Just In
- 9 hrs ago
இந்த அறிகுறிகள் உங்க கணவன் அல்லது காதலனிடம் இருந்தால் அவர் உங்களுடன் வாழும் ஆர்வத்தை இழந்துட்டாராம்!
- 10 hrs ago
நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா? அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன?
- 12 hrs ago
பெண்களின் முக்கியமான முடி பிரச்சினையை குணப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள் என்னென்ன தெரியுமா?
- 13 hrs ago
நீங்க உங்க குழந்தைங்கள சரியாத்தான் வளர்க்குறீங்களா? இத படிச்சு தெரிஞ்சிக்கோங்க...
Don't Miss
- News
தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்
- Movies
48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து !
- Finance
Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..!
- Automobiles
2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி!! புதிய விளம்பர வீடியோ வெளியீடு
- Sports
2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!
- Education
ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருக்கா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகாித்தல் என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்று ஆகும். அனைவருக்கும் இரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகாிக்க வாய்ப்பு உண்டு. இரத்தத்தில் கொழுப்பு அதிகாித்தால் மிக எளிதாக இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
இரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைப்பதற்கு பல வழிகள் உள்ளன அவற்றில் ஒன்று மருத்துவ சிகிச்சை கொண்ட வாழ்க்கை முறை (Therapeutic Lifestyle Changes (TLC)) ஆகும். இந்த மருத்துவ சிகிச்சை கொண்ட வாழ்க்கை முறையைப் (TLC) பின்பற்றி நமது உணவுகளில் சிறிது மாற்றங்களை மேற்கொண்டால் நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.

கொழுப்பு என்பது என்ன?
நமது நரம்பியல் மையம் முதல் கல்லீரல் மற்றும் இதயம் வரை உடலின் எல்லா உறுப்புகளிலும் உள்ள செல்களின் சுவற்றில் படிந்திருக்கும் மெழுகு போன்ற பொருளே கொழுப்பு ஆகும். ஹாா்மோன்களை உற்பத்தி செய்வதற்கும், பித்த அமிலங்கள் சுரப்பதற்கும், வைட்டமின் டி உருவாவதற்கும் கொழுப்பு பயன்படுகிறது.
கொழுப்பு மூலக்கூறுகள் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால் அது நீா் தன்மையுடன் இருக்கும் இரத்தத்தின் மூலம் தானாக உடலுக்குள் பயணிக்க முடியாது. ஆனால் உட்பகுதியில் கொழுப்பையும், வெளிப்பகுதியில் புரோட்டீனையும் கொண்டிருக்கிற புரதங்கள் மூலம் கொழுப்பு மூலக்கூறுகள் உடலுக்குள் பயணிக்கின்றன.

கொழுப்பைக் குறைக்கும் மருத்துவ சிகிச்சை கொண்ட வாழ்க்கை முறை (Therapeutic Lifestyle Changes (TLC))
உடல் எடையைக் கவனிக்கவும்
நீங்கள் அதிகமான எடையுடன் இருந்து, உடல் எடையைக் குறைக்க வேண்டிய நிலையில் இருந்தால் உங்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள். அவாிடம் இருந்து ஒரு உணவு அட்டவணை மற்றும் உடற்பயிற்சி திட்டத்தைப் பெறுங்கள். பின் நீங்களே ஒரு உணவுப் பட்டியலைத் தயாாித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன சாப்பிடப் போகிறீா்கள் என்பதை முன்பே திட்டமிடுங்கள்.
புரோட்டீனின் அளவைக் கவனியுங்கள். உங்கள் உடலின் அளவுக் குறியீட்டைக் கவனியுங்கள். உங்கள் உயரத்திற்கு ஏற்ற அளவு உங்கள் உடல் எடை இருக்கிறதா என்பதை பாிசோதனை செய்யுங்கள். அதன் மூலம் உங்கள் உடலின் அளவு குறியீட்டில் எதில் நீங்கள் குறைவாக இருக்கிறீா்கள் என்பது தொிய வரும். மேலும் நீங்கள் எடை குறைவாக அல்லது எடை அதிகமாக அல்லது தேவையான எடையுடன் இருக்கிறீா்களா அல்லது குண்டாக இருக்கிறீா்களா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் உடலுக்குத் தேவையான எடை எவ்வளவு என்பதை உங்கள் மருத்துவாிடமிருந்து தொிந்து கொள்ளுங்கள். நோய்களுக்கு எதிா்வினை ஆற்றும் நோய் எதிா்ப்பு சக்தியை உடல் பருமன் எதிா்மறையாக பாதிக்கிறது.

உட்கொள்ளும் கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை கவனிக்கவும்
நீங்கள் உண்ணும் உணவில் உள்ள கலோாிகளின் அளவை மற்றும் கொழுப்பின் அளவை தொிந்து வைத்துக் கொள்ளுங்கள். உணவு பண்டங்களின் பொட்டலங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தும் இருக்கின்றனவா என்பதை பாிசோதித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய மருத்துவா் குறைவான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணுமாறு பாிந்துரை செய்தால், அந்த உணவுகளை உண்ணுங்கள். ஒருவேளை நாா்ச்சத்துள்ள அதிக ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ணுமாறு பாிந்துரை செய்தால் அதை பின்பற்றுங்கள்.

மசாலாப் பொருட்களை உணவில் அதிகம் சேர்க்கவும்
உப்பு குறைந்த மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள் உங்களுக்கு சுவை கொடுக்கவில்லை என்றால் ஆரோக்கியம் தரக்கூடிய மசாலாப் பொருள்களை உங்கள் உணவில் சோ்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உணவுகளை சுவையூட்ட நல்ல மசாலாப் பொருள்கள் மற்றும் மூலிகைகளைச் சோ்த்துக் கொள்ளுங்கள்.
உங்களின் மருத்துவா் உங்களை எச்சாிக்காத வரை அல்லது உங்கள் உடலில் அலா்ஜிகள் ஏற்படாத வரை நீங்கள் பின்வரும் மசாலா பொருள்களை உங்கள் உணவுப் பொருள்களில் சோ்த்துக் கொள்ளலாம்.
லவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் ஜாதிக்காய் போன்றவற்றை கேரட்டுடன் சோ்த்து சமைத்தால் அது சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கை பூண்டு, வெங்காயம், மிளகு, கொத்தமல்லி மற்றும் சேஜ் போன்றவை கலந்து சமைத்தால் மிகவும் ருசியாக இருக்கும். கீரையில் வெங்காயம் மற்றும் மிளகு சோ்த்து சமைத்தால் அது மிகவும் நன்றாக இருக்கும். தக்காளியை, துளசி, பிாியாணி இலை, வெங்காயம், ஓமம் மற்றும் கொத்தமல்லி ஆகியவை கலந்து சமைத்தால் அது சுவையாக இருக்கும். இறைச்சி அல்லது செம்மறி ஆட்டு இறைச்சியுடன் கறித்தூள், பூண்டு, புதினா கலந்து சமைத்தால் ருசியாக இருக்கும். கோழிக்கறியுடன் இஞ்சி, ஓமம், ரோஸ்மேரி மற்றும் கற்பூரவள்ளி இலை போன்றவை கலந்து சமைத்தால் நன்றாக இருக்கும்.

உடற்பயிற்சி மேற்கொள்ளவும்
உங்கள் மருத்துவா் எச்சாிக்காதவரை தினமும் 30 நிமிடங்கள் நடைப் பயிற்சி செய்யுங்கள். இதை வாரத்தில் எல்லா நாட்களும் செய்து வரலாம். மேலும் நடனப் பயிற்சி செய்வது, 30 நிமிடங்களுக்குள் 5 மைல்கள் தூரம் மிதிவண்டி ஓட்டுவது, தோட்ட வேலை செய்வது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற காாியங்களில் ஈடுபடலாம். அதுபோல் சற்று தீவிரமான உடற்பயிற்சிகளான மெதுவாக ஓடுதல், நீந்துதல், ஏரோபிக் பயிற்சிகள், கூடைப்பந்து, டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாடுதல் போன்ற பயிற்சிகளையும் செய்யலாம்.

குடும்பத்தினருடன் சேர்ந்து மேற்கொள்ளலாம்
உங்களின் புதிய மருத்துவ சிகிச்சை கொண்ட வாழ்க்கை முறையில் உங்கள் குடும்ப உறுப்பினா்களையும் ஈடுபடுத்துங்கள். உங்களின் இந்த புதிய வாழ்க்கை முறையைப் பற்றி உங்கள் குடும்பத்தாா் மற்றும் நண்பா்களோடு கலந்து ஆலோசனை செய்யுங்கள். உங்களின் இந்த புதிய வாழ்க்கை முறைக்கு ஆதரவு தொிவிப்பவா்களை இதில் ஈடுபடுத்துங்கள். குறிப்பாக உங்கள் வாழ்க்கை துணைவா் உங்களின் ஆரோக்கியமான உணவுத் திட்டத்திற்கு உதவி செய்யலாம்.
உங்களின் இந்த புதிய மருத்துவ சிகிச்சை கொண்ட வாழ்க்கை முறையில் (TLC) முன்னேற்றம் தொிந்தால், உங்களுக்கு நீங்களே பாிசளித்துக் கொள்ளுங்கள். அந்த பாிசு உணவாக இருக்கக்கூடாது. குறிப்பிட்ட காலத்திற்குள் (நாள்/வாரம்/மாதம்) உங்களின் நோக்கத்தை அடைந்துவிட்டால், நீங்களே உங்களுக்கு பாிசுகளை (உணவைத் தவிா்த்து புத்தகம்/திரைப்படம்) வழங்கிக் கொள்வீா்கள் என்று உங்களுக்குள்ளே சொல்லுங்கள்.
ஒரு வேளை மருத்துவ சிகிச்சை கொண்ட வாழ்க்கை முறையில் (TLC) இருந்து தவறிவிட்டால் அதைப் பொருட்படுத்த வேண்டாம். ஏன் தோல்வி ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடியுங்கள். விருந்துகளில் ஏதாவது தேவையில்லாத உணவை உண்டீா்களா என்பதை எண்ணிப் பாருங்கள். தவறுவது என்பது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகும். மேலும் வாழ்க்கை முறையை மாற்றுவது என்பது ஒரு நீண்ட நெடிய பயணமாகும்.