்டாகவில்லை என்றால், அவர்களுடன் இருக்க எந்த அழுத்தமும் இருக்காது, மேலும் நீங்கள் எதிர்பார்த்தபடி விஷயங்கள் நடக்கவில்லை என்பதை அவர்களிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கலாம். Slow Dating உங்களை அழுத்தம் மற்றும் எதிர்பார்ப்புகளிலிருந்து காப்பாற்றும்.
ஆழமான உணர்ச்சிகளை அளிக்கிறது
இந்த டேட்டிங் முறை பெரும்பாலும் ஆழ்ந்த உணர்ச்சி நெருக்கத்திற்கு வழிவகுக்கும், ஏனெனில் இந்த டேட்டிங் உறவில் உள்ளவர்கள் தங்கள் உண்மையான முகத்தை வெளிப்படுத்தவும், தங்கள் எண்ணங்கள், அச்சங்கள் மற்றும் கனவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் போதுமான நேரம் கிடைக்கும். ஒரு ஆரோக்கியமான உறவிற்கு உணர்ச்சிரீதியான நெருக்கம் என்பது மிகவும் அவசியமானதாகும்.
எந்தவித நாடகமும் இருப்பதில்லை
நீங்கள் Slow Dating-ல் ஈடுபடத் தொடங்கும்போது, நீங்கள் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளத் தொடங்குவதால், நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை உருவாக்காமல் இருப்பதால், எந்தவித நாடகமும் இருப்பதில்லை. Slow Dating நம்பிக்கையை அதிகரிக்கிறது, மேலும் எந்த நாடகத்தையும் உருவாக்காமல் உங்களை காதல் உறவில் பிணைக்க உதவுகிறது.
உங்கள் வாழ்க்கையை மாற்றும் நீண்டகால காதல் உறவில் ஈடுபடுவதற்கு முன், எந்தவொரு முடிவடையும் எடுப்பதற்கு முன் போதுமான நேரத்தை எடுத்துக் கொள்வது அவசியம். Slow Dating இதற்கான சரியான வாய்ப்பைக் கொடுக்கிறது.



Click it and Unblock the Notifications












